பணமா! பாசமா!!
ஒரு முறை, காஞ்சி மகாப்பெரியவரைத் தரிசிக்க அரசாங்க ஊழியர் ஒருவர் வந்தார். அவர் பெரியவரை வணங்கி விட்டு, தன் கஷ்டங்களை எல்லாம் விபரமாக எடுத்துச் சொன்னார்.
"பெரியவா! வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம் பணம் தான் போலும்! அது போதுமான அளவு இல்லாததாலே, ரொம்பவே கஷ்டப்படுறேன். குடும்பத்தை நடத்த சிரமப்படுறேன்! கடன் வாங்கி தான் குடித்தனம் பண்ண வேண்டிஇருக்கு!'' என்று குறைபட்டுக் கொண்டார்.
பெரியவர் அவரிடம், "போதுமான பணத்தை குடும்பத்துக்கு கொடுக்கலை அப்படிங்கிறதுக்காக, உன் சம்சாரம், குழந்தைகள் எல்லாரும் உன் மீது வெறுப்பை காட்டுறாங்களா!! இல்லே...! பிரியமாத்தான் இருக்காங்களா!'' என்று கேட்டார்.
"பெரியவா! அவங்க எல்லாரும் என் மேலே ரொம்ப அன்பாத்தான் இருக்காங்க! எனக்கு லேசா காய்ச்சல், தலைவலி வந்தா கூட தாங்க மாட்டாங்க! நல்லா கவனிச்சுக்குவாங்க!'' என்றார்.
இதுகேட்டு சிரித்த பெரியவர், அவரிடம், "சரி உட்காரு...!'' என்று ஓரிடத்தில் அமரச் சொன்னார். அவரும் சற்று தள்ளி அமர்ந்து கொண்டார்.
அப்போது, ஒரு பணக்காரர் தன் மனைவியுடன் பெரியவரைத் தரிசித்தார். கையில் பழக்கூடை, புஷ்பக்கூடையுடன் பெரிய மனிதருக்கே உரிய தோரணையுடன் இருந்தார். அவர் பெரியவரிடம், "பெரியவா! என்னிடம் நிறைய பணம் இருக்கு! ஆனா, உடம்பு முழுக்க வியாதி. சரியாக சாப்பிட கூட முடியவில்லை. வயதான காலத்தில் நிம்மதி இல்லாமல் கஷ்டப்படுகிறோம்,'' என்றார்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரசு ஊழியர், மற்றவர்களைப் பார்க்கும் போது, தன் வாழ்க்கை எவ்வளவோ தேவலை என்று நினைத்துக் கொண்டார். பெரியவருக்கு நமஸ்காரம் தெரிவித்து விட்டு, அவரிடம் பிரசாதம் பெற்று திரும்பினார்.
பணம் மட்டுமே வாழ்க்கைக்கு பிரதானமல்ல. பிள்ளைகளின் பாசம் இருந்தால், பணம் ஒரு பொருட்டல்ல என்பதையும், எல்லாருக்கும் எல்லாமும் இருக்காது என்பதையும் பெரியவர் இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.