Announcement

Collapse
No announcement yet.

Sivaya Nama & its meaning

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sivaya Nama & its meaning

    Courtesy:Sri.GS.Dattatreyan




    சிவாயநம! சிவாயநம! சிவாயநம!






    பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்," என்றார்.
    நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
    பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்," என்றார்.
    ""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்," என நடுங்கினார்.
    ""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
    நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!" என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
    அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்," என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
    ""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்," என்றார்.
    நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.



    அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
    பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள்
    . "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்."சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்," என்றது.
    பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்

  • #2
    Re: Sivaya Nama & its meaning

    சிவாயநம: என்றால் ஒருவர் மரித்து மறுபிறவி எடுக்கலாம் என்று சொல்கிறீர். எனக்கு மறு பிறவி வேண்டாம் என்று கேட்பவர்கள் "ஓம் ஸ்ரீ நாராயணாய நம": என்று சொல்லலாமா.? இதையும் விவரிக்கலாமே.

    Comment


    • #3
      Re: Sivaya Nama & its meaning

      ""முனிவரே! இந்த மந்திரத்தைக் {கேட்டதால்}வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்." "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் {பிறவியில் இருந்து விடுபடுவர்,"}

      வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
      பெருந்துயர் இடும்பையில் பிறந்து
      கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
      அவர்தரும் கலவியே கருதி
      ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
      உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
      நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
      நாராயணா என்னும் நாமமே
      திருமங்கையாழ்வாரின் இப்பாசுரம் இந்த 2 மேற்கோள்களும் தங்கள் கேள்விக்கான பதிலாய் அமைந்துவிட்டது


      - - - Updated - - -
      Last edited by soundararajan50; 07-12-14, 14:42.

      Comment


      • #4
        Re: Sivaya Nama & its meaning

        மேற்கண்ட பாசுரம் எதோ எனது கேள்விக்கு பதிலாக அமைந்து விட்டது என்று சொல்கிரீர் . ஆனால் எனக்கு அதனுடைய அர்த்தம் தெரியவில்லையே ஸ்வாமின். தயை செய்து அடியேனுக்கு அதன் முழு அர்த்தத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன் .

