Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

    தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்
    1#7. பிரமனின் துதி
    மது கைடபர்கள் அறைகூவினர் பிரமனிடம்!
    மதி மயங்கினான் பிரமன் செய்வதறியாமல்!
    ‘சாம, தான, பேத, தண்டங்கள் பலன் தரா!
    சாம வழித் துதியினால் புரிந்துவிடும் பயம்.
    தானத்தால் வெல்லும் தகுதியும் இல்லை;
    தானவரைப் பேதத்தால் பிரிப்பதும் கடினம்.
    திருமாலை எழுப்பினால் தீரும் இன்னல்!
    திருமாலைச் சரணடைந்தார் பிரமதேவன்.
    மூழ்கியிருந்தார் யோக நித்திரையில் அவர்.
    மொழிந்தார் திருப் பெயர்களை பிரமதேவன்.
    எத்தனை துதித்தாலும் கண் திறக்கவில்லை
    நித்திரை வயப்பட்ட திருமால் சிறிதேனும்
    ‘துயில்கின்றார் இவர் எதுவும் அறியாமல்!
    துதி பாடியதும் விழவில்லை செவிகளில்!
    பிறர் வசப்பட்டவர்கள் அவர்களின் ஏவலரே!
    பிரபஞ்சம் அனைத்தும் தேவிக்கு வசப்பட்டது..
    கிடைக்கும் பலன் தேவியைத் துதித்தால்;
    தொடங்கினான் தேவியைத் துதிப்பதற்கு.
    “உலகம் என்ற மேடையை அமைத்துவிட்டு
    விளையாடுகிறாய் எல்லமாக நீ ஒருத்தியே!
    படைப்பதும் நீயே! பின்னர் அழிப்பதும் நீயே!
    படைத்தலும், அழித்தலும் உனக்கு விளையாட்டு.
    படைத்தாய் என்னை! படைத்தாய் அசுரரையும்!
    கடைதேற்ற நினைத்தால் துயிலெழுப்புவாய்!”
    வெளிப்பட்டாள் தாமஸ ரூபமான நித்திரா தேவி.
    விழித்துக் கொண்டார்; அசைந்தார் விஷ்ணுபிரான்.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X