Announcement

Collapse
No announcement yet.

அம்மனின் அருள் கிடைக்கும் ஆடி மாதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அம்மனின் அருள் கிடைக்கும் ஆடி மாதம்

    ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். இந்த வருடம் ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் மாதப் பிறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்.

    ஆடி செவ்வாய் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடிச் செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். என்பது ஐதீகம்.
    ஆடி வெள்ளி சிறப்பு ஆடிவெள்ளி அன்று அம்மன் வழிபாடு மிகப் பிரசித்தம். இது சகல பாக்கியங்களையும் அள்ளித் தரும். குழந்தைப் பேறு கிடைக்கும்.
    ஆடி ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன்களையும், பிரார்த்தனைகளையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவது சிறப்பு.
    ஆடி அமாவாசை ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நதிகள், கடலில் புனித நீராடி முன்னோர்களை வணங்கி திதி கொடுப்பதும் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் புண்ணியம்.


    ஆடிப்பெருக்கு ஆடிப்பெருக்கு என்பது சிறப்புமிக்க விழாவாகும். இந்த விழா நம் கலாசாரத்தையும், உறவின் வலிமையையும் பிரதிபலிக்கும் அம்சமாக விளங்குகிறது. மேலும் நதிகள், நீர்நிலைகள், கடல் போன்ற இயற்கை அமைப்புகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் திகழ்கிறது. ஆடி 18ம் நாளில் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் கூடி வணங்குவார்கள். புதுமண தம்பதிகள் நிலாச்சோறு உண்டு, தாலி மாற்றி, புதுத் தாலிக்கயிறு அணிவதும் வழக்கமாகும். கன்னிப் பெண்கள் திருமணம் கூடிவர அம்மனை வேண்டி கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள்.
Working...
X