        Comment


        • #5
          Re: Sivaya Nama & its meaning

          யார் தெரிந்து கொண்டார், என்ன தெரிந்து கொண்டார்?
          எப்படித் தெரிந்து கொண்டார்? யார் சொல்லிக் கொடுத்தார்கள் அவருக்கு?
          அப்படி எனன விஷேஷம், அந்த நாமத்தில்? அதனைத் தெரிந்து கொள்ள, தன்னுடைய தவறுகளை மன்னித்த, அவரை எப்படிக் கண்டு கொண்டார்? தன்னுடைய ’ஆடல்மா’ குதிரையில் ஏறி மிக அதிகமான திவ்விய தேசங்களுக்கு சென்று பாசுரங்களைப் பாடியவர்யார்?
          என்று பல கேள்விக்ளுக்கு பதில், வேறு யாராக இருக்க முடியும், ‘கலியன்’ என்ற பெயர் கொண்ட ’திருமஙகையாழ்வாரை”த் தவிர!!!
          நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் மிக அதிகமான பாசுஙகளை பாடியவர், கிட்டத்தட்ட ஆயிரம் பாசுஙகளுக்கு மேல்,
          எப்படி இறைவனால், நாராயணனால் ஆட்கொள்ளப்பட்டார்
          என்பது மிகப் பெரிய கதை!!
          திருக்குறையலூர், சோழ நாட்டில் உள்ள சிறிய ஊர், மிகப் பெரிய ஆழ்வாரைக் கொடுக்கும் என்று அவருடைய தந்தை, ஆலிநாடர் கூட, நினைத்து இருக்கமாட்டார். நீலன், அதுதான் தந்தை இட்ட திருநாமம் அவருக்கு. இவருடைய வீரத்துக்கும், விவேகத்துக்கும் உரிய சன்மானத்தை, திருமங்கை என்னும் சிற்றூரை சோழ மன்னன் பரிசாகக் கொடுத்தான்.
          ’பரகாலன்’ என்ற பட்டப் பெயரோடு வாழ்க்கையை துவங்கிய இவருக்கு விதி என்ன செய்தது!!!!
          பாருங்கள்!
          சுமங்கலி என்னும் தேவகன்னிகை, தன் பிறப்பு அறிநதவள், ஒரு அந்தணர் வீட்டில் குமுதவல்லி என்னும் பெயரோடு வளர்ந்து வரும் இவர், பரகாலனை மாற்ற வந்தவர் என்றே கொள்ளலாம்.
          பரகாலன் குமுதவல்லியை சந்திக்க வேண்டும் என்பது விதி தானே?
          என்ன நடந்தது?
          கண்டதும் காதல், என்னமோ இந்தக் காலத்தில் மட்டும் தான் நடக்க முடியுமா?
          குமுதவல்லியைக் கண்டதும் காதல் கொண்டார், அவள்தான் தன் மனைவி என்பதில் உறுதி கொண்டார்.
          'நான் தஙகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், தங்களுக்குச் சம்மதமா?”
          பரகாலன் குமுதவல்லியைப் பார்த்து நேராகவே கேட்கிறார்.
          தான் ஒரு வைஷ்ணவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை கொண்ட குமுதவல்லி, ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
          “அதெல்லாம் சரி, நான் உங்களைத் திருமணம் செய்ய வேண்டுமானால்.....”
          இழுப்பதைப் பார்த்த பரகாலன் சிறிதே தடுமாறி,
          “நீங்கள் என்ன நிபந்தனை போட்டாலும் சம்மதம், அதற்கு நான் தயார்,” என்கிறார்.
          “நீங்கள் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும், இதுதான் நிபந்தனை,’ என்கிறார் குமுதவல்லி அம்மையார்.
          ’அப்படி என்றால்.....”,
          பரகாலன். இவரோ அந்தணர் அல்ல, அதனால் பஞ்ச ஸ்ம்ஸ்காரம் என்றால்
          என்ன என்பது இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
          அதுசரி எத்தனை அந்தணருக்குத் தெரியுங்கிறிஙகளா? அதுவும் சரிதான்.
          பெருமாளின் திருஅடையாளங்களான சக்கரம் மற்றும் சங்கு ஆகியவற்றை தங்கள் தோளில் அணிவது, இறைவனின் பனிரெண்டு திருப்பெயர்களை சொல்லிக் கொண்டு பனிரெண்டு இடங்களில் திருமண் அணிதல், தன்னுடைய பெயரை பெருமானின் அல்லது ஆசாரியன் பெயர்கள் ஏதாவது
          ஒன்றை குருவின் மூலம் வைக்கப் பெறுதல், மறைபொருளை குருவின் மூலம் காதில் உப்தேசம் பெறுதல், திருவாராதனை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்
          என்பதே இந்த பஞச ஸ்ம்ஸ்காரம் ஆகும். இப்படிச் செய்தால் ஒருவர் வைஷ்ணவர் என்று பொருள்.
          பரகாலனோ அந்தணர் அல்லாதவர்.அவ்ருக்கு யார் இந்த பஞசஸ்ம்ஸ்காரம் செய்து வைப்பார்கள்?
          எங்கெங்கோ தேடினார், யாராவது தனக்கு பஞசஸ்ம்ஸ்காரம் செய்து வைப்பார்களா என்று!
          ஒருவரும் தயாரில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை?
          ஆண்டவன் தானே இந்த விளையாடளை ஆரம்பித்து வைத்தான், அதனால் அவனே தான் இதையும் முடிக்க வேண்டும்.
          பார்த்தார், ஆம், அவரையே குருவாகத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானித்து விட்டார்.
