திருமொபெரியாழ்வார்ழித் தனியன்
பாண்டியன் கொண்டாடப் பட்டா்பிரான் வந்தானென்று ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று
பாண்டிய மன்னன் பரத்துவத்தை நிறுவி நம்மைத் தெளிவித்த பட்டா் பிரான் புலவா்கட்குத் தலைவனாம் பெரியாழ்வார் வந்தார் என்று புகழ்ந்தான்.அவையில் பலரும் சங்குகளை முழங்கி வரவேற்றனா்.அந்தணா்கள் தலைவரான பெரியாழ்வார் வேதக் கருத்துக்களை எடுத்துரைத்து,ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற் கடவுள் என்பதை நிலைப்படுத்தி அங்கே பரிசிலாகக் கட்டி விடப்பட்டிருந்த பொற்கிழியைப் பெற்றுக் கொண்ட பெரியாழ்வாரின் திருவடிகளே நமக்கு அடைக்கலமாகும்