தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்
1#5a. ஹயக்ரீவன் (1)
பதினாயிரம் ஆண்டுகள் போரிட்டார் விஷ்ணு,
பயங்கரமாக அசுர வீரர்களுடன் தொடர்ந்து.
களைத்துப் போய்விட்ட விஷ்ணு சிறிது நேரம்
களைப்பாறினார் சமதளத்தில், பத்மாசனத்தில்.
வில்லை வலுவாகப் பதித்தார் பூமியில் – அந்த
வில்லின் நுனியில் பதித்தார் தன் முகவாயை.
சத்தம் இல்லாமல் நித்திரை செய்தார்;
எத்தனையோ நீண்ட காலம் ஓடிவிட்டது.
யாகம் செய்ய விரும்பினர் தேவர்கள் – ஆனால்
யாக கர்த்தா விஷ்ணுவோ ஆழ்ந்த நித்திரையில்.
‘விழிக்கும் வரை காத்திருப்போம்!’ என்றால்
விழிப்பதாகத் தெரியவில்லை நெடுங்காலம்.
ருத்திரர் கூறினார் எழுப்புவதற்கு உபாயம்.
“குத்திட்ட வில்லின் நாணை செல்லரித்தால்
நிமிர்ந்து விடும் வில்லின் மறு நுனி – அதனால்
நீங்கி விடும் விஷ்ணுவின் ஆழ்ந்த உறக்கம்.
தேவ காரியம் நடைபெறவேண்டும் – எனவே
தேவேந்திரன் அரிக்கட்டும் செல்லாக மாறி.”
“பாதியில் நல்ல நித்திரையைக் கலைப்பதும் ;
பாதியில் புண்ணிய கதையை நிறுத்துவதும் ;
பாதியில் கலவி இன்பத்தைக் குலைப்பதும் ;
பாதகமாகும் தாய் சேயைப் பிரிப்பது போல ”
தேவேந்திரன் மறுத்தான் பாதகம் புரிந்திட;
தேவர்கள் விடவில்லை அவனை மறுத்திட.
“யாகத்தில் அளிப்போம் அவிர்பாகம் உனக்கு!
யோசனை செய்யாமல் விஷ்ணுவை எழுப்பு!”
செல்லுருவம் எடுத்து வில்நாணை அறுத்தான்.
வில்நுனி நிமிர்ந்தது நடுக்கும் பேரொலியுடன்!
நடுங்கினர் தேவர்கள்; நடுங்கியது பூமி;
நடுங்கின மலைகள்; கடல் கொந்தளித்தது;
இருண்டு விட்டது சூரிய அஸ்தமனம் போல்!
பறந்து சென்றது நாரணன் தலை அதிர்வில்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.