Announcement

Collapse
No announcement yet.

32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்&



    information

    Information

    உலகில் உள்ள சித்தர்களுக்கு எல்லாம் தலைவனான சோமசுந்தரேசுவரர் வீற்றிருப்பதால் மதுரையானது “சுந்தரானந்த சித்தர் பீடம்” என்றும் அழைக்கப்படுகிறது.





    அருள்மிகு சோமசுந்தரேசுவரர் எனப் போற்றப்படும் சுயம்புலிங்கத்திற்குச் “சுந்தரன்” என்ற பெயரை யார் வைத்தார்? ஏன் வைத்தார்?

    பொதுவாகச் சிவலிங்கங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.


    1. ஈசன் தானே விரும்பிச் சிவலிங்கமாக எழுந்தருளிய “சுயம்பு லிங்கங்கள்” முதலாவதாகும்.
    2. மற்றபிற தெய்வங்கள், தேவர், விண்ணோர், கந்தர்வர் முதலானோர் வைத்து வணங்கி வழிபட்ட சிவலிங்கங்கள் இரண்டாவதாகும்.
    3. இறைவனின் பிரதிநிதியாக மக்களை ஆண்ட மன்னர்கள் வைத்து வணங்கிய சிவலிங்கங்கள் மூன்றாவதாகும்.
    4. மற்றபடி மக்கள் தங்களது வழிபாட்டிற்காகச் சிவலிங்கங்களை வைத்து வழிபடுபவை நான்காவதாகும்.
    5. இவைகள் தவிர அஃறிணை உயிரினங்கள் வழிபட்ட சிவலிங்கங்களும் உண்டு.


    மொழிக்கு இலக்கணம் இருப்பது போன்று, ஒரு சிவலிங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் உண்டு. சிவலிங்கத்திற்கு மொத்தம் 32 இலட்சணங்கள் உண்டு. இந்த 32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரையில் சுயம்புத் திருமேனியாய் வீற்றிருந்து அருளும் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் திருமேனியே ஆகும்.



    முப்பத்திரண்டு இலட்சணங்களையும் உடைய, ஞானவடிவாகிய, முடிவில்லாத அழகினையுடைய இறைவன், ஒரு பாகத்தில் உமையம்மை யோடும் அழகு செய்து எப்போதும் அருள் பாலிக்கின்ற தன்மையைக் கண்டு வானில் உள்ள தேவர்கள், “சோமசுந்தரன்“ என்று பெயர் வைத்து வணங்கி வழிபட்டுள்ளனர் என்கிறது திருவிளையாடற் புராணத்தின் மூர்த்திவிசேடப் படலத்தில் உள்ள கீழ்க்கண்ட பாடல்.


    இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
    அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
    சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
    சந்தர னென்று நாமஞ் சாத்தினார் துறக்க வாணர்


    உலகில் எத்தனை சிவலிங்கங்கள் உள்ளன என்று யாரும் அறியார்! ஆனால், சிவலிங்கத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களையும் ஒன்றாய்ப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவர் திருமேனியே ஆகும். திங்கள் கிழமைகளில் (சோமவார விரதம்) விரதமிருந்து சோமசுந்தரேசுவரரைப் போற்றி வணங்கி எல்லா நலன்களும் பெற்றும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோமாக…
    (நன்றி : http://temples-kalairajan.blogspot.in/)
    - See more at: http://rightmantra.com/?p=14679#sthash.3Llwq16L.dpuf
    Last edited by soundararajan50; 16-11-14, 07:32.
Working...
X