Announcement

Collapse
No announcement yet.

Philosophy of Bikshadanar Kolam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Philosophy of Bikshadanar Kolam

    Courtesy:Sri.GS.Dattatreyan


    பிக்ஷாடனர் கோலத்தின் தத்துவம்


    கல்யாண சுந்தரர் பைரவர் நடராஜர் வீரபத்திரர் உட்பட சிவபிரான் வெளிப்பட்ட வடிவங்களுக்குள் ஆண்டி கோலத்துடன் கையில் கபாலம் ஏந்தி பிட்சை எடுக்கும் பிக்ஷாடனரும் ஒருவர்.
    ஒருசமயம் சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மதேவர் அகம்பாவத்துடன் கயிலாயத்தில் சிவனைப் போலவே வலம் வர அதைக் கண்டு பார்வதி கலங்க பிரம்மாவின் ஆணவத்தை அடக்க சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளிவிடுகிறார். அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. அத்துடன் பிரம்மாவின் பாதி கபாலமும் சிவனின் கையில் ஒட்டிக்கொள்கிறது. அந்த பிரம்ம கபாலம் முழுவதும் ஏதாவது பொருட்களால் நிறைந்தால்தான் சிவனின் கையை விட்டு நீங்கும். அதுவரை சிவன் பிட்சை எடுத்தாக வேண்டும். ஆகவே அந்த சமயத்தில் பிட்சாண்டாராக சிவன் பார்வதி தேவியிடம் கபாலத்தை நீட்டுகிறார். அன்னை பார்வதியும் சிவனுக்கு பிட்சையிட கபாலம் நிறைந்தது. சிவனின் கையிலிருந்தும் விலகியது. இதை நினைவு படுத்தும் விதமாகவே இன்று திருச்சிக்கு அருகிலுள்ள உத்தமர் கோயில் என்னும் பிட்சாண்டார் கோயிலிலும் வாரணாசி என்னும் காசியிலும் மற்றும் பல இடங்களிலும் சிவன் பிக்ஷாடன மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
    ஆகவேதான் சிவாலயங்களில் நடைபெறும் பிரம்மோத்சவ காலங்களில் ஒரு நாள் மட்டும் உடலில் ஆபரணங்களும் அலங்காரமும் இல்லாமல் கையில் கபாலம் ஏந்தி பிட்சாடன வடிவில் உலா வருவார். அந்தச் சமயத்தில் அனைவரும் குறிப்பாக அனைத்து வியாபாரிகளும் அந்த சிவனின் கையிலுள்ள கபாலத்தில் காணிக்கையாக தனம் பணம் போடுவார்கள்.
    ஆனால் நம்மிடமுள்ள அகந்தை ஆணவம் பொறாமை போன்ற தீய குணங்களையும் ஆசை பாசம் முதலானவற்றையும் ஈசன் நம்மிடம் யாசிக்கிறார். இவை இருக்கும் வரை ஈசனாலும் நமக்கு ஞானத்தை உபதேசிக்க முடியாது. ஆகவே பக்தனான நமக்கு அருள் செய்வதற்காக நம்மிடம் வந்து யாசிக்கும் ஈசனிடம் நம்மிடமுள்ள தீய குணங்களை பிக்ஷையாகப் போட்டுவிட வேண்டும். இதன் அடையாளமாகவே பணமும் பொருளும் உலா வரும் பிக்ஷாடன மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
Working...
X