Announcement

Collapse
No announcement yet.

ராம நாமம் ஒரு வேதமே!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராம நாமம் ஒரு வேதமே!

    கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள்
    ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சதர், ஸ்ரீ ஸ்யாமா சாஸ்த்திரி ஆவர்.

    இதில் ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில்
    அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும். அன்றைய தினம்
    பெரிய சங்கீத மேதைகள்
    அவர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.
    அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடக்கும்.

    அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் அவர் தன் ஐந்து வயதிலிருந்தே
    ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார். சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார்.
    ஒரு சமயம் அவர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.
    அப்போது ஒரு இடத்தில் ஒரே கூட்டம், என்னவென்று விஜாரித்ததில்
    ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான் என்று தெரிய வந்தது.
    அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன் அங்கிருக்கும்
    ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள்சென்று
    இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான். ஆனால் அந்தக் கோவில்
    உள்ளே தாழிடப்பட்டிருந்தது.
    என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருக்கும்
    மதில் மேல் ஏறி உள்ளே குதித்து, பின் உள் இருக்கும் தாழ்பாளைத் திறக்கலாம்
    என்று எண்ணி உள்ளே குதித்தான். அவ்வளவுதான் டம் என்ற சத்தத்துடன்
    கிணற்றில் விழுந்து விட்டான். நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனான்.
    அவள் மனைவி வாசலில்
    தன் கணவன் இவ்வளவு நாழியாகியும் வெளியில்
    வரவில்லையே என்று கவலையுடன் அழுது ஊரைக் கூட்டினாள்.
    எல்லோரும் கோவில் உள்ளே தேடி பின் அவனை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.
    அவன் கழுத்தில் துளசி மாலை இருந்தது. அவன் சிறந்த விஷ்ணு பகதன்
    என்று தியாகராஜஸ்வாமிக்குத் தெரிந்து,

    பின் “நா ஜீவோ தாரா”என்று தெலுங்கில் ஒரு பாட்டு, அதாவது அந்த மனிதனின்
    உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார். அந்த உயிர் போன மனிதன்
    உறங்கி எழுந்தவன் போல உயிர் பெற்று நின்றான். என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை!

    இப்போது புரிகிறதா? “ராம நாமம்” ஒரு சிறந்த மந்திரம் இதை
    எப்போதும் ஜபிக்கலாம்.
    படுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனி.
    வாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே..!

Working...
X