Thank you very much for this informative posting. This question - answer format is very interesting and easy to read and also informs of various subjects very briefly. Request you to kindly post more of such informative topics.
Announcement
Collapse
No announcement yet.
Agamas and Temple worship-Tamil
Collapse
X
-
Tags: அடை, இல்லை, எப்படி, கற்பூரம், கல்யாண, கவிதை, கோயில், சிறு குறிப்பு, தானம், தொடர், நம்மாழ்வார், பலி, பாடல், முறைகள், மொழி, ராம, ஸம்ஸ்கார, 108, agamas, agamas and temple worship-tamil, all, answer, are, com, different agamas, easy, for, his, http, interesting, link, more, note, posting, prepared, read, request, tami, tamil, temple, temples, these, this, vaishnavism, various, very, was, when, worship, you
-
Agamas and Temple worship-Tamil
ஆகமங்கள் மற்றும் கோயில் வழிபாடுகள் பற்றி சில கேள்விகளும் பதில்களும்
Note:These are all prepared when I was studying B.A Vaishnavism.
1. திருவோணத் திருவிழா - சிறு குறிப்பு வரைக
திருவோணம் திருமாலுக்குரிய நட்சத்திரமாகும். திருவோண விழா பண்டைத் தமிழகத்தில் திருமால் திருக்கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இப்பெருவிழா திருமாலின் வாமன அவதார தினத்தைக் குறிக்கிறது. ஏழு நாட்கள் நடைபெற்று முடிவில் நீராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழா ஆவணி மாதம் பௌர்ணமி திதியில் நடந்தது. அக்காலத்தில் மதுரையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட இவ்விழா, தற்பொழுது கேரளத்தில் ஏழு தினங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழா முடிந்த மறுநாள் காலை; வீரர், தலைவர், புலவர் முதலியவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
2. கோயிலில் துவஜஸ்தம்பம் எங்கு எப்படி இருக்கவேண்டும்?
கொடிமரம் என்னும் துவஜஸ்தம்பம் 33 கனுக்களை உடையதாய், உச்சியில் 3 திருஷ்டிப் பலகைகள் உடையதாய் இருக்கவேண்டும். விழாக்காலங்களில் இதில் கொடியேற்றப்படும். இது பலி பீடத்திற்கு முன்பாகவோ அல்லது பின்புறமாகவோ இருக்கவேண்டும்.
3. அரையர் என்போர் யார்?
ஸ்ரீமந் நாதமுநிகள் தம்முடைய மருமகன்களான கீழையகத்தாழ்வான், மேi;லயகத்தாழ்வான் ஆகியோருக்கு ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களை இசையுடனே கற்பித்து, அத்யயன உத்ஸவத்தில் அவற்றை ஸேவிக்கும்படி நியமித்தார். அவர்களும் தம்முடைய இசையால் அழகிய மணவாளனை உகப்பிக்க, அரங்கனும் மகிழ்ந்து, ஒருவருக்கு ‘மதியாத தெய்வங்கள் மனமுறை வானப்பெருமாளரையர்” என்றும் மற்றொருவருக்கு ‘நாத வினோத அரையர்” என்றும் அருளப்பாடுகள் ஸாதித்து தொங்கல் பரியட்டமாகப் பட்டும், குல்லாவும், சாத்திக் களைந்த திருமஞ்சன கைலியும், திருமாலைகளையும் ஸாதித்து அருளினார். அதுமுதலாக அழகியமணவாளர் திருமுன்பு பாடுவோருக்கு ‘அரையர்” என்ற திருநாமம் வழங்கலாயிற்று. ‘அரையர்” என்ற சொல் அறைதல் அதாவது திவ்யப் ப்ரபந்தத்தை விண்ணப்பம் செய்பவர்கள் (அறைபவர்கள்) என்று பொருள்படும். அரையர் என்ற சொல் மன்னனைக் குறிக்கும். இசைக்கு மன்னனாகக் கருதப்பட்டதால் மன்னைப்போல (திருமுடியாக) குல்லாவும், தொங்கல் பரியட்டமும் ஸாதிக்கப்பட்டது. இது இவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட மரியாதையாகும்.
