முருகப்பெருமான் திருக்கை வேலின் புகழ் பாடும் ‘வேல்மாறல்’ பற்றிய தொடரின் அடுத்த பாகம் இது. கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரமே ஆகும்.
(‘வேல்மாறல்’ பற்றிய தொடரை நாம் ஆரம்பித்த நேரம், சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘சக்தி விகடன்’ இதழிலும் ‘வேல்மாறல்’ குறித்த கட்டுரை இலவச இணைப்புடன் இடம்பெற்றுள்ளது!)
‘வேல்மாறல்’ பற்றி நீங்கள் கேள்விப்படுகிறீர்கள் மேலும் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் கொள்ளவேண்டும்.
காரணம்… மேலே படியுங்கள் உங்களுக்கே விளங்கும்!
================================================================
கலியுகத்தில் தர்மதேவதையின் நிலை!
தர்மமானதை ஒரு பசுவாக முதலில் உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.
நான்கு யுகங்களில் முதல் யுகம், கிருத யுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் யாவரும் தத்தமது தர்மங்களை பூரணமாக கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு இருக்கும்.
அடுத்த யுகமான திரேதா யுகத்தில், மனிதர்களுக்கு தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில், பசு ரூபத்தில் உள்ள தர்ம தேவதை தனது ஒரு காலை இழந்து மற்ற மூன்று கால்களுடன் சிரமப்படும். அதாவது தர்மம் உலகில் முழுமையாக இல்லாது ஆங்காங்கு குறைந்துகாணப்படும்.
அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும் குறையும். மனிதர்களில் துர்குணம் கொண்டவர்கள் மிகுதியாக இருப்பார்கள். தர்மத்தின் கால்களில் இன்னொன்று குறையும். இரண்டு கால்களோடு ஒரு பசு எவ்வளவு சிரமப்படும் என்று யோசித்து பாருங்கள். அவ்வளவு சிரமம் துவாபர யுகத்தில் தர்மத்திற்கு ஏற்படும்.
தற்போது நடப்பது நான்காவது யுகமான கலியுகம். இதில் தர்மம் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலுடன் திண்டாடும். அதாவது உலகில் அதர்மம் முக்கால் பங்கு ஓங்கியிருக்கும். அதாவது ஆங்காங்கே தர்மம் திண்டாடிக்கொண்டிருக்கும். இப்போது கலியுகம் தொடங்கி 5100 வருடங்கள் ஆகின்றன. இப்போதே தர்மத்தின் திண்டாட்டத்தை உணர முடிகிறது. இன்னும் கலியுகத்தில் பாக்கி ஆண்டுகள் இருக்கின்றன.
இனி போகப் போக தர்மத்தின் உயிர் ஊசலாடிக்கொண்டிருப்பதை காண முடியும்.
கண்ணிருந்தும் குருடர்களாக மக்கள் வாழும் காலகட்டம் இது.
இப்படி தர்மத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் பற்றுக்கள் குறைந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் ‘வேல்மாறல்’ போன்ற ஒரு சர்வ ரோக வினை நிவாரணியை பற்றி உங்களுக்கு தெரியவருகிறது, அது குறித்த KNOWLEDGE ஏற்படுகிறது என்றால், நீங்கள் பாக்கியசாலிகள் தானே?

‘வேல்மாறல்’ தொடரில் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு முன்னர் ‘வேல்மாறல்’ நிகழ்த்திய அற்புதம் குறித்து ஒரு இணையத்தில் படித்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறோம்.
காப்பாற்றியது ‘வேல்மாறல்’ பாராயணம்!
பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள் வசித்த என் அண்ணன், தன் மகனின் பணி இடமாற்றத்தின் காரணமாக பெங்களூருவுக்கு குடி பெயர்ந்தார்.
