கொடுத்துப் பார்...! சொன்னவர் ரமணர்!
ஒரு முறை ஒரு பெண் பக்தர், ஐந்து பழங்களை ரமணருக்கு காணிக்கையாக கொடுத்தார். ரமணர் அந்தப் பழங்களை சாப்பிட மாட்டாரா என்று ஏக்கத்தோடு பக்தி பரவசத்துடன் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். ரமணர், அந்த பெண்மணியின் விருப்பத்தை புரிந்து கொண்டார் போலும்!
அவரைப் பார்த்தபடியே ஒவ்வொரு பழமாக சாப்பிட்டார். அந்தப் பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அப்போது ரமணர் வாய்திறந்து அந்தப் பெண்மணியிடம்,
""நான் நீ கொண்டு வந்த பழங்களை சாப்பிட்டபோது எத்தனை மகிழ்ச்சி அடைந்தாய். இந்த மகிழ்ச்சி போதும் என நினைக்கிறாயா!
இங்குள்ள பக்தர்கள் அனைவருக்கும் பழம் கொடு. பிறகு உனது மகிழ்ச்சியைப் பார்... இரட்டிப்பாகும்,'' என்று சொன்னதும், அப்பெண்மணி கண்ணீர்மல்க, ரமணரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
பிறகு ஓரிரு நிமிடத்தில் அப்பெண்மணி நிறைய பழங்களை வாங்கி வந்து அனைத்து பக்தர்களுக்கும் வழங்கினார். அப்போது ரமணரும் மீண்டும் கையை நீட்டி ஒரு பழத்தை வாங்கிக் கொண்டார். அனைவருக்கும் இருப்பதை பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும் என்பது ரமணரின் விருப்பம். கொடுத்துத் தான் பாருங்களேன் நீங்களும்...!