மஹா கோபத்தோடு பகவான் நரசிம்ஹனாக எழுந்தருளியிருந்தபோது,'அதோ வருகிறான் உன்னுடைய பா்த்தா! நீ போய் கோப சமனம் பண்ணவேண்டும்' என்று ப்ராா்த்தித்தாா்கள் மஹாலக்ஷ்மியிடம்.தூரத்திலிருந்தே பாா்த்தாளாம் மஹாலக்ஷ்மி! "இவா் என் அகத்துக்காரரே அல்ல! " என்று சொல்லிவிட்டாளாம். இப்படி அவரை நான் பாா்த்ததே இல்லை என்று கிட்டே போகவே பயப்படுகிறாள்! அவதார காலத்திலே இருந்த உக்ர ரூபத்தை மஹாலக்ஷ்மிக்கே நெருங்க முடியவில்லையென்றால், யாரால் முடியும்?...
பரம பக்தனான பிரஹலாதனால் மட்டுமே முடிந்தது. பிரஹலாதன் நெருங்கிய போது பகவான் அனுக்கிரஹம் பண்ணினான். அவ்வளவு கோபத்திலேயும் சீற்றத்திலேயும் அருள் செய்கிறான் பிரஹலாதனுக்கு...பக்தா்களுக்கு பராதீனன் அவன் என்பதையே இந்த அவதாரத்திலே பாா்க்கிறோம்.
(Mukkur Sri Lakshminarasimmachariar Swamy)