ப்ரதிஷ்டாம் ஸர்வசித்ராணாம் ப்ரபத்யே மணிபாதுகாம் l விசித்ரஜகதாதாரோ விஷ்ணுா் யத்ர ப்ரதிஷ்டித: ll
ஸகல ஆச்சரியங்களுக்கும் இருப்பிடமானதும்,பலவகைப்பட்டதும் ஆச்சரியமான உலகுக்கு ஆதாரமான பகவான் நிலைபெற்றிருக்கும் இடமான ரத்தினப் பாதுகையைச் சரணமடைகிறேன்
ஸ்ரீ ரங்கநாத பாதுகையே! பாதைகளில் நீ ஸஞ்சரிக்கும் போது உண்டாகும் மங்களகரமான தூளிகளால் பூமியை அழகுபடுத்துகிறாய் .இனிய முடிவுகளையுள்ள இன்பங்களை அளிக்கிறாய். நீ உலகமனைத்தும் வணங்குதற்குரியவள். உன்னை சரணடைந்தவா்களுக்கு சாசுவதமான காமதேனுவாகவிருக்கிறாய்.