1#9d. மது, கைடபர் (6)
மது கைடபர்கள் சொன்னார்கள் விஷ்ணுவிடம்,
“மறந்து இருக்க மாட்டாய் என நினைகின்றோம்!
நீர் மயமாக உலகம் இருந்தபோது எமக்கு
நீ தந்தாய் ஒரு வரம் அது நினைவுள்ளதா?
நீரே இல்லாத விசாலமான ஒரு இடத்தில்
நீ கொல்லலாம் எங்களை இப்போது!” என;
சிந்தித்தார் சுதர்சனத்தை விஷ்ணு – உடனே
வந்திறங்கியது அது அவர் வலக்கரத்தினில்
“வரம் தருகின்றேன் நீங்கள் கேட்டவாறே;
பரந்த நீரற்ற பிரதேசத்தை இதோ காண்பீர்!’
விண்ணை முட்டும் விஸ்வரூபம் எடுத்தார்!
மண்ணுலகை ஒத்த தொடையைக் காட்டினார்.
“இந்தப் பிரதேசத்தில் வையுங்கள் தலையை
தந்த வாக்கிலிருந்து பின்வாங்கிச் செல்லாதீர்!”
அப்போதும் செய்தனர் அசுரர்கள் ஒரு மாயம்!
தப்ப வேண்டும் எப்படியாவது உயிருடன் என்று.
நீட்டினர் தம் உடல்களை ஆயிரம் யோஜனைக்கு!
நீட்டினார் தொடையை ஈராயிரம் யோஜனைக்கு!
நாணமடைந்த அசுரர் வைத்தனர் தலைகளை
நாரணன் சுதர்சனம் வேறாக்கியது அவற்றை.
பரவின இறைச்சியும், ரத்தமும் கடல் நீரினில்
பரவிய இடமே பிறகு ஆனது இந்த பூதலமாக.
மேனியில் இருந்து தோன்றியது இந்த மேதினி;.
வீணாகவில்லை மது கைடபர்களின் உடல்கள்..
வலிய அசுரர்களை வீழ்த்தவில்லை – தன்
வலிமையினால் நாரணன் நீண்ட போரில்!
மோகன சக்தியாகி மயக்கிய தேவியே
வேகமான அழிவுக்குக் காரணம் ஆனாள்.
“பராசக்திக்கு மிஞ்சிய தெய்வம் இந்தப்
பாரினில் இல்லை!” என்பது வேத வாக்கு.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
மது கைடபர்கள் சொன்னார்கள் விஷ்ணுவிடம்,
“மறந்து இருக்க மாட்டாய் என நினைகின்றோம்!
நீர் மயமாக உலகம் இருந்தபோது எமக்கு
நீ தந்தாய் ஒரு வரம் அது நினைவுள்ளதா?
நீரே இல்லாத விசாலமான ஒரு இடத்தில்
நீ கொல்லலாம் எங்களை இப்போது!” என;
சிந்தித்தார் சுதர்சனத்தை விஷ்ணு – உடனே
வந்திறங்கியது அது அவர் வலக்கரத்தினில்
“வரம் தருகின்றேன் நீங்கள் கேட்டவாறே;
பரந்த நீரற்ற பிரதேசத்தை இதோ காண்பீர்!’
விண்ணை முட்டும் விஸ்வரூபம் எடுத்தார்!
மண்ணுலகை ஒத்த தொடையைக் காட்டினார்.
“இந்தப் பிரதேசத்தில் வையுங்கள் தலையை
தந்த வாக்கிலிருந்து பின்வாங்கிச் செல்லாதீர்!”
அப்போதும் செய்தனர் அசுரர்கள் ஒரு மாயம்!
தப்ப வேண்டும் எப்படியாவது உயிருடன் என்று.
நீட்டினர் தம் உடல்களை ஆயிரம் யோஜனைக்கு!
நீட்டினார் தொடையை ஈராயிரம் யோஜனைக்கு!
நாணமடைந்த அசுரர் வைத்தனர் தலைகளை
நாரணன் சுதர்சனம் வேறாக்கியது அவற்றை.
பரவின இறைச்சியும், ரத்தமும் கடல் நீரினில்
பரவிய இடமே பிறகு ஆனது இந்த பூதலமாக.
மேனியில் இருந்து தோன்றியது இந்த மேதினி;.
வீணாகவில்லை மது கைடபர்களின் உடல்கள்..
வலிய அசுரர்களை வீழ்த்தவில்லை – தன்
வலிமையினால் நாரணன் நீண்ட போரில்!
மோகன சக்தியாகி மயக்கிய தேவியே
வேகமான அழிவுக்குக் காரணம் ஆனாள்.
“பராசக்திக்கு மிஞ்சிய தெய்வம் இந்தப்
பாரினில் இல்லை!” என்பது வேத வாக்கு.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி