Announcement

Collapse
No announcement yet.

கிரிவல பாதையில் கிருஷ்ணனர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கிரிவல பாதையில் கிருஷ்ணனர்

    கிரிவல பாதையில் கிருஷ்ணனர்


    மகாவிஷ்ணு பூதநாராயணர் என்ற பெயரில் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கிறார். அருணாசலேஸ்வரர் கோவில் அருகில், வடக்கு கிரிவலப்பாதையில் இந்தக் கோவில் உள்ளது. இங்கு சுவாமி, கிருஷ்ணராக பால பருவத்தில் இருந்தாலும், பூதனை என்ற அரக்கியிடம் பால் அருந்தியதால், பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்துள்ளார். தினமும் காலையில் இவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.
    அண்ணாமலை வரும் சில பக்தர்கள் இவரை வணங்கி கிரிவலம் துவங்கி, இவரது சன்னதியிலேயே நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது, சுவாமியை வணங்கி சன்னதியில் தீர்த்தம் வாங்கி, வாசல் முன் அதை கொட்டுகின்றனர். அதாவது, கிரிவலம் சென்றதால் கிடைத்த பலனை கிருஷ்ணருக்கே சமர்ப்பணம் செய்து, மீண்டும் அதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதாக ஐதீகம்

  • #2
    Re: கிரிவல பாதையில் கிருஷ்ணனர்

    திருவண்ணாமலையில் வசிக்கும் எனக்கு இப்புதிய தகவலளீத்தமைக்கு நன்றீ

    Comment

    Working...
    X