4. தைலப் ப்ரதிஷ்டையை விளக்குக.
பெரும்பாலான திருக்கோயில்களில் தைலக்காப்பினை மூல மூர்த்திகள் திருமேனிக்குச் சாத்துகின்றனர். சந்தனம், அகில் போன்ற கட்டைகளைச் செதுக்கி சிறு துண்டுகளாக்கி அவற்றோடு சாம்பிராணி போன்ற வாசனைப் பொருள்களையும் சேர்த்துத் தண்ணீரில் ஊறவைத்துப் பிறகு காய்ச்சுவார்கள். அதிலிருந்து வரும் ஆவியைக் குளிரவைத்துத் தைலத்தை இறக்கி அத்துடன் பச்சைக் கற்பூரம் மற்றும் இளநீர் சேர்த்து இளக்குவர். இளக்கிய தைலத்தை ஒரு பானையில் சேர்த்து வழிபாடு செய்வர். இதற்கு அங்கமாக யாகவேதியில் ஹோமங்கள் இயற்றப்படும். இதற்கு தைலப் ப்ரதிஷ்டை என்று பெயர். இத்தைலத்தைத் துணியில் தோய்த்து மூலவர் திருமேனியில் அணிவிப்பர்.
5. கருடன் - சிறு குறிப்பு வரைக.
திருமாலின் ஊர்தியாகிய கருடப் பறவை பாம்பை உணவாகக்கொள்ளும் தன்மை உடையது. அப்பாம்பே கருடனுடைய வயிற்றில் அரைக் கச்சாகவும், தோள் வளையாகவும், மற்றுமுள்ள ஆபரணங்களாயும் அமைந்துள்ளது. மேலும் அவன் முடிமேல் சூடியிருப்பதும், தலைக்குமேல் கவிழ்ந்திருப்பதும், தலையணியும், சிறகணியும் பாம்பே என்று நாலாம் பரிபாடல் தெரிவிக்கிறது. இன்றும் திருமால் திருக்கோயில்களில் உள்ள கருடவாகனம் இவ்வாறே காணப்படுகிறது.
6. விகனஸ முனவரின் உருவத்தை விளக்குக. (சிறு குறிப்பு)
இவர் முனிவர் வேஷத்தை உடையவர். சங்கம், சக்ரம், அபயமுத்திரை, வரதமுத்திரை, ஆகியவற்றை நான்கு கரங்களிலும் தரித்து, தர்பைப்புல் ஆசனத்தில் வீற்றிருப்பவர். ஊர்த்வ புண்ட்ரத்தையும், பவித்திரத்தையும் அணிந்தவர். க்ரீடம், ஹாரம், குண்டலம், தோள்வளை ஆகிய ஆபரணங்களை அணிந்தவர். சிகை, பூனு}ல், முக்கோல் தரித்து அபய ஹஸ்தத்தில் தாமரையை ஏந்தியவர். இவரால் சொல்லப்பட்டவை வைகாநச சூத்திரம் (ஆகமம்) என்று அழைக்கப்படுகிறது.
இவர் திருமாலின் திரு அவதாரமாகக் கருதப்படுகிறார். ஸ்ரீமந் நாராயணனே இவருக்கு வைகாநச சாஸ்திரத்தை முதலில் உபதேசித்தார்.
7. விமானத்தை எத்தனை பகுதிகளாகப் பிரித்துள்ளனர்?
விமானத்தின் பகுதிகள்:- அதிஷ்டானம், கால்ஃசுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்து}பி என ஆறு பகுததிகள்.
1. அதிஷ்டானம்:- இது பாதபந்தம், பத்ம பந்தம் என இருவகைப்படும்.
