கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், தூங்காநகர் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டது வெள்ளியம்பலமாகிய மதுரை மாநகரம். மதுரையின் மையத்தில் நின்றருளும் அன்னை மீனாட்சியின் அருமைநாயகன் அருள்மிகு சோமசுந்தரேசுவரர்.
Information
உலகில் உள்ள சித்தர்களுக்கு எல்லாம் தலைவனான சோமசுந்தரேசுவரர் வீற்றிருப்பதால் மதுரையானது “சுந்தரானந்த சித்தர் பீடம்” என்றும் அழைக்கப்படுகிறது.
அருள்மிகு சோமசுந்தரேசுவரர் எனப் போற்றப்படும் சுயம்புலிங்கத்திற்குச் “சுந்தரன்” என்ற பெயரை யார் வைத்தார்? ஏன் வைத்தார்?
பொதுவாகச் சிவலிங்கங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
மொழிக்கு இலக்கணம் இருப்பது போன்று, ஒரு சிவலிங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் உண்டு. சிவலிங்கத்திற்கு மொத்தம் 32 இலட்சணங்கள் உண்டு. இந்த 32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரையில் சுயம்புத் திருமேனியாய் வீற்றிருந்து அருளும் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் திருமேனியே ஆகும்.
இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சந்தர னென்று நாமஞ் சாத்தினார் துறக்க வாணர்
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சந்தர னென்று நாமஞ் சாத்தினார் துறக்க வாணர்
உலகில் எத்தனை சிவலிங்கங்கள் உள்ளன என்று யாரும் அறியார்! ஆனால், சிவலிங்கத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களையும் ஒன்றாய்ப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவர் திருமேனியே ஆகும். திங்கள் கிழமைகளில் (சோமவார விரதம்) விரதமிருந்து சோமசுந்தரேசுவரரைப் போற்றி வணங்கி எல்லா நலன்களும் பெற்றும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோமாக…
(நன்றி : http://temples-kalairajan.blogspot.in/)
- See more at: http://rightmantra.com/?p=14679#sthash.3Llwq16L.dpuf
Last edited by soundararajan50; 16-11-14, 07:32.