ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்தியஉரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.
தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.
ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?”
‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”
‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.”
‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”
‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”
‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.
‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை.
SIMPLE TRANSLATION IN ENGLISH AS UNDER:-
Narrating an incident between narayana bhattathri and guruvayoorappan. First Nb asks what neyvethyam you want god; ghee payasam Nb if I cannot offer ghee payasam what else. God : aval and jaggery. NB : If I do not have aval and jaggery what else; god; banana or milk or curd Nb; if I do not have these god: thulasi ok; NB ; if I do nit have thulasi what else God; 1 spoon of theertham enough NB; Even if I do not have theertham to offer; God; then you will certainly cry for not offering anything to me that tears from your eyes are enough for my neyvethyam; NB; Started crying for god's words. GOD DOES NOT EXPECT ANYTHING FROM HIS DEVOTEES.

Comment