2. கால் அல்லது பாதம் :- அதிஷ்டானத்தின் மேலிருப்பது. இதனை பிட்டி என்றும் அழைப்பர்.
3. பிரஸ்தரம் (கூரை) :- சுவரின் மீதுள்ள கருவரையை மூடும் அங்கம்.
4. கிரீவம் :- சிகரத்தின் கழுத்தான இப்பகுதி சதுரமாகவோ, எண் பட்டையாகவோ, வட்டவடிவமாகவோ அமைக்கப்படும்.
5. சிகரம் :- கிரீவத்துக்கு மேலுள்ள இப்பகுதியும் சதுரம், வட்டம், ஆறு அல்லது எண்பட்டை வடிவிலும் அமையும்.
6. ஸ்து}பி :- சிகரத்திற்கு மேலுள்ள ஆறாவது பகுதி. இது கலசம் என்றும் அழைக்கப்படும்.
8. மூலவர் திருமேனிகள் எப்பொருட்களால் அமைக்கப்படும்?
மூலவர் திருமேனிகள் பெரும்பாலும் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. சில ஆலயங்களில் செங்கற் சுதையினாலும், மரத்தினாலும், மூலிகைச் சாந்துகளினாலும் அமைக்கப்பட்டுள்ளன. சில கோயில்களில் சாளக்ராமத்திலும், விலையுயர்ந்த மரகதப் பச்சைக் கற்களிலும் வடித்துள்ளனர். சில ஆலயங்களல் உள்ளே செம்மைப் படுத்தாத முறையில் கல்லில் உருவத்தைச் செதுக்கி, அதன்மேல் சாந்து பூசி முழுமையாக்கப்பட்ட மூல பேரங்கள் அமைந்துள்ளன. சில கோயில்களில் முதிர்ந்து கல்போல் மாறிய சந்தன மரங்களிலிருந்தும் அமைக்கப்பட்டுள்ளன.
9. அருளிச்செயல் விளக்குக.
ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள திவ்ய ப்ரபந்தப் பாடல்கள் ‘அருளிச் செயல்கள்” என வழங்கப் படுகின்றன. இச்சொல்லை அழகியமணவாளப் பெருமாள் நாயனாரே முதன் முதலில் கையாண்டுள்ளார் எனலாம். ஆசார்ய ஹ்ருதயத்தில் ஒரு சூர்ணிகையில் திருவாய்மொழி திவ்யப் ப்ரபந்தங்களில் ஸாரம் எனக் கூறவந்த நாயனார், ‘அருளிச்செயல் ஸாரம்” என்றே குறிப்பிட்டுள்ளார். தம்முடைய மற்றொரு ரகசிய நு}லுக்கு ‘அருளிச்செயல் ரஹஸ்யம்” என்றே பெயரிட்டுள்ளார். இதற்கு மதுரகவிகளின் திருவாக்கான ‘அருளினான் அவ்வருமறையின் பொருள்” என்பது காரணமாக அமைந்திருக்கலாம். நம்மாழ்வார் தம்முடைய அருளின் காரணமாகச் செய்த ப்ரபந்தமே திருவாய்மொழி. மணவாள மாமுநிகளும், தம்முடைய உபதேச ரத்னமாலையில் ‘ஆழ்வார்கள் வாழி, அருளிச்செயல் வாழி” என்று ஆழ்வார்களின் திவ்ய சூக்திகளை ‘அருளிச்செயல்” என்றே குறிப்பிட்டுள்ளார்.
10. பலராமனைப் பற்றி தொல்காப்பியம் யாது கூறுகிறது?
தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தில் தமிழகத்தில் கண்ணனும், பலராமனும் நன்கு வழிபடப்பட்டனர்.
‘கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப
கடிநிலை முன் வல்லெழுத்து மிகுதி”
என்று வரும் நு}ற்பாவை நுட்பமாக ஆராய்ந்தால், பனைக் கொடியை உயர்த்திக்கொண்ட பலராமனுடைய வழிபாடு பண்டைக் காலத்தில் நிலவியிருந்தது புலனாகிறது.
