Announcement

Collapse
No announcement yet.

Stone elephant eating sugarcane

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Stone elephant eating sugarcane

    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    **சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(152-வது நாள்.)*
    21--வது படலம்.
    *திருவிளையாடல் புராணத் தொடர்.**
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    *கல்யானை கரும்பு தின்றது.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    அன்று தை மாதப் பிறப்பு.


    அதிகாலையில் எழுந்த பாண்டியன் பொற்றாமரையில் நீராடி, இறைவனை தரிசிக்க கோயிலுக்குள் வந்தான்.


    கட்டியம் கூறும் ஏவலர்கள் பிரகாரத்தில் வழிமறித்தாற் போல் அமர்ந்திருந்தார் சித்தர்.


    ஏவலர்கள் சித்தரை அனுகி, "மன்னர் வருகிறார். இவ்விடத்தில் யாவரும் இருக்கக் கூடாது. எழுந்து தூரந்தள்ளிப் போகவும்", என எத்தனை முறை கூறியும் சித்தர் அவ்விடத்தை விட்டு அகழ்ந்து விடவில்லை. அதற்குள் பரிவாரங்களோடு மன்னரும் வந்து விட்டார்.


    அரசன் சித்தர் அருகில் சென்று இங்கே குறுக்காக ஏன் அமர்ந்துள்ளீர். நீர் யார்? உமது பெயரென்ன? ஊர் எது? உம் ஆற்றல் எதுவென்ன? எனக் கேட்டார்.


    என் பெயர் ஆக்கினைச் சித்தன். எனக்கு பெற்றோர் யாரும் இளர். நானொரு அனாதை. காசி நகரில் வெகுநாளாய் பிச்சையெடுத்து வாழ்ந்தவன்.


    இங்கே இம்மதுரையில் சுந்தரேசனை தரிசனம் செய்ய வந்தேன். ஏதோ எனக்குத் தெரிந்த வித்தைகளைக் கொண்டு மக்களின் குறைகளைப் போக்கி வருகின்றேன். உமக்கும் ஏதாவது வித்தை காட்ட வேண்டுமா? என்றார் சித்தர் சிரித்தபடி.


    மன்னன் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்நாள் சங்கராந்தி நாளானாதால், ஒரு குடியானவனொருவன் முழுக் கரும்புடன் இருப்பதைப் பார்த்தவர், கைகளால் சைகை செய்து இங்கே வா! என அவனை அழைத்தார்.


    பணிவுடன் அவன் அருகில் வர, அவன் கையிலிருக்கும் கரும்பை வாங்கினார். பின் சித்தரை நோக்கி, இந்தக் கரும்பை இங்கேயிருக்கும் கல் யானைக்கு கொடுத்து உண்ணச் செய்யும்.


    கல் யானை கரும்பைத் தின்று விட்டால் நான் உமக்கு அடிமையாவேன்!. நீர் கேட்பதையும் தருகிறேன். தின்னா விட்டால் நீர்சித்தர் என்பதில் அர்த்தமில்லை என்றான் மன்னர்.


    என் வித்தையாலேயே எனக்குரியதை நான் வரவழைத்துக் கொள்ளும்போது, உம்மிடமிருந்து நான் என்ன எதிர்பார்க்க! உமது வார்த்தை எனக்கு வியப்பாக இருக்கிறது


    மன்னரிடமிருந்து கரும்பை வாங்கிய சித்தர் கல் யானையை நோக்கி, *அரசன கைக் கரும்பைத் தின்னுவாயாக!* இது சொக்கநாதர் மீது ஆணை என்றார்.


    என்ன விந்தை! கல்லானை பிளிறிச் சத்தமிட்டுக் கொண்டு அரசன் தந்த கைக் கரும்பை கண் இமைக்கும் நேரத்தில் கரும்பை முறித்துறித்து தின்று விட்டது. அத்தோடுமட்டுமல்லாமல் மன்னன் கழுத்திலணிந்திருந்த வெண்முத்து மாலையை தாமரைத் தண்டு என நினைத்திழுத்து சுவைக்கத் தொடங்கியது.


    கூடியிருந்தவர்கள் சப்தமிட்டு மன்னனின் முத்துமாலையை சுவைக்கும் போக்கைத் தடுத்தனர்.


    சித்தர் சினம் கொண்டு அவர்களைனைவரையும் தடுக்காது தடுத்து யானையைச் சுவைக்கும்படி உத்தரவிட்டார்.


    பாண்டியனுக்கு கோபம் கொதித்து. தன் வீரர்களிடம் சித்தரைத் தண்டிக்கும்படி உத்தரவிட்டான்.


    உடனே அடிக்கப் பாய்ந்த வீரர்களை, சித்தர் கையை உயர்த்தி *அப்படியே நில்* என கூற, அப்படியே நின்ற வீரர்களின் நிலைப்பாடுகளைப் பார்க்கும்போது சிரிப்போடு பயமுண்டானதாய் இருந்தன.


    இவைகளையெல்லாம் கண்டுணர்ந்த பாண்டிய மன்னன் சித்தரின் பெருமையை உணர்ந்து புரிய ஆரம்பித்தான். படீரென சித்தரின் பாதகமலங்களில் விழுந்து வணங்கினான். அத்தோடு தன்பிழை பொறுக்குமாறும் வேண்டினான்.


    "ஐயா, தங்களைத் தேடி நான் வந்திருக்க வேண்டும்!, மாறாக வீரர்களை அனுப்பி அழைத்து வரப் பணித்தது அடியேனின் பெருங்குற்றம்.


    தாங்கள் மனது கொண்டு ஆலயத்தில் என் வழியில் நீங்கள் காத்திருக்க உங்களை இடையூராக நினைத்தது குற்றத்திற்கும் மேலான குற்றம்.


    தங்களைத் தண்டிக்க படையினரை ஏவியனுப்பியது குற்றங்களிலெல்லாம் பெரிய குற்றம். தாங்கள் மனது வைத்து என் பிழை பொறுக்க வேண்டும். திரிபுரத்தையும், காமனையும் எரித்த முக்கண்ணரே நீர்தான் என என் மனம் கூறுகிறது என்றான்.


    சித்தர் புன்முறுவல் செய்தவாறு "குழந்தை கடித்தென்றால் நாம திரும்பக் கடிப்போமோ?" உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றார் சித்தர்.


    *"நற்குணமும், கல்வியும், அழகும், நீண்டயாயுளும் கொண்ட சத்புத்திரன் வேண்டும்"* என பாண்டியன் வரம் கேட்டான்.


    பாண்டிய மன்னன் கேட்டபடியே அப்படியே வரமளித்தார் சித்தர்பெருமான்.


    யானை வாயில் சுவைத்துக் கறைந்து போன முத்துமாலையை வரவழைத்து, மன்னனின் கழுத்திலிட்டு தடவிக் கொடுத்தார்.


    ஏற்கனவே, பிரமை பிடித்து நிற்க வைத்த வீரர்களை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பச் செய்து விட்டு மறைந்து அகழ்ந்து போனார் சித்தர்.


    பாண்டியன் வியந்து , எல்லாம் பரம்பொருள் செயல் என ஆனந்தம் கொண்டான்.


    சித்தர் வரமளித்த வாக்குப்படி பிறந்த குழந்தைக்கு *"விக்கிரமன்"* என பெயர் சூட்டிப் பெருமையுடன் வளர்த்து வந்தான்.




    உரிய வயது வந்த மைந்தனுக்குப் பட்டம் சூட்டி, அரசுப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டு இறுதியில் இறைவனடி சேர்ந்தான்.


    திருச்சிற்றம்பலம்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X