மாதவப்பெருமாள் பிருகு மகரிஷியின் மகளான மகாலட்சுமியுடன் அருளும் தலம் மயிலாப்பூர். மணக்கோலத்தில் இருப்பதால் இவருக்கு கல்யாண மாதவன் என்று பெயருண்டு. மழலை பாக்கியம் பெற இங்குள்ள அமிர்தவல்லித்தாயாரை வழிபடுகின்றனர்.
தல வரலாறு: திருமால் சாந்த குணம் உள்ளவர் தானா என சோதிக்க எண்ணிய பிருகு மகரிஷி, அவரது மார்பில் உதைத்தார். திருமாலின் மார்பில் லட்சுமி நிரந்தரமாக குடியிருக்கிறாள். தான் இருப்பது தெரிந்தும், உதைத்த முனிவர் மீது அவளுக்கு கோபம் ஏற்பட்டது. மேலும், தன் கணவர் இதைக் கண்டிக்கவில்லையே என்ற காரணத்தாலும் அவள் திருமாலைப் பிரிந்து விட்டாள். தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட விரும்பிய பிருகு, லட்சுமியே தன் மகளாக அவதரிக்க வேண்டும் என மாதவபுரம் என்னும் தலத்தில் தவம் செய்தார். அவரின் பக்திக்கு இரங்கிய லட்சுமி, இங்குள்ள குளத்தில் குழந்தையாக அவதரித்தாள். அவளுக்கு, "அமிர்தவல்லி' எனப் பெயரிட்டார் பிருகு. அவள் திருமண வயதை அடைந்தபோது, திருமாலே மணமகனாக வந்து மணந்தார். மணக்கோலத்தில் மாதவப்பெருமாளாக கோவில் கொண்டார்.
பால் நைவேத்யம்: மூலவர் மாதவப்பெருமாள் "கல்யாண மாதவன்' என்று அழைக்கப்படுகிறார். அமிர்தவல்லி தாயார் தனிச்சன்னிதியில் இருக்கிறாள். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறுக்காகவும் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் சேர்ந்த கலவையை நைவேத்யம் செய்கின்றனர். புரட்டாசி சனியன்று இவர்களை வழிபட்டால், வீட்டில் "ஆராரோ' பாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
ஆழ்வார் அவதாரம்: பேயாழ்வார் இத்தலத்தின் அருகிலுள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தார். இவருக்கு தனி சன்னிதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தை ஒட்டி பத்து நாள் விழா நடக்கும். திருக்கோவிலூரில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவருக்கும் திருமால் காட்சி அளித்தார். இதன் அடிப்படையில் "திருக்கோவிலூர் வைபவம்' நிகழ்ச்சி நடத்தப்படும்.
செல்வப்பிள்ளை: ராமானுஜர், கர்நாடகாவிலுள்ள திருநாராயணபுரம் சென்றார். அங்கு உற்சவர் சம்பத்குமாரர் சிலையை டில்லி மன்னரின் மகள், எடுத்துச் சென்று விட்டதை அறிந்தார். டில்லிக்கு சென்று மீண்டும் நாராயணபுரத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார். செல்வப்பிள்ளை என பெயர் பெற்ற இவருக்கு இங்கு சன்னிதி உள்ளது.
நேரம்: காலை 6.30- 11.00 மணி, மாலை 4.30 - இரவு 9.00 மணி.
தொலைபேசி: 044-2498 5112.