11. ஸ்ரீ பிரச்ன ஸம்ஹிதையைப் பற்றி விளக்குக.
ஸ்ரீ லக்ஷ;மி ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும் முளைறயாக இந்த ஸம்ஹிதை அமைந்துள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதில் ஆசார்யன் தேர்ந்தெடுப்பதிலிருந்து, பூமி பரிiக்ஷ, கோவில் அமைப்பு, கோவில் வகைகள், விக்ரஹ அமைப்பு, தீக்ஷh முறை, லக்ஷ;மியைப் ப்ரதிஷ்டை செய்வது, திருக்கல்யாண உத்ஸவம், வஸந்த உத்ஸவம், தெப்போத்ஸவம், ஜ்யேஷ்டாபிஷேகம், கிருஷ்ணோத்ஸவம், தீபோத்ஸவம், டோலோத்ஸவம், தனுர்மாத உத்ஸவம், ப்ரணய கலஹோத்ஸவம் போன்றவைகள் பற்றிய விளக்கங்கள் காணக் கிடைக்கின்றன. இது ஒரு அரிய பொக்கிஷம். இந்த ஸம்ஹிதை கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயிலிலும், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலிலும் அநுஷ்டிக்கப்படுகிறது.
12. திருவிலச்சினை பற்றிச் சிறு குறிப்பு வரைக.
ஒரு சிஷ்யன் ஆச்சார்யனிடம் பெற்றுக்கொள்ளவேண்டிய பஞ்ச ஸம்ஸ்காரங்களில் திருவிலச்சினை பெறுவதும் ஒன்று. ஒரு ஆசார்யன் சங்க, சக்ரச் சின்னங்களைச் சிஷ்யனுடைய தோள்களில் பொறிப்பதே திருவிலச்சினை பொறித்தல் எனப்படும். பெரியாழ்வாரும் தம்முடைய திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தில் ‘தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு” என்று அருளிச் செய்துள்ளார். பாஞ்சராத்ர ஆகமத்தில் திருவிலச்சினை பெறுதல் முக்கியமாகக் கருதப்படுகிறது. வைகானஸ ஆகமத்தில் அர்ச்சகர்கள் திருவிலச்சினை என்ற தீiக்ஷ பெறுவதில்லை.
13. பாஞ்சராத்ரம் - சிறு குறிப்பு வரைக.
பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள். ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது. இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால் பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நு}ல் கூறுகிறது. ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். ஆனால் பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும் நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்துள்ளார்.
14. திருக்கோயில் பற்றிக் கூறும் ஆகமங்கள் யாவை?
ஆகமங்களில் கோயில் தொடர்பான செய்திகள் கூறப்பட்டுள்ளன. கோயில் அமைப்புகளின் எல்லா நிலைகளும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஆகம் நு}ல்கள் பல உள்ளன. வைணவ ஆகமங்கள்: வைகானஸம் மற்றும் பாஞ்சராத்ரம் என இரு ஆகமங்கள் உள்ளன. 108 பாஞ்சராத்ர ஸம்ஹிதைகள், 28 சைவ ஆகமங்கள், 77 சார்க்க ஆகமங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். தமிழ் நாட்டிலுள்ள திவ்ய தேசங்களில் வைகானஸம் அல்லது பாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
15. திவ்ய தேசங்களின் பிரிவுகள் யாவை?
