courtesy:Sri.GS.Dattatreyan
கிரகங்களால் ஏற்படும் இடையூறுகளை போக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபாடு
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும். பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதை பார்த்து இருப்பீர்கள்.
காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப்பான தலங்கள். காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப்படுகிறார். குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார். மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார்.
பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதைகள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங்கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளியுள்ளார். இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம' என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம். திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.
திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார்..! சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப் பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோராவது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே! மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகத் திகழ்ந்தது.
அம்பரீச மன்னனுக்கு சுதர்சனர் அருளிய வரலாறும் உண்டு. இந்திரத்யும்னன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்திற்கு உள்ளாகி கஜேந்திரன் என்னும் யானையாக மாற நேர்ந்த்து.. ஒருநாள் தடாகத்தில் கஜேந்திரன் இறங்கியபோது முதலை ஒன்று யானையின் காலைக் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கவே, "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் குரல் கொடுக்க, மஹா விஷ்ணு உடனே கருட வாகனத்தில் தோன்றினார். அப்போது திருமாலின் கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீசுதர்சனச் சக்கரம் முதலையை வதைத்து, கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றியது.
பொதுவாக சக்கரம் மஹாவிஷ்ணுவின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.
பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது.
சுதர்சன சக்கரத்தால் சூழ்வினை ஓட்டும் விஷ்ணுவை, வியாழக்கிழமைகளில், விஷ்ணு கோலமிட்டு, ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம் சொல்லி வணங்க மலர்ச்சி தருவார் மஹாவிஷ்ணு. ஓம் நமோ நாராயணாய. ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.