Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்
    Cont'd
    1#4b. நாரதரின் பதில் (1)


    “சிந்தனையில் ஆழ்ந்துள்ளது ஏன் வியாசரே?”
    வந்த நாரதர் வினவினார் வியாச முனிவரை.
    “புத்திரன் இல்லாதவனுக்கு இல்லை நற்கதி;
    உத்திரவாதமாக உரைக்கின்றன வேதங்கள்!
    குழம்புகின்றேன் இதையே எண்ணி எண்ணி நான்!
    முழுகுகின்றேன் துன்பக் கடலில் செய்வதறியாமல்.
    தவம் செய்து பெறப் போகின்றேன் சத் புத்திரனை.
    தவம் செய்வது யாரைக் குறிந்து என்ற குழப்பம்.
    எல்லாம் அறிந்த திரிகால ஞானி நீர் நாரதரே!
    சொல்லுங்கள் தவத்துக்கு உகந்த தெய்வம் யார்?”
    “இதே கேள்வியைக் கேட்டேன் நான் பிரமதேவனிடம்;
    இதே கேள்வியைக் கேட்டான் பிரமன் விஷ்ணுவிடம்.
    எல்லாம் வல்ல நாரணன் இருந்தார் தியானத்தில்;
    சொல்லொண்ணா வியப்படைந்தான் பிரமதேவன்!
    “தேவாதி தேவன் நீரே! திருமகள் நாதன் நீரே!
    யாவரும் மயங்கும் அழகுடையவர் நீரே!
    எங்கும் வியாபித்து இருப்பவரே! கரங்களில்
    சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஏந்தியவர் நீரே!
    முக்காலமும் உணர்ந்த மூர்த்தியாகிய நீர்
    எக்காரணம் கொண்டு இத் தவம் செய்கின்றீர்?
    உம்மிடம் உதித்த நான் படைப்புக் கடவுள் எனில்
    உன் பெருமையை நவிலவும் இயலுமோ கூறும்.
    உம்மிலும் உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?
    எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது இதுவே!


    1#4c. நாரதரின் பதில் (2)
    “பிரபஞ்ச நாயகரகக் கருதுகின்றேன் உம்மை.
    பிரபஞ்ச காரணராகக் கருதுகிறேன் உம்மை.
    முழு முதற் கடவுளாகக் கருதுகின்றேன் உம்மை!
    தொழும் பக்தரைக் காப்பவராகவும் கருதுகிறேன்!
    சகலமும் செய்பவராகக் கருதுகின்றேன் உம்மை.
    சம்ஹார மூர்த்தியாகவும் கருதுகின்றேன் உம்மை
    வானில் சூரிய சந்திரர்கள் திரிவது உம் ஆணையால்;
    அனிலன் தென்றலோ புயலோ ஆவது உம் ஆணையால்.
    எரியும் அக்னி வெப்பத்தைத் தந்து, உம் ஆணையால்
    சொரியும் மேகங்கள் மழையை, உம் ஆணையால்.
    ஆயினும் இத்தனை பெருமைகள் படைத்த நீரே
    அமர்ந்துள்ளீர் ஒரு தெய்வத்தின் மீது தியானத்தில்!
    உமது புத்திரன் நான்; உமது பக்தன் நான்;
    உண்மை கூறுங்கள் நான் தெளிவடையும்படி!”
    “கவனித்துக் கேள் பிரம்மனே நான் கூறுவதை!
    அவனியில் உண்மையில் சிறந்த தெய்வம் யார்?
    முத் தொழிலுக்கு உரிய தெய்வங்களாக
    மும் மூர்த்திகள் நம்மைக் கருதிகின்றனர்.
    எத்தொழில் நடப்பதற்கும் தேவைகள் இரண்டு,
    அத்தொழில் புரியும் சக்தியும், சாமர்த்தியமும்!
    உலகை படைத்திடும் உன்னிடம் உள்ளது
    உன் தொழிலுக்கு உதவிடும் ராஜஸ சக்தி!
    காக்கும் தொழிலைச் செய்யும் என்னிடம்
    சாத்வீக சக்தி நிரம்பியுள்ளது உதவிட.
    சம்ஹரிக்கும் சங்கரனிடம் நிரம்பியுள்ளது
    சம்ஹரிக்கத் தேவையான தாமஸ சக்தி.”


    1#4d. நாரதரின் பதில் (3)
    “அற்புத சக்தி மட்டும் இல்லாமல் போனால்
    நின்றுவிடும் நம் தொழில்கள் முற்றிலுமாக!
    சக்தியின் வயப்பட்டே உள்ளளோம் நாம்.
    சக்திக்கு உட்பட்டே புரிகின்றோம் தொழில்.
    மூழ்குகின்றேன் தியானத்தில் சில சமயம்
    மூழ்குகின்றேன் இன்பத்தில் லக்ஷ்மியுடன்.
    அறிதுயில் புரிகின்றேன் அவ்வப்போது;
    புரிகின்றேன் அசுரருடன் உக்கிரப் போர்!
    தோன்றினர் மது கைடபர்கள் என் செவிகளில்;
    தோற்கவில்லை ஐயாயிரம் ஆண்டுப் போரில்.
    சங்கரித்தேன் இறுதியில் அவர்களை நான்
    சக்தி தேவியின் திருவருள் கனிந்தவுடன்.
    பராபரை சக்திதேவியே என்று புரிவில்லையா?
    பாரில் நிகழ்வன அவளால் தெரியவில்லையா?
    இழி பிறவிகளாக திரியக் யோனிகளில் சென்று
    விழைவார்களா பிறப்பதற்கு எவரேனும் கூறு!
    தோன்றினேன் மீனாக, ஆமையாக, வராஹமாக!
    தோன்றியது என்னுடைய சுயேச்சையால் அல்ல!
    இழிந்த பிறவிகள் பல எடுத்த பின்னரும் – நான்
    தொழப்படுவதும் என் முயற்சியினால் அல்ல.
    ரமித்தும், சுகித்தும் லக்ஷ்மியுடன் இராமல்
    ராக்ஷசர்களுடன் ஏன் புரியவேண்டும் போர்?
    வில்லின் நாண் அறுந்துவிட்ட து ஒருமுறை.
    வில்லின் நுனி அறுத்துவிட்டது என் தலையை
    சிறந்த குதிரையின் முகத்தைப் பொருத்தினாய்;
    சிறப்புறச் செய்தாய் ஹயானனாக என்னை நீ!
    சுதந்திரர் அல்ல நம்மில் எவருமே!
    சுயேச்சை இல்லை நம் எவருக்குமே!
    சக்தியின் வசப்பட்டே உள்ளோம் நாம்;
    சக்தியை தியானிக்கின்றேன்” என்றார்
    தந்தைக்கு இதைக் கூறினார் விஷ்ணு;
    என் தந்தை இதைக் கூறினார் எனக்கு.
    சக்தியின் திருவடிளைத் தியானித்தால்
    சக்தி நிறைவேற்றுவாள் கோரிக்கையை.”


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
Working...
X