          திருநரையூர் பெருமானிடம் விண்ணப்பித்தார், தனக்கு பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து வைககவேண்டும் என.
          இறைவனே பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து வைத்து ஒரு ரெக்கார்டு உண்டாக்கிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்
          ”நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தணர் ஆகி விட்டேன், இப்போது திருமணம் செய்து கொள்ளத் தடையில்லையே?”,
          மீண்டும் போய் குமுதவல்லியிடம் முறையிட்டார்.
          ’அதெல்லாம் சரி, இப்போது நீங்கள் ஒரு வருஷத்திற்கு ஆயிரெத்தெட்டு அந்தணர்களுக்கு தினமும் உணவளிக்க வேண்டும், அப்போதுதான் நம் திருமணம்”.
          புதிய நிபந்தனையைக் கேட்டு பரகாலன் அசரவில்லை.
          “அதற்க்கென்ன செய்துவிட்டால் போயிற்று” என்றார்.
          திருமணமும் இனிதாக நடைபெற்றது.
          ஆனால்!!!!!!
          ஒருத்தருக்கு சாப்பாடு போடுவதே சிரமம், அதுவும் ஆயிரத்தெட்டு பேருக்கு,அதுவும் ஒரு
          வருஷத்துக்கு!!!!
          முடியுமா?
          முடியவில்லை.
          தன் செல்வம் கரைந்தது. மன்னனுக்கு கப்பம் கட்ட முடியவில்லை.
          பார்த்தார், மன்னன். பரகாலனுடன் போரிட்டு அவ்ரைச் சிறை வைத்தார். திரையைக் கொடுக்கிறேன்,
          மந்திரியை என்னுடன் காஞ்சீபுரம் அனுப்புங்கள், அங்கு உஙகள் திரையை கொடுக்கிறேன், என்று
          மந்திரியைக் வேகவதி ஆற்றின் கரையில் கிடைத்த புதையிலில் ஒரு பகுதியை கப்பமாகக்
          கொடுத்து மீதியை அன்னதானத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
          மீண்டும் பணத்தட்டுப்பாடு.
          வெறும் கையால் முழம்போடமுடியுமா?
          பார்த்தார், நாலு பேருக்கு நல்லது செய்ய, என்ன செய்தாலும் தகும் என்று ஒரு விதியை சாக்காகக்
          கொண்டு வழிப்பறி செய்யத் துவங்கினார்.
          அந்த காலத்து ‘ராபின்குட்’ ஆனார்.
          செல்வம் உள்ளவர்களை வழிமறித்து, அந்தப் பணத்தில் இருந்து ஏழை அந்தனர்களுக்கு
          அன்னமிட்டார்.
          விதி யாரையும் விடாது!!
          ஆனால் விதியை மாற்றும் சக்தி அவன் ஒருவனுக்கு மட்டும் தான் உண்டு.
          பார்த்தான் இறைவன், இவரை ஆட்கொள்ள நேரம் வந்துவிட்டது என, மாறுவேடம் பூண்டு
          இறைவனும், இறைவியுமாக மணக்கோலம் பூண்டு எல்லா ஆபரணங்களோடும் திருமணங்கொல்லை
          கானகத்தின் வழியே ஆடல் பாடல் இசைக்க செல்கிறான்.
          பார்த்தான் பரகாலனும் அவன் கூட்டாளிகளும். நல்ல வேட்டை.
          மணமக்களிடமிருந்து எல்லா ஆபரண்ங்களையும் கழட்டச் சொன்னான். பகவான் காலில் இருந்த
          மெட்டியை தன் வாயால் கடித்து கழற்றி, நகை மூட்டைகளை கட்டி தூக்க, கனமாக இருந்ததால்
          என்ன முயன்றும் முடியவில்லை.
          பரகாலன், “என்ன மந்திரவாதியா நீ? என்ன மந்திரம் செய்தாய், இந்த சிறு மூட்டையைத்
          தூக்க முடியவில்லை, அந்த மந்திரத்தை எனக்கும் சொல்”.
          பரந்தாமன் புன் சிரிப்புடன், “நம் கலியா, அருகில் வா, அந்த மந்திரத்தை உனக்கும் சொல்கிறேன்”,
          என்று அருகில் அழைத்து, காதில், “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்*ஷர மந்திரத்தை
          ஒத, பரகாலன் அப்போதுதான், வந்திருப்பது மானிடன் அல்ல, தன்னை ஆட்கொள்ள் வந்த
          பரமன் என்று புரிந்து கொண்டான்.
          இறைவன் மீதான பக்தி வெள்ளம் தன்னுள்ளே பாய, பரகால்ன்,
          ”வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
          பெருந்துயர் இடும்பையில் பிறந்து
          கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
          அவர்தம் கலவியே கருதி
          ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
          உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
          நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
          நாராயணா என்னும் நாமம்”
          என்று பாடத் துவஙகினார்.
          அத்துடன் நிறுத்திக் கொண்டாரா? இல்லை! பெரிய திருமொழி என்ற வகையில் சுமார் 1100 பாசுரங்களுக்கு
          மேல் பாடியுள்ளார்.


