மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு , நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசனிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள்.
தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து, அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர். மார்கழியில் தினமும் பாடும் பக்திப் பாடல்களுடன் திருப்பாவை, திருவெம்பாவை, தொண்ரடிப் பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி யெழுச்சி, மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளி யெழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாராயணம் செய்கின்றனர்.
மார்கழியில் சிறப்பாகப் பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு. வைணவக் கோவில்கள் சிலவற்றில் மார்கழியில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.
Comment