Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    1#5f. ஹயக்ரீவன் (6)

    பெருவலிவுடைய ஹயக்ரீவன் என்ற அசுரன்
    அரும் தவம் புரிந்தான் சரஸ்வதிநதித்தீரத்தில்.
    துறந்தான் உலக போகங்கள் அனைத்தையும்;
    மறந்தான் அன்னம், பானம், ஆஹாராதிகளை.
    ஜபித்தான் என் ஏகாக்ஷர மந்திரத்தைவிடாது;
    துதித்தான் என் தாமச சக்தியைத்தியானித்து!
    சர்வாலங்கிருத பூஷிதையாக சிங்கத்தின் மீது
    கற்பனைசெய்தது போலவே காட்சி அளித்தேன்
    முத் தொழிலுக்கும் காரணமான தேவி!
    பக்தருக்கு அருள் செய்வதில் சமர்த்திநீ.
    பஞ்ச தன்மாத்திரைகளுக்குக் காரணம் நீ !
    பஞ்ச பூதங்களுக்குக் காரணம் ஆனவள் நீ!
    பஞ்ச ஞானேந்திரியங்களும் நீயே தாயே!
    பஞ்ச கர்மேந்திரியங்களும் நீயேஎன,
    விரும்பும் வரத்தைக் கேள் ஹயக்ரீவா!
    விரும்பிய வண்ணமே அருள்கின்றேன்!”
    மரணம் என்பது ஏற்படக் கூடாதுஎனக்கு
    சரணம் அடைய வேண்டும் தேவர்என்னிடம்.
    அழியாத தன்மையைத் தந்தருளும் தேவி!” என்று
    மொழிந்தான் தான் கோரும் வரங்களைஅசுரன்.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X