Announcement

Collapse
No announcement yet.

முப்போதும் திருமேனி தீண்டுவார் -

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முப்போதும் திருமேனி தீண்டுவார் -

    Courtesy:smt.Uma Balasubramanian


    எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து
    மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே
    அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினர் ஆய்
    முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவர்ஆம் முனிவர்.

    சிவபிரானால் அருளிச் செய்யப் பெற்றவை இருபத்தெட்டு ஆகமங்கள். அவைகள் சைவ சமயத்தின் அடிப்படை நூல்களாகும் . அந்த ஆகம வழியே தான் இறைவன் திருக்கோயில்களில் பூசைகள் நடைபெறும் .பூசைகள் நித்தியம் , நைமித்திகம் என இருவகைப் படும். நித்தியம் என்பது நாள் தோறும் இறைவனைப் பூசிப்பதைக் குறிப்பதாகும் . விசேஷ காலங்களில் உற்சவம் முதலியன செய்தல் நைமித்திகம் ஆகும். சிவ வேதியர்களை ஆதி சைவர்கள் என்றும் கூறுவர். அவர்கள் இறைவன் திருமேனியைத் தீண்டும் உரிமை உடையவர்களாக இருந்தனர். அபிஷேக ஆராதனை செய்யும் தொழிலும் ஆகம அறிவும் உடையவர்களாக விளங்கினர் ,


    இறைவனுடைய திருமேனியைத் தீண்டும் இந்தப் பெருமை இன்று , அன்று என இல்லாது , பல காலங்களாகத் தொடர்ந்து வருகின்றது. பழங்காலத்திலேயே இந்த உரிமை உடையவர்களாக இருந்தனர் சிலர். . இன்றும் அவ்வுரிமை உடையவர்களாக சிறந்து விளங்குகின்றனர். வருங்காலத்திலும் அந்த உரிமையுடன் இருப்பதற்கு உரியவர்கள் என்று அறுதியிட்டுக் கூறலம் . .
    சேக்கிழார் பாடும் அவர்களது பெருமையைக் கண்டு களிப்போம்

    தெரிந்து உணரின் முப் போதும் செல் காலம் நிகழ் காலம்
    வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
    விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன; அப்
    பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ.

    காலை , நண்பகல் ,இரவு என்று முப்போதும் இறைவன் திருமேனியைத் தீண்டிப் பூசை புரியும் உரிமையைப் பெற்றவர்களின் பக்திக்கு சிரம் தாழ்த்துவோமாக!
Working...
X