Announcement

Collapse
No announcement yet.

Vaidyanathan Krishnan

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vaidyanathan Krishnan

    Vaidyanathan Krishnan


    ॥ ஓம் நமோ நாராயணாய ॥
    ॥ ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ॥
    கிருஷ்ணாய வாஸுதேவாய
    தேவகீ நந்தனாய ச ।
    நந்தகோபகுமாராய
    ஸ்ரீகோவிந்தாய நமோ நம : ॥
    கிருஷ்ணாய வாஸுதேவாய
    ஹரயே பரமாத்மனே ।
    பிரணத க்ளேசநாசாய
    ஸ்ரீகோவிந்தாய நமோ நம : ॥
    ॥ ஸ்ரீமந்நாராயணீயம் ॥
    ( மேல்பத்தூர் ஸ்ரீ நாராயண பட்டதிரிப்பாட் அவர்கள் இயற்றியது )
    தசகம் ॥ 85 ॥
    ॥ ஜராஸந்தன் சிசுபாலன் இவர்களின் முடிவு ॥
    ச்லோகம் ॥ 1 ॥
    ததோ மகதபூப்ருதா சிரநிரோதஸம்க்லேசிதம்
    சதாஷ்டகயுதாயுதத்விதயமீச! பூமிப்ருதாம்
    அனாதசரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோ-
    தயாசத ஸ மாகதக்ஷபணமேவ கிம் பூயஸா.
    மகதராஜனான ஜராஸந்தன், உலகம் முழுவதும் தனது வல்லமை படைத்த படைகளுடன் திக்விஜயம் மேற்கொண்டு, பல ராஜ்ஜியங்களையும் யுத்தம் செய்து கீழ்ப்படுத்தி, அவர்களுடைய மதிப்பு மிக்க பொக்கிஷங்களையெல்லாம் கடத்தி சென்று, அந்நாட்டு அரசர்கள் 20800 பேரை கைதுசெய்து சிறையிலடைத்து வைத்திருந்தான். தங்களுடைய மகிமையை கேட்டறிந்த அந்த ராஜாக்கள், ஆருமேதுமில்லாத அனாதைகளுக்கு உறுதுணையாய் இருக்கும் ஸர்வசக்தனான தங்களை நாடி, எப்படியாவது எங்களை காப்பாற்றுங்கள் என்று அவர்கள் சார்பாக தங்களிடம் சொலாவதர்காக ஒரு தூதனை அனுப்பி வைத்தார்கள். தூதனும் தங்களிடம் வந்து எப்படியாவது இந்த ஜராஸந்தனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தான்.
    ச்லோகம் ॥ 2 ॥
    யியாஸுரபிமாகதம் ததனு நாரதோதீரிதாத்-
    யுதிஷ்டிரமகோத்யமாதுபயகார்யபர்யாகுல:
    விருத்தஜயினோத்வராதுபயஸித்திரித்யுத்தவே
    சசம்ஸுஷி, நிஜை: ஸமம் புரமியேத யௌதிஷ்டிரீம்.
    ஜராஸந்தனுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு தாங்கள் ஆயத்தமாகிகொண்டிருக்கையில், நாரதர் வந்து யுதிஷ்டிரன் ராஜஸூயம் என்ற பெரிய யாகம் செய்யப்போகிறான் என்று சொன்னார். ராஜஸூயம் செய்ய தகுதி வேண்டுமானால், இதர ராஜாக்கள் எல்லாருமே அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். அல்லாதவர்களை கீழ்ப்படுத்த வேண்டும். ஜராஸந்தனுடன் நேரிடையாக மோதுவதர்கு பதிலாக, ஏன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அவனை பாண்டவர்களை வைத்து முறியடித்து, அவனுக்கு முற்றுபுள்ளி வைக்க கூடாது என்று உத்தவர் சொன்ன கருத்திற்கு இணங்கி, தங்களை சார்ந்தவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு இந்திரபிரஸ்தத்திற்கு புறப்பட்டீர்கள்.

    Source fb
Working...
X