Announcement

Collapse
No announcement yet.

அஞ்ஞாதவாசம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அஞ்ஞாதவாசம்

    பாண்டவர்கள்.
    தர்மதேவதை ' விராட நகரத்தில் மறைந்தும், ஒருவராலும் அறியப்டாமலும் வாழுங்கள் என அருளாணை இட்டது. அதன்படியே, 12 ஆண்டுகள் வனவாசமிருந்த பாண்டவர்கள், அஞ்ஞாதவாசம் ' எனும் மறைந்து வாழும் காலத்தை, விராட நகரத்தில் கழிக்கத் தீர்மானித்தார்கள்.

    அதன்படி, தர்மர் சந்நியாசி வடிவில் கங்கபட்டர் என்ற பெயரிலும், பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், அர்ஜுனன் பிருகன்னவள் என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், நகுல - சகாதேவர்கள் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்.

    திரவுபதியோ, சைரந்தரி என்ற பெயரில் அரசிக்கு பணிமகளாகப் பணிபுரிந்தாள்.

    மிகவும் நல்லவர்களான பாண்டவர்களுக்கே அந்த நிலை. அந்த நிலையிலும், ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த வேலையை வைத்து, மறைந்து வாழும் காலத்தில் பாணடவர்கள் சமாளித்து வாழ்ந்தார்கள்.

    -- ஸாந்த்ரானந்தா. ஆன்மிகம்.
    -- தினமலர். வாரமலர். டிசம்பர் 22, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X