Announcement

Collapse
No announcement yet.

சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

    சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன் - 2




    குரு அவனுடைய ஆத்மஞான வேட்கையை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
    உள்ளூற அவர் அவனை ஆசீர்வதித்து, அவனுடைய கோத்திரத்தை வினவினார்.
    அவனுக்குக் கோத்திரம் தெரியாதாகையால், அவனுடைய தாய்சொன்னதை அப்படியே
    குருவிடம் ஒப்புவித்தான். அதைக்கேட்டு, ரிஷிபரம்பரையிலும், தேவர்கள் பரம்பரையிலும்
    வழித்தோன்றலாக வந்த மற்ற ஆசிரமவாசிகள், பரிகாசத்தோடு அவனைப் பார்த்தார்கள்.
    கெளதம ரிஷி அவனுடைய நிலையை அறிந்து அவன்மீது தன் அருள் பார்வையைத் திருப்பினார்.
    அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தின் மீது அவன் வைத்திருந்த
    விசுவாசத்தை விளக்கியது. ஸத்தியகாமனிடத்திலிருந்த தூய்மையையும் சாந்தியையும்
    நேர்மையையும் கண்டு அம்முனிவர் மகிழ்ச்சி அடைந்தவராக அவனை அழைத்துக்
    கூறியதாவது– “உண்மையை தெளிவுபடக்கூறிய உன்னை பிராம்மணன் அல்ல என்று
    சொல்வது தகுதியன்று. சத்தியமே பிரம்மம். சத்தியத்தைப் பின்பற்றுபவர்கள் பிரம்மத்தை
    அறியத் தகுதி உடையவர்களாகிறார்கள். பிரம்மத்தை அறிபவன் பிராம்மணன் ஆகிறான்.
    சத்தியவந்தனாகிய நீ பிராம்மணன் ஆவாய். நாளை உனக்குப் பிரம்ம நாட்டத்துக்கு
    முதல்படியாக இருக்கும் பிரம்மசரிய தீட்சை செய்து வைப்பேன்.”


    மறுநாள் ஸத்தியகாமன் பிரம்மசரிய தீட்சை செய்து வைக்கப்பட்டான். அதற்குப்
    புறச் சின்னமாக முப்புரிநூலும் அணிவிக்கப்பட்டான். அவனுடைய தாயின் ஆசீர்வாதம்
    அவனுக்கு நன்கு பயனளிக்க ஆரம்பித்தது. வேதத்தைக் கற்று பிரம்ம ஞானம் பெறவேண்டும்
    என்ற நீண்டகால அவனுடைய அவா பூர்த்தியாயிற்று. இந்த மேலான வாழ்வில் என்னை வழுவாது
    அழைத்துச்செல்வாயாக என்று அக்கினிதேவதையைப் பிரார்த்தித்துக் கொண்டான்.


    உபநயனத்துக்குப் பின்பு குரு, ஸத்தியகாமனிடம் நானூறு பசுக்களை ஒப்படைத்தார்.
    அந்நானூறு பசுக்களும் ஆயிரம் பசுக்களாகப் பெருகியபின்தான் திரும்ப வேண்டும் என்று
    விண்ணப்பித்தார். ஸத்தியகாமனும் மகிழ்ச்சியோடு இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
    ஏராளமான புல்லும் நல்ல தண்ணீரும் அகப்படும் இடத்தைக் கண்டுபிடிக்க காட்டுக்குள்
    வெகுதூரம் அவற்றை ஓட்டிச் சென்றான். நல்லதொரு இடத்தையும் கண்டான்.
    பசுக்களுக்கு நல்ல உணவும் நீரும் அவ்விடத்தில் அகப்பட்டதோடு, தியானத்திற்கு
    மிகப் பொருத்தமான இடமாகவும் அது அமைந்திருந்தது. அமைதியும் தனிமையும் நிறைந்த
    அந்த இயற்கைச் சூழ்நிலையில் இறைவனோடு உள்ளத்தை ஈடுபடுத்த ஸத்தியகாமனுக்குச்
    சுலபமாக இருந்தது. குரு உபதேசித்தபடி ஸத்தியாகாமன் தவவாழ்வு வாழ ஆரம்பித்தான்.
    நாள்தோறும் அக்கினி வழிபாடு தவறாது செய்துவந்தான். பசுக்கூட்டத்தைப் பராமரிப்பதில்
    அவன் சிறிதும் சளைக்காதவனாக இருந்தான். அவனுடைய நேர் பராமரிப்பில் பசுக்கூட்டம்
    பெருக ஆரம்பித்தது.


    நாள்கள் மாதங்களாகவும், மாதங்கள் ஆண்டுகளாகவும் விரிந்து கொண்டே போயின.
    ஸத்தியகாமன் காலத்தைக் கருத்தில் வாங்காது கடும் தவவாழ்வில் ஈடுபட்டு இருந்தான்.
    ஆரம்பத்தில் அடிக்கடி தாயினுடைய ஞாபகமும், வீட்டு ஞாபகமும் அவன் தவத்துக்கு
    இடையூறாக இருந்தன. நாளடைவில் அவ்வெண்ணங்கள் அவன் மனதை விட்டு முற்றும்
    அகன்றன. இவ்வுலக விஷயங்களிலிருந்து அவன் மனது விலக விலக புதிய தவவாழ்க்கையில்
    அவன் மனது முற்றும் ஈடுபட ஆரம்பித்தது. பிரார்த்தனை, தியானம் அவன் புதுவாழ்வில்
    முக்கிய அம்சங்களாக இருந்தன. மலையினின்று வீசிய மந்தமாருதமும்,
    யக்ஞத்துத் தோற்றுவித்த நெருப்பும் அவனுக்கு நண்பர்களாக இருந்து அவனோடு
    உரையாடி வந்தன. ஒருநாள் வாயுபகவான் அவனிடமிருந்த பெரிய பசுவின் வாயிலாக
    அவனுக்குச் சொன்னதாவது– “ஸத்தியகாம, பசுக்கள் ஆயிரமாகப் பெருகிவிட்டன.
    அவைகளை அவைகளுடைய தலைவரிருக்கும் ஆச்ரமத்திற்கு ஓட்டிச் செல்லலாம்.”


    continue......
Working...
X