Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

    1#11a. தாரையின் காதல்
    பிருஹஸ்பதியின் மனைவி தாரை,
    பிரமிக்க வைக்கின்ற அழகிய பெண்.
    சென்றாள் ஒருமுறை சந்திரனின் இல்லம்;
    வென்றான் அவன் அவள் மனதை அழகால்.
    அறிவை இழந்து விட்டனர் இருவரும்.
    வெறி கொண்டு குலாவி மகிழ்ந்தனர்.
    “சந்திரனின் இல்லம் சென்ற என் தாரை
    எந்தக் காரணத்தால் திரும்பவில்லை?”
    சிந்தாகுலம் மிக அடைந்தார் தேவகுரு,
    சந்திரனிடம் அனுப்பினார் மாணவனை.
    “தேவகுரு பணித்தார் என்னைக் கூறும்படி,
    தேவி நீங்கள் இல்லம் திரும்ப வேண்டும்!”
    கண்டும் காணாமலும் சென்றாள் தாரை.
    திண்ணமாக அலட்சியம் செய்தாள் அதை.
    “சுவாமி மன்னித்து விடுங்கள் என்னை!
    சுயபுத்தி இழந்து விட்டார் உமது பத்தினி!”
    ஒருவர் பின் ஒருவர் சென்று அழைத்தும்
    திரும்பவில்லை தாரை தன் கணவனிடம்.
    சந்திரனிடம் மயங்கிக் கிடந்தாள் அவள்.
    சந்திரனின் மாளிகை சென்றார் தேவகுரு.
    “குருபத்தினியைக் கூடினாயா சந்திரா?
    குருபத்தினி ஒரு தாய்க்கு சமம் அன்றோ?
    பிரம்ம ஹத்தி செய்தவன், மதுக் குடித்தவன்,
    குருபத்தினியைக் கூடினவன், பொன் திருடன்,
    கொடிய பாவிகள் என்று அறியாயோ நீ ?
    கொடிய பாவி ஆகிவிட்டாயே சந்திரா நீ!
    தேவருடன் சஞ்சரிக்கும் தகுதி இழந்தாய்!
    தேவையின்றி நிந்திக்கப் படுவாய் நீ இனி!
    தீரப் பழிக்கு ஆளாவாய் உன்செயலால்!
    தீராது அந்தப்பழி சிவனருளாலும் கூட!”


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
Working...
X