Information
ஜபத்தின் மஹிமைய நன்றாக அறிந்தவர் வஸிஷ்டர். ஸ்ரீராமாயணத்தில் 'வஸிஷ்டம் ஜபதாம் வரம்'என்று ஜபம் செய்கிறவர்களில் சிரேஷ்டர் அவர்தாம் என்று சொல்லியிருக்கிறது. மகாபாரதத்தில் ஜபம் செய்கிறவர்களின் கதி என்ன என்று யுதிஷ்டிரர் கேட்க, பீஷ்மர் சொல்கிறார்- ''ஆசமனம் பிராணாயாமம் அங்கந்யாஸம் முதலிய அங்கங்களின்றி ஜபம் செய்கிறவன், சிரத்தையில்லாமலும் ஸந்தோஷமில்லாமலும் ஜபிக்கிறவன், அகங்காரமுடையவன் இவர்கள் நரகம் செல்வர். எந்த விஷயத்தில் அவனுக்கு ஆசை விழுகிறதோ அதில் பிறப்பான். சஞ்சல புத்தியுடன் செய்பவன் சஞ்சல கதியடைவான். ஹடத்தால் ஜபிப்பவனும் நல்ல கதியடையான் நரகத்தையே அடைவான். காமகாமியாக இருந்து பிரணவத்தை ஜபம் செய்தவனும் நரகத்துக்கே போவான்''என்கிறார்.
பிராம்மணன் :- தர்மமே, எனக்கு லோகம் எதற்கு?துக்க ஸுக ஸம்பந்தமுள்ள தேகத்தை மறுபடியும் அடைய மாட்டேன். நேராக மோக்ஷம் போவேன். c செல்வாயாக.
தர்மம் :- c அவசியமாகச் சரீரத்தை விட வேண்டும். ஆகவே ஸ்வர்க்கத்துக்குப் போ.
பிராம்மணன் :- தேகமில்லாமல் ஸ்வர்க்கத்தையும் நான் இச்சிக்கவில்லை. ஆதலால் எனக்கு ஸ்வர்க்கம் வேண்டாம்.
தர்மம் :- தேகத்தில் ஆஸ்தையை விடு. தேகத்தை விட்டு, ரஜஸ் இல்லாத லோகத்துக்குச் செல்.
பிராம்மணன் :- ஜபத்தில் ரமிக்கிறேன். அந்த ஸநாதன உலகங்கள் எனக்கு வேண்டாம். சரீரத்துடன் ஸ்வர்க்கம் போனால் போவேன்; இல்லையேல் வேண்டாம்.
''உனக்கு சரீரத்தை விட இஷ்டமில்லாவிட்டால் இதோ காலன், ம்ருத்யு, யமன் மூவரும் உன்னிடம் வருகிறார்கள்''என்று சொல்லித் தர்மம் மறைந்தது. அப்படியே ஆயுளை நிர்ணயிக்கும் காலதேவதையும் பிராணனைக் கொண்டு போகும் ம்ருத்யுவும் புண்ய பாபங்களுக்குப் பலனைக் கொடுக்கும் யமதேவதையும் அவனிடம் வந்தனர்.
யமன் :- c செய்கிற நல்ல தவத்திற்கும் ஆசரணைக்கும் பலன் கிடைத்திருக்கிறது. நான் யமன், உனக்குச் சொல்கிறேன்.
காலன் :- c செய்த ஜபத்திற்கு உத்தம பலன் கிடைத்திருக்கிறது. உனக்கு ஸ்வர்க்கத்தை ஏற இதுவே காலம்.
ம்ருத்யு :- நான் ம்ருத்யு. காலத்தால் ஏவப்பட்டு உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன்.
பிரம்மணன் அவர்களுக்கு ஸ்வாகதம் உரைத்து அர்க்யம், பாத்யம், ஆசமனீயம் இவற்றை அளித்தான். அப்பபொழுது தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்த இக்ஷ்வாகு என்ற அரசனும் அவ்விடம் வந்தான். பிராம்மணன் இக்ஷ்வாகுவையும் பூஜித்து, ''அரசரே, நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?''என்றான்.
அரசனோ, ''நான் அரசன்;நீர் பிராம்மணர். உமக்குப் பணம் வேண்டியதைக் கொடுக்கிறேன்''என்றான்.
பிராம்மணன் தான் நிவிருத்தி மார்க்கத்தில் இருப்பதால் பணம் வேண்டாமென்றும், தன் தவத்தால் அரசனுக்கு வேண்டியதை அளிப்பதாகவும் கூறினான்.
அரசன், ''நான் யாசிப்பதில்லை. ஆனால், நீங்கள் பிரதிஜ்ஞை செய்வதால் தங்களுடைய ஜபபலனைக் கொடுங்கள்''என்றான்.
பிராம்மணன் அப்படியே தான் செய்த ஜபபலத்தை அவனிடம் அர்ப்பணம் செய்தான்.
அரசன், ''உன் ஜபத்திற்குப் பலன் என்னவென்று தெரியாதபடியால் அதைச் சொல்''என்று வினவ, பிராம்மணன், ''நான் ஜபத்திற்குப் பலனை உத்தேசிக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரியாது. நீர் பலனைக் கேட்டபடியால் கொடுத்துவிட்டேன். அஸத்தியம் மிகவும் கொடியது. ஸத்தியம் தவங்களைக் காட்டிலும் பெரிய தவம். ஆதலால் நான் தவறமாட்டேன்''என்றான்.
ராஜா, ''அறிவதும் உலகை ரக்ஷிப்பதும் எங்கள் தர்மம், க்ஷத்திரியர்கள் கொடையாளிகள்;வாங்குபவரல்ல''என்றான்.