Announcement

Collapse
No announcement yet.

பன்னிரு திருமுறை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பன்னிரு திருமுறை

    பன்னிரு திருமுறை


    திருச்சிற்றம்பலம்


    திருநீறு




    முதல் திருமுறை


    திருநெடுங்களம்


    கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
    மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
    ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
    நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.


    இரண்டாம் திருமுறை


    திருக்களர்


    தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
    தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
    வேளின் நேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை
    ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.


    மூன்றாம் திருமுறை


    திருக்கோகர்ணம்


    நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல்சி லம்பொலிசெய
    ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரும் ஈசனிடமாம்
    ஆறுசம யங்களும் விரும்பியடி பேணியரன் ஆகமமிகக்
    கூறுவனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே.


    நான்காம் திருமுறை


    கோயில்


    ஏறனார் ஏறு தம்பால்
    இளநிலா எறிக்குஞ் சென்னி
    ஆறனார் ஆறு சூடி
    ஆயிழை யாளோர் பாகம்
    நாறுபூஞ் சோலைத் தில்லை
    நவின்றசிற் றம்ப லத்தே
    நீறுமெய் பூசி நின்று
    நீண்டெரி யாடு மாறே.


    ஐந்தாம் திருமுறை


    பொது - சித்தத்தொகை


    ஈறில் கூறைய னாகி எரிந்த வெண்ணீறு பூசி நிலாமதி சூடிலும்
    வீறி லாதன செய்யினும் விண்ணவர்
    ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.


    ஆறாம் திருமுறை


    பொது - திருவினா திருத்தாண்டகம்


    விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
    வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
    சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
    சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
    அரையுண்ட கோவண ஆடை யுண்டு
    வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
    இரையுண் டறியாத பாம்பு முண்டு
    இமையோர் பெருமா னிலாத தென்னே.


    ஏழாம் திருமுறை


    திருத்தொண்டத்தொகை


    பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


    எட்டாம் திருமுறை திருவாசகம்


    திருக்கோத்தும்பி


    தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
    பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
    சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
    கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.


    எட்டாம் திருமுறை. திருக்கோவையார்


    ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
    பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள்
    பூ(க)அத் திருநீ(று) எனவெளுத்(து) ஆங்கவன் பூங்கழல்யாம்
    பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே.


    ஒன்பதாம் திருமுறை. திருவிசைப்பா


    தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு இன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி இளம்பிறை குழைவளர் இளமான் கின்னரம் முழவம் மழலையாழ் வீணை கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனத்துள்வைத் தனன.


    ஒன்பதாம் திருமுறை திருப்பல்லாண்டு


    சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
    போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
    மாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
    பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.


    பத்தாம் திருமுறை. திருமந்திரம்


    கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே.


    பதினோராம் திருமுறை


    வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல் பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன் பொடி பூசிவந்துன் அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம் வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே.


    பன்னிரண்டாம் திருமுறை


    தடுத்தாட்கொண்டபுராணம்


    மன்றுளாடு மதுவின் நசையாலே மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழ்க்கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச் சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்.


    திருச்சிற்றம்பலம்.
Working...
X