அங்கு, பொங்கலுக்கு முதல் நாள் கடைத்தெருவுக்குச் சென்றபோது விபத்தில் சிக்கிய என் அண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘ஓரிரு நாட்கள் கழித்தே எதுவும் சொல்ல முடியும்!’ என்று மருத்துவர் கள் கை விரித்து விட… தகவல் அறிந்த நாங்கள் அதிர்ந்தோம். பத்து நாட்கள் சுய நினைவு இல்லாமல் கிடந்தார் அண்ணன். அவர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
இந்த நிலையில் என்னைச் சந்திக்க வந்த சிநேகிதி ஒருவள், ‘வேல் மாறல்’ (அருண கிரியாரது வேல்வகுப்பை ஒரு பாராயண முறையாக அமைத்தார் வள்ளி மலை ஸ்ரீசச்சி தானந்த சுவாமிகள். அதுவே வேல்மாறல்) புத்தகத்தைக் கொடுத்து தொடர்ந்து படிக்கச் சொன்னாள். நானும் விடாமல் ‘வேல் மாறல்’ பாராயணம் செய்து வந்தேன்.
தைக் கிருத்திகை அன்று கோயிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்து அண்ணன் குணமாக வேண்டி முருகனை பிரார்த்தித்தேன். அப்போது, அவர் மேல் சாத்தப்பட்டிருந்த மாலையில் இருந்து ரோஜா ஒன்று கீழே விழுந்தது; மகிழ்ந்தேன். வீடு திரும்பும்போது, கையில் வேல் & உடம்பு முழுவதும் திருநீறுடன் சிறுவன் ஒருவன் எதிர்ப்பட்டான். எனக்கு மெய்சிலிர்த்தது. விசாரித்தால் பள்ளியில் மாறு வேடப் போட்டிக்குச் செல்வதாகக் கூறினான் அவன். எது எப்படியோ… எனக்கு சாட்சாத் அந்த முருகப் பெருமானையே நேரில் தரிசித்தது போல் இருந்தது! கண்ணீர் மல்க, ‘முருகா!’ என கை கூப்பி வணங்கி விட்டு, வீடு வந்து சேர்ந்தேன். அன்று மாலையே, ‘அண்ணனின் உடல் நிலையில் முன்னேற்றம்; இனி கவலை இல்லை!’ என்று மருத்துவர்கள் சொன்னதாக தகவல் வந்தது. எல்லாம் வேல்மாறல் பாராயணம் செய்ததன் பலன்!
(- பி. ராஜலெக்ஷ்மி, சென்னை-61 | www.sirukathaigal.com)

யந்திரத்துடன் கூடிய ‘வேல்மாறல்’
வரும் டிசம்பர் 14 ஞாயிறு அன்று சென்னை கே.கே.நகரில் நடக்கவிருக்கும், நமது தளத்தின் முப்பெரும் விழாவில் வாசகர்களின் நலம் கருதி வேல்மாறலை வெளியிட்டிருக்கும் ‘பொங்கி மடாலயம்’ சார்பாக ஸ்டால் ஒன்று அமைக்கப்படும். அங்கு ‘வேல்மாறல்’ நூல் விற்பனைக்கு கிடைக்கும்.
ஆனால் அதற்கு முன்பு நூல் வேண்டும் என்று கருதுபவர்கள்: செயலாளர், வேல்மாறல் மன்றம், பொங்கி மஹா சரஸ், என் : 8/21, பொங்கி மடாலயம் தெரு, நங்கநல்லூர், சென்னை – 600061. தொலைபேசி : 044-43156781 என்கிற முகவரிக்கு ரூ.60/- மணியார்டர் அனுப்பி தபாலில் யந்திரத்துடன் கூடிய ‘வேல்மாறல்’ நூலை பெற்றுக்கொள்ளலாம். (தபால் செலவுடன் சேர்த்து ரூ.60/- மட்டுமே).
நூலுடன் கிடைக்கும் யந்திரத்தை தனியாக லேமினேட் செய்து பூஜையறையில் வைத்துக்கொள்ளவும்!
- See more at: http://rightmantra.com/?p=14714#sthash.NHZWTcEE.dpuf