Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினாறாவது அத்தியாயம் 16[1]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினாறாவது அத்தியாயம் 16[1]

    தெய்வாசுர சம்பத் விபாக யோகம்



    முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார்.
    அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.
    மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.



    श्रीभगवानुवाच
    अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
    दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥


    ஸ்ரீப⁴க³வாநுவாச
    அப⁴யம் ஸத்த்வஸம்ஸு²த்³தி⁴ர்ஜ்ஞாநயோக³வ்யவஸ்தி²தி: |
    தா³நம் த³மஸ்²ச யஜ்ஞஸ்²ச ஸ்வாத்⁴யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    அப⁴யம் ஸத்த்வஸம்ஸு²த்³தி⁴ = அஞ்சாமை, உள்ளத் தூய்மை,
    ஜ்ஞாநயோக³ வ்யவஸ்தி²தி: = ஞான யோகத்தில் உறுதி
    தா³நம் த³ம ச = ஈகை, தன்னடக்கம்
    யஜ்ஞஸ்²ச ஸ்வாத்⁴யாய: = வேள்வி, கற்றல்,
    தப ஆர்ஜவம் =தவம், நேர்மை
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.


    अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
    दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥१६- २॥


    அஹிம்ஸா ஸத்யமக்ரோத⁴ஸ்த்யாக³: ஸா²ந்திரபைஸு²நம் |
    த³யா பூ⁴தேஷ்வலோலுப்த்வம் மார்த³வம் ஹ்ரீரசாபலம் || 16- 2||
    அஹிம்ஸா = கொல்லாமை,
    ஸத்யம் = வாய்மை,
    அக்ரோத⁴: = சினவாமை,
    த்யாக³: = துறவு,
    ஸா²ந்தி = ஆறுதல்,
    அபைஸு²நம் = வண்மை,
    பூ⁴தேஷு த³யா = ஜீவதயை,
    அலோலுப்த்வம் = அவாவின்மை,
    மார்த³வம் ஹ்ரீ: = மென்மை, நாணுடைமை,
    அசாபலம் = சலியாமை
    கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,


    तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।
    भवन्ति संपदं दैवीमभिजातस्य भारत ॥१६- ३॥


    தேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சமத்³ரோஹோ நாதிமாநிதா |
    ப⁴வந்தி ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதஸ்ய பா⁴ரத || 16- 3||
    தேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சம் = ஒளி, பொறை, உறுதி, சுத்தம்,
    அத்³ரோஹ: = துரோகமின்மை –
    ந அதிமாநிதா = செருக்கு கொள்ளாமை
    தை³வீம் ஸம்பத³ம் = தெய்வ சம்பத்தை
    அபி⁴ஜாதஸ்ய ப⁴வந்தி = எய்தியவனிடம் காணப்படுகின்றன
    பா⁴ரத = பாரதா
    ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!


    दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च ।
    अज्ञानं चाभिजातस्य पार्थ संपदमासुरीम् ॥१६- ४॥


    த³ம்போ⁴ த³ர்போऽபி⁴மாநஸ்²ச க்ரோத⁴: பாருஷ்யமேவ ச |
    அஜ்ஞாநம் சாபி⁴ஜாதஸ்ய பார்த² ஸம்பத³மாஸுரீம் || 16- 4||
    பார்த² = பார்த்தா
    த³ம்ப⁴: த³ர்ப: அபி⁴மாந ச = டம்பம், இறுமாப்பு, கர்வம்
    க்ரோத⁴: பாருஷ்யம் ஏவ ச = சினம், கடுமை
    அஜ்ஞாநம் ஏவ = அஞ்ஞானம்
    ஆஸுரீம் ஸம்பத³ம் = அசுர சம்பத்தை
    அபி⁴ஜாதஸ்ய = எய்தியவனிடம் காணப் படுகின்றன
    டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!


