Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

    1#9a. மது, கைடபர் (3)


    வியாபித்து இருந்தாள் நித்திரை ரூபமாக
    விஷ்ணுவின் உடல் முழுதும் தாமஸசக்தி.
    விஷ்ணுவின் உடலிலிருந்து வெளிப்பட்டு
    விண்ணில் கலந்தாள் ஆதி பராசக்தியுடன்.
    கண் விழித்தார் விஷ்ணு உடலை அசைத்து;
    கண்டார் நடுங்கி நின்றிருந்த பிரம தேவனை.
    “காதுக் குரும்பியிலிருந்து தோன்றிய அசுரர்கள்
    வாது செய்து அழைக்கின்றனர் போர் புரிவதற்கு!
    துரத்தி வருகின்றனர் என்னைக் கொல்வதற்கு!
    சரணடைய ஓடி வந்தேன் எந்தையே உம்மிடம்!”
    “அஞ்ச வேண்டாம் பிரமனே தஞ்சம் புகுந்த பிறகு;
    கொஞ்சமும் உணரவில்லை அசுரர் என் சக்தியை!”
    வந்து சேர்ந்தனர் மது கைடபர்கள் அங்கு;
    “வந்து போர்புரி! அன்றேல் வந்து வழிபடு!”
    “போர் புரியுங்கள் முதலில் என்னுடன்!” எனப்
    போரைத் துவக்கினார் விஷ்ணு அசுரர்களுடன்.
    பாய்ந்து வந்தான் மது விஷ்ணுவை நோக்கி;
    ஓய்ந்து விடாது புரிந்தனர் கடின மல்யுத்தம்.
    நீண்ட காலம் கடந்த பின் களைத்த அசுரன்
    நீங்கினான் மஹாவிஷ்ணுவை விட்டு விட்டு.
    கைடபன் பாய்ந்தான் விஷ்ணுவை நோக்கி
    கைடபன் புரிந்தான் மல்யுத்தம் இப்போது.
    நீண்ட காலம் கடந்த பின் களைத்த அசுரன்
    நீங்கினான் மஹாவிஷ்ணுவை விட்டு விட்டு.
    மாறி மாறிப் போர் புரிந்தனர் அசுரர்கள்
    நேரம் தரவில்லை விஷ்ணு இளைப்பாற.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X