திருமால் திருக்கோயில்களின் அமைப்பு பற்றி ஒரு விரிவான கட்டுரை.
திருமால் கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு, அதன்படி நைமித்திக பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில்களின் மிக முக்கியமான பகுதி அதன் கருவறையே. இக் கர்பக்ருஹத்தில் தான் மூலமூர்ததிகள் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். மூல மூர்த்திகளில் நின்றநிலை, வீற்றிருந்த நிலை, சயன நிலை என்ற மூன்று திருக்கோலங்கள் காணப்படுகின்றன.
நின்ற திருக்கோல்த்தில் பின்புறத் திருக்கரங்கள் இரண்டிலும் சங்க, சக்கரங்கள் ஏந்தப்பட்டிருக்கும். மற்ற இரண்டு திருக்கரங்களில் அபய-வரத அல்லது அபய-கட ஹஸ்த முத்திரைகள் அல்லது தான-கடி ஹஸ்த முத்திரைகள் காணப்படும்.
வீற்றிருந்த திருக்கோலங்களில் : ஒரு திருவடி மடிக்கப்பட்டும், ஒரு திருவடி தொங்கவிடப்பட்டும் இருக்கும். ஒரு திருக்கரம் அபய முத்திரையோடும், ஒரு திருக்கரம் ஆஹ_ய முத்திரையோடும் இருக்கும்.
சயனத் திருக்கோலம்: சயனத்திருக்கோலத்தில் ஆதிசேஷன் மீது சயனித்துள்ள முறையில் மூலவர் திருமேனி காணப்படும். பொதுவாக எதிரே வணங்குபவரின் வலக்கை எதிரே திருவடி நீட்டப்பட்டிருக்கும். இதற்கு மாறாகவும் சில திருக்கோயில்களில் சயனம் அமைந்துள்ளது. உதாரணம் - காஞ்சி திருவெ‡காவில் சொன்னவண்ணம் செய்த பெருமாள், திருவாட்டாறு ஆதிகேசவ பெருமாள். மூலபேரருக்கு இருமருங்கிலும் ஸ்ரீதேவி, பூமிதேவிகளின் மூலத் திருமேனிகள் இடம்பெருகின்றன. பெருமாளின் நிலைக்கு ஏற்ப நின்றோ இருந்தோ காணப்படுகின்றனர். வலப்புறம் திருமகள், இடப்புறம் நிலமகள்;;. இரண்டு திருக்கரங்களில் ஒன்றில் மலர் ஏந்தப்பட்டிருக்கும், மற்றது தொங்கவிடப்பட்டிருக்கும். திருப்புளிங்குடி என்ற திவ்யதேசத்தில் மலர்மகளும் நிலமகளும் எதிரெதிரில் அமர்ந்து எம்பெருமான் திருவடிகளை வருடிக் கொண்டிருப்பதாக அமைந்துள்ளது. ‘வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி” என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.
மூலவர் திருமேனிகளை 1.திருமஞ்சன திருமேனி என்றும், 2. தைலக்காப்புத் திருமேனி என்றும் வகைப் படுத்தியுள்ளனர். கல்லில் வடிக்கப்பட்ட மூர்த்திகளுக்குத் திருமஞ்சனம் செய்யப்படும். மூலவர் திருமேனியை பலவித வர்ணத்திலும் அமைப்பது உண்டு. மூலிகைச் சாந்துகள் மற்றும் பலவகைத் தாதுப்பொடிகள் கொண்டு வண்ணக் கலவை செய்து திருமேனியில் பூசுவர். இதற்கு ‘வர்ணகலாபம்” என்று பெயர். உதாரணம் :- ஸ்ரீவில்லிபுத்து}ர், திருத்தண்கால், திருக்குறுங்குடி.
தைலப்ரதிஷ்டை:- பெரும்பாலான திருக்கோயில்களில் தைலக்காப்பினை மூல மூர்த்திகள் திருமேனிக்குச் சாத்துகின்றனர். சந்தனம், அகில் போன்ற கட்டைகளைச் செதுக்கி சிறு துண்டுகளாக்கி அவற்றோடு சாம்பிராணி போன்ற வாசனைப் பொருள்களையும் சேர்த்துத் தண்ணீரில் ஊறவைத்துப் பிறகு காய்ச்சுவார்கள். அதிலிருந்து வரும் ஆவியைக் குளிரவைத்துத் தைலத்தை இறக்கி அத்துடன் பச்சைக் கற்பூரம் மற்றும் இளநீர் சேர்த்து இளக்குவர். இளக்கிய தைலத்தை ஒரு பானையில் சேர்த்து வழிபாடு செய்வர். இதற்கு அங்கமாக யாகவேதியில் ஹோமங்கள் இயற்றப்படும். இதற்கு தைலப் ப்ரதிஷ்டை என்று பெயர். இத்தைலத்தைத் துணியில் தோய்த்து மூலவர் திருமேனியில் அணிவிப்பர்.
பஞ்ச பேரர்கள்:-
பஞ்ச பேரர்கள் :- 1. துருவ பேரர் 2.உற்சவ பேரர் 3. ஸ்நபன பேரர் 4. யாக பேரர் 5. பலிபேரர்
1. துருவபேரர் :-
பஞ்ச பேர்விதானத்தில் துருவ பேரமே முக்கியமானதும், பழமையானதுமாகும். மூலவர் திருமேனியை ‘த்ருவ பேரம்” என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதன் அமைப்பினை ஆகம நு}ல்களும், சிற்ப நு}ல்களும் வரையறை செய்கின்றன. துருவ பேரர் ஸ்திரமாக பீடத்தில் பொருத்தப்பட்டு அசைவு ஏற்படாதபடி கெட்டியான மருந்துகளால் நிலைநிறுத்தப் படுகிறார். பீடத்திலுள்ள குழியையும் மூலபேரரின் சிலையையும் இம்மருந்து கெட்டியாகப் பிணைக்கிறது. இதற்கு ‘அஷ்டபந்தனம்” என்று பெயர். இதில் எட்டு வகையான மருந்துகள் சேர்க்கப்படுகின்றன.