    दैवी संपद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
    मा शुचः संपदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥१६- ५॥


    தை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா |
    மா ஸு²ச: ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோऽஸி பாண்ட³வ || 16- 5||
    தை³வீ ஸம்பத் விமோக்ஷாய = தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம்
    ஆஸுரீ நிப³ந்தா⁴ய மதா = அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை
    பாண்ட³வ = பாண்டவா
    தை³வீம் ஸம்பத³ம் அபி⁴ஜாத: அஸி = தேவ சம்பத்தை எய்தி விட்டாய்
    மா ஸு²ச: = துயரப்படாதே
    தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே


    द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
    दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥१६- ६॥


    த்³வௌ பூ⁴தஸர்கௌ³ லோகேऽஸ்மிந்தை³வ ஆஸுர ஏவ ச |
    தை³வோ விஸ்தரஸ²: ப்ரோக்த ஆஸுரம் பார்த² மே ஸ்²ருணு || 16- 6||
    பார்த² = பார்த்தா
    அஸ்மிந் லோகே = இவ்வுலகத்தில்
    பூ⁴தஸர்கௌ³ த்³வௌ ஏவ = உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும்
    தை³வ ஆஸுர ச = தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது
    தை³வ: விஸ்தரஸ²: ப்ரோக்த = தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன்
    ஆஸுரம் மே ஸ்²ருணு = அசுர இயல் பற்றி என்னிடம் கேள்
    இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.


    प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुराः ।
    न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते ॥१६- ७॥


    ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விது³ராஸுரா: |
    ந ஸௌ²சம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்³யதே || 16- 7||
    ஆஸுரா: ஜநா = அசுரத் தன்மை கொண்டோர்
    ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது³ = தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார்
    தேஷு ஸௌ²சம் ந = அவர்களிடம் தூய்மையேனும் இல்லை
    ஆசார: ச ந = ஒழுக்கமேனும் இல்லை
    ஸத்யம் அபி ந வித்³யதே = வாய்மையேனும் காணப்படுவதில்லை
    அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.


    असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।
    अपरस्परसंभूतं किमन्यत्कामहैतुकम् ॥१६- ८॥


    அஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஸ்²வரம் |
    அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமந்யத்காமஹைதுகம் || 16- 8||
    ஜக³த் அஸத்யம் அப்ரதிஷ்ட²ம் = இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும்
    அநீஸ்²வரம் = கடவுளற்றதென்றும்
    அபரஸ்பரஸம்பூ⁴தம் = சொல்லுகிறார்கள்
    காமஹைதுகம் = காமத்தை ஏதுவாக உடையது
    அந்யத் கிம் தே ஆஹூ: = இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்?
    அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.


    एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।
    प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥१६- ९॥


    ஏதாம் த்³ருஷ்டிமவஷ்டப்⁴ய நஷ்டாத்மாநோऽல்பபு³த்³த⁴ய: |
    ப்ரப⁴வந்த்யுக்³ரகர்மாண: க்ஷயாய ஜக³தோऽஹிதா: || 16- 9||
    ஏதாம் த்³ருஷ்டிம் அவஷ்டப்⁴ய = இந்தக் காட்சியில் நிலைபெற்று
    அல்பபு³த்³த⁴ய: நஷ்டாத்மாந: = அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள்
    அஹிதா: = தீமையையே நினைப்பவர்களாக
    உக்³ரகர்மாண: = கொடிய தொழில் செய்பவர்களாக
    ஜக³த: க்ஷயாய ப்ரப⁴வந்தி = உலக நாசத்திற்கே முனைகிறார்கள்
    இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.


    काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।
    मोहाद्*गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः ॥१६- १०॥


    காமமாஸ்²ரித்ய து³ஷ்பூரம் த³ம்ப⁴மாநமதா³ந்விதா: |
    மோஹாத்³க்³ருஹீத்வாஸத்³க்³ராஹாந்ப்ரவர்தந்தேऽஸு²சிவ்ரதா: || 16- 10||
    த³ம்ப⁴மாந மதா³ந்விதா: = டம்பமும் மதமும் பொருந்தியவராய்
    து³ஷ்பூரம் = நிரம்பவொண்ணாத
    காமம் ஆஸ்²ரித்ய = காமத்தைச் சார்ந்து
    மோஹாத் அஸத்³க்³ராஹாந் க்³ருஹீத்வா = மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு
    அஸு²சிவ்ரதா: ப்ரவர்தந்தே = அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்
    நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.


    चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।
    कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥१६- ११॥


    சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்²ரிதா: |
    காமோபபோ⁴க³பரமா ஏதாவதி³தி நிஸ்²சிதா: || 16- 11||
    ப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம் = பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில்
    உபாஸ்²ரிதா: = பொருந்தி
    காமோபபோ⁴க³பரமா: ச = விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய்
    ஏதாவத் இதி நிஸ்²சிதா: = ‘உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக
    பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ‘உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராய்,


    आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः ।
    ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥१६- १२॥


    ஆஸா²பாஸ²ஸ²தைர்ப³த்³தா⁴: காமக்ரோத⁴பராயணா: |
    ஈஹந்தே காமபோ⁴கா³ர்த²மந்யாயேநார்த²ஸஞ்சயாந் || 16- 12||
    ஆஸா²பாஸ²ஸ²தை = நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால்
    ப³த்³தா⁴: = கட்டுண்டு
    காம க்ரோத⁴பராயணா: = காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க்
    காமபோ⁴கா³ர்த²ம் = காம போகத்துக்காக
    அந்யாயேந அர்த² ஸஞ்சயாந் = அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க
    ஈஹந்தே = விரும்புகிறார்கள்
    நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.


    इदमद्य मया लब्धमिमं प्राप्स्ये मनोरथम् ।
    इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥१६- १३॥


    இத³மத்³ய மயா லப்³த⁴மிமம் ப்ராப்ஸ்யே மநோரத²ம் |
    இத³மஸ்தீத³மபி மே ப⁴விஷ்யதி புநர்த⁴நம் || 16- 13||
    மயா அத்³ய இத³ம் லப்³த⁴ம் = என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது
    இமம் மநோரத²ம் ப்ராப்ஸ்யே = இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்
    மே இத³ம் த⁴நம் அஸ்தி = என்னிடம் இந்த செல்வம் உள்ளது
    புந: அபி இத³ம் ப⁴விஷ்யதி = இனி இன்ன பொருளை பெறுவேன்
    “இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”


    असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।
    ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥१६- १४॥


    அஸௌ மயா ஹத: ஸ²த்ருர்ஹநிஷ்யே சாபராநபி |
    ஈஸ்²வரோऽஹமஹம் போ⁴கீ³ ஸித்³தோ⁴ऽஹம் ப³லவாந்ஸுகீ² || 16- 14||
    அஸௌ ஸ²த்ரு மயா ஹத: = இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்
    ச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே = இனி மற்றவர்களைக் கொல்வேன்
    அஹம் ஈஸ்²வர: போ⁴கீ³ = நான் ஆள்வோன், நான் போகி
    அஹம் ஸித்³த⁴: = நான் சித்தன்
    ப³லவாந் = பலவான்
    ஸுகீ² = சுகத்தை அனுபவிப்பவன்
    “இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”


    आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
    यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥१६- १५॥


    ஆட்⁴யோऽபி⁴ஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்³ருஸோ² மயா |
    யக்ஷ்யே தா³ஸ்யாமி மோதி³ஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: || 16- 15||
    ஆட்⁴ய: அபி⁴ஜநவாந் அஸ்மி = நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன்
    மயா ஸத்³ருஸ²: அந்ய: க: அஸ்தி = எனக்கு நிகர் வேறு யாவருளர்?
    யக்ஷ்யே = வேள்வி செய்கிறேன்
    தா³ஸ்யாமி = கொடுப்பேன்;
    மோதி³ஷ்ய = களிப்பேன்
    இதி அஜ்ஞாநவிமோஹிதா: = என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்
    “நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
    Continued
    Source:Sanathanam.com
Working...
X