Announcement

Collapse
No announcement yet.

ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற

    டி மற்றும் மார்கழி மாதத்தை பீட மாதங்கள் என்பர். மாதங்களுக்கு நடுவில் பீடங்கள் போல அமைந்து உள்ளதால், இந்தப் பெயர். மார்கழி- மகாவிஷ்ணுவுக்கும், ஆடி மாதம் அம்மனுக்கும் விசேஷமானது.

    அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.
    அதிலும் விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள். சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள்... ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். பஞ்ச மும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.
    அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில்... கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது. பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படைகூட கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.

    அம்மன் கூழ் செய்வது எப்படி?
    அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னி வேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கட லாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
    இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர் இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. ஆடி மாதத்து குளிரிலும், காற்றிலும் வர வாய்ப்புள்ள நோய்களான இருமல், தொற்று நோய் வராது.
    வெள்ளிக்கிழமை கனகப்பொடி!

    லர்ந்த தவிட்டை வெல்லத்தில் குழைத்து அதை தோசை போல் பரப்பி, தீக்கனலில் சுட்டெடுத்து உண்டாக்குவதே கனகப்பொடி.
    ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் கனகப்பொடி சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. இதை வெறும் மூட நம்பிக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்து பங்கிட்டு வைத்து வெறும் வயிற்றில் உண்ணும் ஆசாரமே கனகப்பொடி அருந்துதல்.

    உலர்ந்த தவிட்டில் வைட்டமின் பி ஏராளமுண்டு. வெல்லத்தில் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதுவே கனகப்பொடியின் சிறப்பு. இதை அம்பாளுக்கு நைவேத்தியமாக படைத்து விட்டு சாப்பிடலாம்.

    ஆனந்தவிகடன்

  • #2
    Re: ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊ&a

    thanks for the detailed info
    anbudan
    jai

    Comment

    Working...
    X