Announcement

Collapse
No announcement yet.

Housefly worshipping Shiva

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Housefly worshipping Shiva

    சிவனை ஈயாய் வந்து வழிபட்டவர்


    திருச்சி மாவட்டம்,தொட்டியம் வட்டத்தில் உள்ள மணமேடு எனும் இடத்தில் திருஈங்கோய்மலை உள்ளது. இத்தலத்தின் பெருமை அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.


    ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஏற்பட்ட போட்டியில் ,இருவரில் யார் பலசாலி என்று நிரூபிப்பதற்காக ,தங்களுக்குள் ஒரு போட்டி வைத்துக்கொண்டார்கள். ஆதிசேஷன் மேருமலையைச் சுற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும், வாயுதேவன் வேகமாக வீசி, அவரை விலக்கவேண்டும், அந்த மலையைத் தகர்க்கவேண்டும்.


    இதன்படி, ஆதிசேஷன் மேருவைப் பிடித்துக்கொண்டார். வாயுதேவன் தன்னால் இயன்ற அளவு வலுவுடன் காற்றைச் செலுத்த ஆரம்பித்தார். இந்தப் போட்டியின்போது, மேருமலையிலிருந்து சில துண்டுகள் உடைந்து வெவ்வேறு பகுதிகளில் விழுந்தன.


    அந்த மலைகள் ஒவ்வொன்றிலும், அற்புதமான லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார் சிவபெருமான். அப்படி விழுந்த ஒரு இடத்தில், சிவபெருமான் மரகதாலேஸ்வர் என்ற பெயரில் அருள் செய்கிறார். மரகத மலையாக சிவன் எழுந்தருளியிருக்கும் திருத்தலம் இது. திருஈங்கோய்மலை என்று இதனை அழைப்பார்கள்.


    ஏனென்றால்,இங்குள்ள மரகத லிங்கத்தை வழிபடுவதற்காக, அகத்தியர் வந்திருந்தார். ஆனால், அந்த நேரத்தில் கோயில் மூடப்பட்டிருந்தது. இதைக் கண்ட அவர் மிகவும் வருந்தினார். தான் இறைவனைத் தரிசிக்க வழி இல்லையா என்று ஏங்கினார். அப்போது, அங்கே ஓர் அசரீரி ஒலித்தது.அது மலையடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால் என்னைத் தரிசிக்கலாம் என்று.


    அகத்தியர் மகிழ்ச்சியுடன் அந்தத் தீர்த்தத்தைத் தேடிச் சென்றார். சிவபெருமான் நாமத்தை உச்சரித்தபடி அதில் நீராடினார். மறுகணம், அவர் ஓர் ஈ வடிவம் எடுத்தார். மலைமீது பறந்து சென்று, கோயில் கதவின் சாவித்துளை வழியே நுழைந்து இறைவனை வழிபட்டார். ஆகவே, இந்தத் திருத்தலத்துக்கு ஈங்கோய்மலை என்ற பெயர் அமைந்தது என்பது ஐதீகம்.


    இதனால் சிவபெருமானுக்கு ஈங்கோய்மலையார் என்ற அழகிய பெயர் அமைந்தது. பக்தர்களும் இம்மலையைத் தேடி வந்து மரகதாலேஸ்வரரை வழிபடுகிறார்கள்.


    இந்த மலைக்கு சிவசக்திமலை என்ற பெயரும் உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், பிருகு முனிவர் சிவபெருமானையே உயர்ந்த தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்தார். ஆனால், அவரருகே இருந்து அருள்மழை பொழியும் அம்மையை அவர் வணங்கவில்லை. சக்தியின் பெருமையை இந்த உலகம் அறியவேண்டும் என்று சிவபெருமான் எண்ணினார். அதற்காக, தன்னுடைய உடலின் ஒரு பகுதியை அம்பாளுக்குக் கொடுத்தார், அர்த்தநாரீஸ்வரர் ஆனார். தன் உடலில் பாதியாக உமையம்மையை ஏற்றுக்கொண்டதால் சிவபெருமானுக்கு இந்தத் திருப்பெயர் அமைந்தது.


    சிவனில் பாதி , சக்தி என்றால், பக்தர்கள் சிவனை மட்டும் வணங்க இயலாது, சிவனை வணங்கும்போது சக்தியையும் வழிபட வேண்டுமே. உலகின் இயக்கத்தில் அம்மைக்கும் அப்பனுக்கும் சம பங்கு உண்டு, அவர்களுடைய அருளைப் பூரணமாகப் பெறுவதே நலம் என்பதை உணர்த்துவதே சிவசக்தி வடிவம். அவ்வாறு அம்பாளுக்குத் தன் உடலின் ஒரு பகுதியைத் தருவதாக சிவபெருமான் உறுதியளித்த இடம், இந்தத் திருஈங்கோய்மலை. ஆகவே, இதை சிவசக்திமலை என்றும் அழைக்கிறார்கள்.
Working...
X