Announcement

Collapse
No announcement yet.

Rama bhakti

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rama bhakti

    courtesy:Sri.Mayavaram Guru
    *ராம பக்திக்கு எத்தனை வலிமை* என்பதை நினைவு படுத்த இந்த பதிவு
    ராமபிரான் தடம் பதித்த பாதையில்..
    ராமரின் பாதையில் என்ற தொடர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பானது..
    வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் கூறினார்..
    எனது நினைவில் நின்ற அந்த கருத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்..
    இது சம்பந்தமாக சிடியும் வெளியிட்டுள்ளார்கள்..
    வட பாரதத்தில் காட்டுப் பகுதியில் ஓர் இடம் இருந்தது..
    அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், கால் நடையாகத்தான் போய் பார்த்துவிட்டு வர முடியும் என்ற நிலையில் நாங்கள் 50 பேருக்கு மேல் இருந்தோம்..
    அப்பகுதி மலை வாசிகளிடம் விபரம் கேட்டு அப்பகுதியை பார்க்க புறப்பட்டோம்..
    போய் தரிசித்துவிட்டு வரும்போது அந்த கிராம வாசிகளின் தலைவராக இருப்பவர், மாலை இருள் சூழ்கிறது..
    இந்தப் பகுதியில் ஒரு சுருக்குப் பாதை இருக்கிறது அதன் வழியாக போய்விடலாம்..
    ஆற்றில் இறங்கி நடந்தால் நேரமாகிவிடும்.. என்றார்..
    சரி என அவர் பின்னால் நடந்தோம்..
    ஒரு குறுகலான பாதை..
    அதன் பிறகு ஒரு சிறிய மரப்பாலம்.. போன்று இருந்தது..
    அதன் மீது ஏறி சென்றோம்..
    எல்லோரும் அடுத்த கரையை கடக்கும்போது.. குழுவில் இருந்த ஒருவர்.. நினைவு வந்தவராக..
    நாம் வரும்போது ஆற்றில் எதுவும் பாலம் இருப்பதாக தெரியவில்லையே.. இப்போது எப்படி என்று?! என்று உரக்கக்கேட்டுவிட்டார்.. எல்லோருக்கும் அப்போதுதான் நினைவும் வந்தது..
    திரும்பிப் பார்த்தால்...
    நாங்கள் வந்த அந்த பாலத்தையே காணவில்லை..
    எல்லோருக்கும் வியப்பு..
    அந்த கிராமத்து தலைவர்..
    சிரித்துக்கொண்டே கூறினார்..
    உங்கள் நினைவு சரிதான்..
    இங்கு பாலம் இல்லை.. என்றார்..
    இன்னமும் ஆச்சர்யம்..
    என்ன கூறுகிறீர்கள்.. நாங்கள் பாலத்தின் மீதுதானே நடந்துவந்தோம்.. என்று கோரஸாக கூறினர்..
    அவர் நிதானமாக கூறினார்..
    இது ஆற்றின் குறுகிய இடம், நீங்கள் விரைவாக செல்ல எங்கள் கிராமத்தினர் *அந்த இடத்தில் தங்கள் தலைக்குமேல் மரத்தடுப்பு ஒன்றை பிடித்து நின்றனர்..*
    *நீங்கள் அனைவரும் அதில் தான் ஏறி வந்தனர்..*
    இந்தப் பக்கம் வந்தவுடன் அவர்கள் அனைவரும் அதனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.. என்றார்..
    எல்லோரும் பிரமை பிடித்தவர்கள் போல.. அசந்து விட்டனர்..
    என்ன எங்களை தலையில் சுமந்து நின்றனரா? என்றனர்..
    நீங்கள் ராமரின் பாதம் பட்ட அந்த புனித இடத்தை தரிசிக்க தென்கோடியிலிருந்து வந்திருக்கும் ராம பக்தர்கள் உங்களை சுமப்பதில் எங்களுக்கு பெரும் பாக்கியம் என்றார்..
    *நாம் பூஜை செய்கிறோம்.. பக்தி செய்கிறோம்.. தானம் தருகிறோம்.. என்று நாம் செய்யும் பக்தி காரியத்திற்கு எவ்வளவு அகங்காரம் கொள்கிறோம்..* அந்த கிராமத்தினரோ.. *ராம பக்தரின் பாத துளிகூட பரம பவித்திரம*் என்று நினைக்கும்போது.. என எல்லோரும் மனதிற்குள் உடைந்து போயி.. *கண்களில் தாரைதாரையாக கண்ணீர் விட்டனர்..*
    ஒவ்வொருவரம் கையில் எத்தனை தொகை வைத்திருந்தனரோ.. அதனை அந்த கிராமத்துத் தலைவருக்குக் கொடுத்தனர்.. அவர் வாங்க மறுத்தார்..
    இது உங்கள் கிராமத்தினருக்கு வேண்டியதை செய்ய நாங்கள் தரும் காணிக்கை என்றவுடன்..
    வேறு வழியின்றி வாங்கிக் கொண்டார்...
    எத்தனை பெரிய பக்தி..
    *இன்றும் ராம பக்திக்கு ஈடு இணை உண்டோ?!*
    *ராம் ராம் ராம் ராம்*
    *ராம் ராம் ராம் ராம்*
    *ராம் ராம் ராம் ராம்*
    உங்க மனச்சாட்சி தூங்கிக் கொண்டு இருக்கிறது என்று நினைத்து தவறுகளை செய்யாதீர்கள்.... பிறகு அது மட்டும் விழித்துக் கொண்டால் உங்களால் வாழ்க்கை முழுவதும் தூங்க முடியாது. ஆதலால் வாழும் இந்த குறுகிய காலத்தில் முடிந்தவரை தவறு செய்யாதிருக்க முயலுங்கள், பிறர்இடத்தில் அதிகம் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கை ரொம்பவே ஆனந்தமாக அமையும்.
Working...
X