தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues
1#6b. மது, கைடபர் (2)
மகிழ்ந்தாள் பராசக்தி அவர்கள் தவத்தால்.
மொழிந்தாள் அசுரரிடம் ஓர் அசரீரியாக!
“வேண்டும் வரம் தருவேன் கேளுங்கள்!” என
வேண்டினர் தாம் விரும்பிய அரிய வரத்தை.
“மரணம் எமக்கு நாங்கள் விரும்பும் போதே!
மரிக்கக் கூடாது நாங்கள் வேறு விதங்களில்!”
“விரும்பும் போது மட்டுமே மரணம் – மேலும்
வெல்வீர்கள் எளிதாக பகைவர்களை நீங்கள்!”
வரங்கள் பெற்றதும் கூடியது ஆணவ மதம்
வரங்களின் பலத்தால் விளைந்தது மமதை.
கண்டனர் பிரமனைக் கண் முன்னர் ஒருநாள்;
கொண்டனர் தினவும், போர் செய்யும் வெறியும்.
“வருவாய் எங்களுடன் போர் புரிவதற்கு – நீ
வர மறுத்தால் உடனே எங்காவது ஓடிவிடு!
தாமரை மலர் ஆசனம் உனக்கு எதற்கு?
தாமதம் செய்கிறாய் போர் புரிவதற்கு!
மங்களகரமான பத்மாசனம் உரியது
எங்களைப் போன்ற சுத்த வீரர்களுக்கு.
பேடிப் பயலே! வந்து போரிடு அன்றேல்
ஓடிவிடு எம் கண் முன் நில்லாதே இனி!”
கேலி பேசினர் மது, கைடபர் பிரமனிடம்;
பேதலித்தார் செய்வது அறியாத பிரமன்.
‘அதி பலசாலிகளான இரண்டு அசுரருடன்
மதி பலம் கொண்ட நான் போர் புரிவதா?’
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
1#6b. மது, கைடபர் (2)
மகிழ்ந்தாள் பராசக்தி அவர்கள் தவத்தால்.
மொழிந்தாள் அசுரரிடம் ஓர் அசரீரியாக!
“வேண்டும் வரம் தருவேன் கேளுங்கள்!” என
வேண்டினர் தாம் விரும்பிய அரிய வரத்தை.
“மரணம் எமக்கு நாங்கள் விரும்பும் போதே!
மரிக்கக் கூடாது நாங்கள் வேறு விதங்களில்!”
“விரும்பும் போது மட்டுமே மரணம் – மேலும்
வெல்வீர்கள் எளிதாக பகைவர்களை நீங்கள்!”
வரங்கள் பெற்றதும் கூடியது ஆணவ மதம்
வரங்களின் பலத்தால் விளைந்தது மமதை.
கண்டனர் பிரமனைக் கண் முன்னர் ஒருநாள்;
கொண்டனர் தினவும், போர் செய்யும் வெறியும்.
“வருவாய் எங்களுடன் போர் புரிவதற்கு – நீ
வர மறுத்தால் உடனே எங்காவது ஓடிவிடு!
தாமரை மலர் ஆசனம் உனக்கு எதற்கு?
தாமதம் செய்கிறாய் போர் புரிவதற்கு!
மங்களகரமான பத்மாசனம் உரியது
எங்களைப் போன்ற சுத்த வீரர்களுக்கு.
பேடிப் பயலே! வந்து போரிடு அன்றேல்
ஓடிவிடு எம் கண் முன் நில்லாதே இனி!”
கேலி பேசினர் மது, கைடபர் பிரமனிடம்;
பேதலித்தார் செய்வது அறியாத பிரமன்.
‘அதி பலசாலிகளான இரண்டு அசுரருடன்
மதி பலம் கொண்ட நான் போர் புரிவதா?’
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.