Announcement

Collapse
No announcement yet.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதைய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதைய&

    An excellent moral.
    பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,""அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.
    ""மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ''
    அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ""தேரை விட்டு இறங்கு!'' என்றார்
    கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
    அப்போது அவர்,"" தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்!
    அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி
    பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.
    வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.
    ""பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன்.
    "தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.
    ""அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.
    தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்துஅனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
    உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய். வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு
    வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார். தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.
    இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை

  • #2
    Re: இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதை&#29

    அன்பர் ஸ்ரீ அய்யர் அவர்களுக்கு நமஸ்காரம்,

    உண்மை, இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை
    தாங்கள் கூறிய இக்கதையை நான் பல ஆண்டுகளுக்குமுன் உடுப்பி பேஜவார் மடம் ஸ்ரீ விஷ்வேஷ தீர்த்த மகாஸ்வாமிகள் ஓர் சத் சபையில் வடமொழியில் அருளியதை கேட்டிருக்கிறேன் . சுவாமிகள் வடமொழியில் வல்லுநர் மொழியை சரளமாக கையாளுவார். இக்கதையின் முடிவில்
    " ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா நம் நாட்டில் இருக்கும் வரை எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது" என்று அவர் கூறிய வார்த்தைகள் அற்புதமான உண்மை..
    தங்கள் நலங்கோரும்

    ப்ரஹ் மண்யன்
    பெங்களூரு . .

    Comment


    • #3
      Re: இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதை&#29

      GOOD STORY....I EXPECTING A LOT LIKE THIS....

      Comment


      • #4
        Re: இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதை&#29

        Dear Sir,
        Please do not call it "A STORY'. Call it an interesting incident from the MAHABHARATHA,please. We believe in our Epics.
        I don't mean anything else.
        Varadarajan

        Comment


        • #5
          Re: இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதை&amp

          Originally posted by R.Varadarajan View Post
          Dear Sir,
          Please do not call it "A STORY'. Call it an interesting incident from the MAHABHARATHA,please. We believe in our Epics.
          I don't mean anything else.
          Varadarajan
          Yes You are correct I agree with you

          Comment


          • #6
            Re: இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதை&#29

            அருமையான பகிர்வு மாமா...மிக்க நன்றி
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #7
              Re: இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதை&#29

              Mr.Brahmanyan Thamilil "kadhai" enru 2 times avarathu karuthuraiyil Kuurierukkirar..enbathai thangal kavanaththukku kondu varugiren. mannikkavum . entha thavarana nookathudanum naan sollavillai."mahabharatha nigalvu manathai allum vithamaga irunthathu " ithu ok -va?

              Comment


              • #8
                Re: இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதை&#29

                ஸ்வாமின் நீர் ஏன் தமிழில் டயிப் பண்ண தெரிந்துகொள்ளலாமே . மிக அருமையாக போஸ்ட் செய்கிறீர்களே.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

                Comment


                • #9
                  Re: இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதை&amp

                  ஸ்வாமின்,
                  இதோ டைப் செய்து விட்டேன். நன்றாக அமைந்து விட்டது.
                  சில போஸ்ட் டைப் செய்து தான் போடுகிறேன். தமிழில் டைப் செய்வதற்கு
                  முன்னர் சிரமம் இருந்தது . தற்பொழுது சரளமாக வருகிறது . எல்லாம்
                  forum தந்த ஊக்கம் தான் . அனைவருக்கும் , அனைவரின் ஒத்துழைப்புக்கும்
                  மிக்க நன்றி .
                  தங்கள் ஆசிர்வாதம் என்றும் வேண்டும் . அன்புடன் ஜி ஜி மூர்த்தி அய்யர்

                  Comment

                  Working...
                  X