ராதையின் பரிபூர்ண கிருஷ்ண பக்தியையும் பிரேமையையும் ஒரு சிறு கதை விளக்கும்:
ராதையும் கிருஷ்ணனும் என்னும்போது என்ன தோன்றுகிறது?. ரெண்டு தனி தனி உருவங்களாகவா? இல்லையே! .ஒரு கொடி கொழு கொம்பிலே சுற்றி படர்ந்திருப்பது போலவே கிருஷ்ணனின் உடலை ஆரத் தழுவியபடியோ, கிருஷ்ணனின் மீது சாய்ந்து, அவன் காலடியில் அமர்ந்து, அவனை ரசித்துக்கொண்டு, அவன் அவள் மடியிலோ, அல்லது அவள் அவன் மடியிலோ இருக்கும்படியான படங்களையோ, பொம்மைகளையோ தானே பார்க்கிறோம். யாருடைய கற்பனை இது?
ராதையும் கிருஷ்ணனும் என்னும்போது என்ன தோன்றுகிறது?. ரெண்டு தனி தனி உருவங்களாகவா? இல்லையே! .ஒரு கொடி கொழு கொம்பிலே சுற்றி படர்ந்திருப்பது போலவே கிருஷ்ணனின் உடலை ஆரத் தழுவியபடியோ, கிருஷ்ணனின் மீது சாய்ந்து, அவன் காலடியில் அமர்ந்து, அவனை ரசித்துக்கொண்டு, அவன் அவள் மடியிலோ, அல்லது அவள் அவன் மடியிலோ இருக்கும்படியான படங்களையோ, பொம்மைகளையோ தானே பார்க்கிறோம். யாருடைய கற்பனை இது?
Notice
ராதை கிருஷ்ணன் இருவரும் பரமாத்மா ஜீவாத்மா தத்துவத்தை உருவகப்படுத்தும் உருவங்களே. ஆண் பெண் உறவு காட்டும் படைப்பல்ல. பசு பதி தத்துவத்தின் வெளிப்பாடு. ராதையின்றி கிருஷ்ணன் இல்லை. கிருஷ்ணன் இன்றி ராதை இல்லை. ராதா என்ற பெயர் கிருஷ்ணா என்ற பெயரின்றி தனித்து உச்சரிக்கபடுகிறதா?. ராதா கிருஷ்ணனை கல்யாணம் பண்ணிகொள்ளவே இல்லையே! . ஏன் ராதா கல்யாணம் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு ஒவ்வொரு சீசனிலும் நடைபெறுகிறது? பார்க்கிறவர்களுக்கும் அலுக்கவேயில்லையே.? என்ன காரணம்?.பரிசுத்த காதல், பரிபூர்ண தியாகம் இவற்றாலேயே!.
Information
கிருஷ்ணன் பிருந்தாவனம் விட்டு மதுரா சென்ற நேரம் முதல் கடைசிவரை ராதாவை நாம் பார்க்க முடியாது. அதற்காக ராதா இல்லையா? கிருஷ்ணன் இருந்தவரை கிருஷ்ணன் என்ற நாமம் உச்சரிக்கப்படும் வரை, வழிபடும் வரை ராதா, கிருஷ்ணனில் ஐக்கியமானவள் ரெண்டாக தோன்றிய ஒன்று தானே தவிர ராதை கிருஷ்ணன் இருவரும். தனித்தனியாக இருவர் அல்ல
மனித காதலர்களாக பார்ப்பவருக்கு இன்பம் அளிக்கும் காட்சி ராதா கிருஷ்ணன் உறவு.
ஜீவாத்மா பரமாத்வாக பாவித்து ரசிப்பவர்க்கு உன்னத சரணாகதி தத்துவம் புகட்டும் தியாகம் பரிசுத்த அன்பு, நாயக நாயகி பாவம், ராதாக்ருஷ்ணன் கதையும் படமும்..
கதையில் இனி நான் சொல்ல என்ன அவசியம் உங்களுக்கே தெரியுமே!!. கிருஷ்ணன் அடுத்த நிமிஷமே குணமானான். ஒருவேளை ராதையின் தூய அன்பையும் உண்மைக் காதலையும் எடுத்துக்காட்ட அந்த மாயாவி போட்ட திட்டமா இந்த "வியாதி" நாடகம் !!!
ஒரு முறை பிருந்தாவனத்தில் நடந்த சம்பவம் மறக்க முடியாதது.
கோபியரில் ஒருவள் பிருந்தா. அவள் கிருஷ்ணனை தனியே அழைத்துக்கொண்டு போய் சல்லாபித்ததை ராதா பார்த்து விட்டாள் . பொறுப்பாளா? கோபம் தீயாக எழுந்தது. பிருந்தா இதை அறிந்து பயந்தால். ராதையின் கோபம் எப்படிப்பட்டது என்று அவளுக்குத் தெரியுமே. என்ன ஆகுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தாள் .
ராதையின் கோபம் கிருஷ்ணன் மேல் பாய்ந்தது. அவனை நோக்கி விரைந்தாள். ஸ்ரீ தமா என்கிற நண்பனோடு கண்ணன் பேசிக்கொண்டிருந்தான். கிருஷ்ணனை வாயாரத்திட்ட வந்த ராதாவை ஸ்ரீ தமா கவனித்தான். அவன் கிருஷ்ணனின் உயிர்த் தோழன். யாரேனும் கிருஷ்ணனை ஏதாவது சொன்னால், அவமதித்தால், ஏசினால், பொறுக்க மாட்டானே.
''ராதா, நன்றாக கேள், நீ ஏதாவது கிருஷ்ணனைப் பேசினால் நான் பொறுக்கமாட்டேன். உனக்கு சாபமிடுவேன். ஜாக்ரதை.
''ஸ்ரீ தமா, நீ மட்டும் தான் சாப மிடுவாயோ. நானும் தான். நீ ஒரு இழி குலத்தில் பிறந்து சகல துன்பமும் அனுபவிப்பாய்'' என ராத கடுங்கோபத்தோடு சாபமிட்டாள்.
''இதையும் கேட்டுக்கொள் ராதா. நீ எந்த கிருஷ்ணனை இடைவிடாது தொடர்ந்து வருகிறாயோ அந்த கிருஷ்ணனை நீ ஒரு நூறு வருஷம் கண்ணாலேயே கூட பார்க்காமல் துடிக்கப்போகிறாய்'' என்று பதிலுக்கு ஸ்ரீ தமா சாபமிட்டான்.
இரு சபாங்களுமே பலித்தன. கிருஷ்ணனின் கடைசி 100 வருஷங்களில் தான் ராதா அவனை சந்திக்கவே இல்லையே.
சில சம்பவங்களை நாம் அறியும்போது அந்த விஷயங்களை மட்டுமே கிரஹித்துக் கொள்வோம். அதன் நதி மூலம் ரிஷிமூலம் தேவையில்லை. அதைத் தேடிப்போனால் கதையின் ருசியை இழப்போம்.