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: Sivaya Nama & its meaning

            NVS Swamin,
            Splendid I am spellbound.I don't think that there can be more suitable explanation, to our honourable senior member Sriman.Narasimhan sir,than this.
            Last edited by soundararajan50; 09-12-14, 11:57. Reason: To clarify Sri Narasimhan this reply given to Nvs sir

            Comment


            • #7
              Re: Sivaya Nama & its meaning

              Dear Sir,
              ""முனிவரே! இந்த மந்திரத்தைக் {கேட்டதால்}வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்." "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் {பிறவியில் இருந்து விடுபடுவர்,"}
              you first part of the question is by pronouncing "sivaya nama" one can take rebirth.You have not read the post properly .It is mentioned by
              listening the sivaya nama mantra not Pronouncing
              By pronouncing
              {பிறவியில் இருந்து விடுபடுவர்,"}
              SO,the second part of your question in my opinion is irrelevant.However I have answered your qyuestion's second part i.e.மறு பிறவி வேண்டாம் என்று கேட்பவர்கள் "ஓம் ஸ்ரீ நாராயணாய நம": என்றுசொல்லலாமா.? by way of Thirumangaiyazhwar Pasuram. The explanation to this is so beautifully given by Our BMBC Admin.
              Last edited by soundararajan50; 08-12-14, 09:12. Reason: spelling mistake

              Comment


              • #8
                Re: Sivaya Nama & its meaning

                SWAMIN I DO NOT KNOW WHY YOU SHOULD HAVE BEEN SPELLBOUND ON MY ASKING FOR A CLARIFICATION. மேற்கண்ட பாசுரத்தின் கடைசியில் 'நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று முடிக்கிறார் பரகாலர். இதிலிருந்து நாம் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது நாராயணா என்று சொன்னாலே நமக்கு மறு பிறவி இல்லை என்பது நிதர்சனமாகிறது அல்லவா. அதைத்தான் அடியேன் சொல்லலாமா என்று கேட்டேன் அதாவது சொல்லலாம் அல்லவா என்பதே அதன் பொருள்..கலியன் அல்லது பரகாலன் அவரை அடியோங்களாள்கிய ஸ்ரீ வைஷ்ணவர்கள் "திருமங்கை ஆழ்வார் " என்று எல்லா வைஷ்ண கோவில்களிலும் ஏள்ள பள்ளி உர்ச்சவாதிகளையும் செய்துகொண்டு தான் இருக்கின்றோம். BMBC சொன்ன பரகாலன் விருத்தாந்தம் அடியேனுக்கும் தெரிந்ததே.எப்படி இருந்தாலும் தங்களுக்கும் தங்கள் சார்பாக விவரித்த ஸ்ரீ BMBC அவர்களுக்கும் அடியேனுடைய க்ருதுஞையை சமர்பிக்கின்றேன் .
                ஓம் ஸ்ரீ நாராயணாய நம


                நாராயணா; நாராயணா; நாராயணா.




                வாசக தோஷம் க்ஷந்தவ்ய
                Last edited by P.S.NARASIMHAN; 08-12-14, 11:36.

                Comment

                Working...
                X