2. உற்சவ பேரர் :-
திருவிழாக்கள் எடுக்கப்பட்ட காலத்தில் உலா வருவதற்காக ‘உற்சவ பேரர்” உருவாக்கப்பட்டு கருவறையில் மூலவருக்கு முன் பகுதியில் இடம் பெற்றது. இந்த மூர்த்தி செப்பு, பஞ்சலோகம், பொன், வெள்ளி முதலிய உலோகங்களால் அமைக்கப்பட்டது. உபய நாச்சிமார்களின் திருமேனிகளும் அமைக்கப்பட்டன.
3ஸ்நபன பேரர் :-
திருமஞ்சனம் செய்வதற்கு ஸ்நபன பேரர் திருமேனி அமைக்கப்பட்டது. இவர் திருமஞ்சன மூர்த்தியாவார். இவர்க்கே அபிஷேகங்கள் செய்யவேண்டும் என்று ஆகமங்கள் விதிக்கின்றன. ஆயினும் காலப்போக்கில் உற்சவ மூர்த்திக்கே திருமஞ்சனங்கள் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. திருமேனியைப் பாதுகாக்க கவசம் அணிவிக்கும் முறை வந்தது.
4. யாகபேரர் :-
ப்;ரம்மோத்ஸவங்கள் போன்ற பெரியவிழாக்களில் திருக்கோயில்களில் யாகசாலை;கள் அமைத்து வேள்விகள் வளர்க்கப்பட்டன. யாக சாi;லக்கு எழுந்தருள ‘யாகபேரர்” என்ற மூர்த்தி தோற்றுவிக்கப்பட்டது.
5. பலிபேரர் :
திசைக் கடவுளர்க்கு பரிபோடும்போது எழுந்தருள ‘பலிபேரர்” என்ற மூர்த்தி செய்யப்பட்டது.
பெருவிழர்களின் இறுதியில் நடைபெறும் தீர்த்தவாரிக்காகச் சக்கரத்தாழ்வார் திருமேனியும் கருவறை மேடையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. வைகானஸக் கோயில்களில் ‘கௌதுகர்” என்ற திருமேனி இடம் பெற்றது.
4. சுற்றுக் கோயில்கள் :- கோயில் வளர்ச்சியில் கருவரை தவிரப் பிற சந்நிதிகளும் காலப் போக்கில் தோன்றின. கருடன், ஆஞ்சநேயர், சேனைமுதலியார், இராமன், க்ருஷ்ணன், தசாவதார மூர்த்திகள் ஆகியோருக்குத் தனித் தனி சந்நிதிகள் எழுப்பப்பட்டன. சுற்றுக்கோயில்களின் சந்நிதிகளில் சிறப்பிடம் பெறுவது சக்கரத்தாழ்வார் சந்நிதியாகும். இது மூலவருக்கு வலப்புறத்தில் தாயார் சந்நிதிக்குப் பின்புறம் அமைக்கப்படும். சக்கரத்தாழ்வார் மூல மூர்த்தியின் முன்புறம் சுர்ஸனரும், பின்புறம் யோக நரசிம்மரும் காணப்படுவர்.
விஷ்வக்ஸேனர் :- (சேனை முதலியார்) : இவர் வைகுந்தத்தில் விஷ்ணு கணங்களின் தலைவர். நித்திய சூரிகளில் முதல்வர். இவருக்குத் தனி ஸந்நிதி உண்டு. ப்ரம்மோத்ஸவ காலத்தில் இவர் முதல் திருநாளுக்கு முதல்நாள் வீதியுலாவாக எழுந்தருளி அவர் முன்பாக அங்குரார்பணம், ம்ருத் சங்க்ரமணம் முதலியவை நடைபெறும்.
இராமன் மற்றும் கண்ணன் ஸந்நிதிகள்:- இங்கு இராமர், இலக்குவன், சீதை மூவரும் சேர்ந்து அமைக்கப்பட்டுள்ளனர். இந்த சந்நிதிக்கு நேர் எதிரில் ஆஞ்சநேயர் ஸந்நிதி அமைக்கப்படும். வெண்ணெய்க் கண்ணன், நர்த்தன கண்ணன், வேய்ங்குழல் கண்ணன், தவழ்ந்த கண்ணன் போன்ற பல்வேறு உருவங்களில் கண்ணபிரானை வழபடுகின்றனர். ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி போன்ற உத்ஸவங்ள் கொண்டாடப்படுகின்றன.
மண்டபங்களில் உள்ள து}ண்களில் இடம் பெற்ற புடைப்பு உருவங்களுக்குத் தனியாக வழிவாடு நடைபெற்று அவையும் தனிச் சன்னிதிகளாக வளர்ச்சியடைந்தன. அனுமார் சன்னிதி இவ்வாறு அமைந்துள்ளது. ஆஸ்தான மண்டபம், அலங்கார மண்டபம், அத்தியயன மண்டபம், கல்யாண மண்டபம் மற்றும் நீர் நிலைகள், தேர்முட்டிகள் ஆகியவற்றுடன் சேர்ந்து இன்று கோவில்கள் மிகவும் விரிந்து பரந்து அமைந்துள்ளன.
Comment