Announcement

Collapse
No announcement yet.

அஷ்டமியைக் கொண்டாடுவோம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அஷ்டமியைக் கொண்டாடுவோம்!

    அஷ்டமி, நவமி தேவதைகள், ''திதிகளில் எங்களை மட்டும் நல்ல காரியங்களில் ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? இதற்கு விமோசனமே இல்லையா?' என்று கேட்டனர்.
    அதற்கு மகாவிஷ்ணு, ''கவலைப்படாதீர்கள்! உங்களைப் பெருமைப்படுத்தி அனைவரும் கொண்டாட, நான் வழிசெய்கிறேன். தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் எடுக்கப்போகும் இரண்டு சிறப்பான அவதாரங்களை உங்கள் திதிகளில் எடுக்கிறேன். என் அவதாரம் நிகழ்ந்த திதிகளை உலகோர் மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள்!'' என்று வரம் அருளினார்.
    அதன்படி, ஸ்ரீராமனாக நவமி திதியிலும், ஸ்ரீகிருஷ்ணனாக அஷ்டமி திதியிலும் பகவான் விஷ்ணு அவதரித்தார். அவற்றை முறையே ராமநவமி என்றும், கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜென்மாஷ்டமி) என்றும் காலம் காலமாகக் கொண்டாடுகிறோம். இந்த அஷ்டமி, நவமிகளுக்கு எந்தத் தோஷமும் கிடையாது. பொதுவாக, பிறந்த நாளை நக்ஷத்திரத்தில்தான் கொண்டாடுவோம். ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் மட்டும் பிறந்த நாள் திதிகளில் கொண்டாடப்படுகிறது.




    Sakthi Vikatan

Working...
X