திவ்ய தேசங்கள் என்பவை ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருக்கோயில்களாகும். இவை நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. ஸ்வயம் வ்யக்தம் : தாமாகத் தோன்றியவை (ஸ்ரீரங்கம்)
2. ஆர்ஷம் : ரிஷிகளால் நிறுவப்பட்டவை
3. சைத்யம் : சித்தர்களால் அமைக்கப்பட்டவை
4. மாநுஷம் : மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை
16. லக்ஷ;மீ தந்த்ரம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
பாஞ்சராத்ர ஸாரம் என்று சொல்லப்படும் இந்த ஸம்ஹிதை லக்ஷ;மியைப் பற்றி விசேஷமாகக் கூறுகிறது. இது லக்ஷ;மியால் இந்திரனுக்கு உபதேசிக்கப்பட்டு பின்பு நாரதரால் ரிஷிகளுக்கு உபதேசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜ்ஞானம், யோகம், சர்யா ஆகியவைகளைப் பற்றிய விளக்கங்கள் அதிகம் இல்லை. ஸ்ரீ என்கிற லக்ஷ;மிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஸம்ஹிதையில் ப்ரபத்தியைப் பற்றி உயர்வாகப் பேசப் பட்டுள்ளது. இதிலுள்ள ச்லோகங்கள் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களால் கையாளப்பட்டுள்ளன.
17. யாகசாலை பற்றி சிறு குறிப்பு வரைக.
யாகசாலை யூபஸ்தம்பம், உத்தரவேதி, தசபதம், ஹவிர்தானம், ஸதஸ், அக்நிஹோத்ர சாலை, ப்ரதான வேதி, பத்நீ சாலை முதலிய அமைப்புகளைக் கொண்டது. யாக சாலைக்கும், ஆலய அமைப்பிற்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகிறது. செங்கற்களின் அளவுகள், அடுக்கப்படும் முறைகள் ஆகியவற்றைத் தெரிவிப்பவை ‘இஷ்டகசயனம்” எனப்படுகிறது. ‘விதானாக்நி” என்பது வைதீகமான யாகத்திற்கான ஹவிஸ் கொடுக்கப்படும் இடம். விதானாக்நி என்பது ஆஹவனீயம், கார்ஹபத்யம், தக்ஷpணம் மூன்றின் தொகுப்பாகும். இது எல்லா யாகங்களுக்கும் பொதுவானது. கோயிலில் யாகசாலைக்கென்று தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ப்ரம்மோத்ஸவத்தில் யாகசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. பவித்ரோத்ஸவத்திலும் யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு பூர்ணாஹ{திகள் நடத்தப்படுகின்றன. புதிய ப்ரதிஷ்டைகளிலும், ஆலயத்தைப் புதுப்பித்துச் செய்யும் ப்ரதிஷ்டைகளிலும் மூர்த்திகளுக்குத் தகுந்தாற்போல் யாககுண்டங்கள் அமைக்கப்படுகின்றன.
18. ஸ்வயம் வ்யக்த Nக்ஷத்திரங்கள் யாவை?
தானாகவே தோன்றிய திவ்ய தேசங்கள் ஸ்வயம் வ்யக்த Nக்ஷத்திரங்கள் என வழங்கப்படுகின்றன. பதரிகாச்ரமம், சாளக்ராமம், திருவரங்கம், திருமலை, நைமிசாரண்யம், புஷ்கரம், வானமாமலை, ஸ்ரீமுஷ்ணம் முதலியவை ஸ்வயம் வ்யக்த Nக்ஷத்திரங்கள் ஆகும்.
Re: Agamas and Temple worship-Tamil
Originally posted by pamrang View PostThank you very much for this informative posting. This question - answer format is very interesting and easy to read and also informs of various subjects very briefly. Request you to kindly post more of such informative topics.
தாங்களும், வேறு இணையதளம் அல்லது மின்னஞ்சல் குழு மூலமாக கிடைத்த தகவல்களை இங்கே காப்பி செய்து பேஸ்ட் செய்தால் அதுபற்றி மேலும்
கருத்துப் பரிமாற்றம் நடத்தி அனைவருடன் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
தமாஷ், பொது அறிவு, கட்டுரை, கவிதை, சமையல் குறிப்பு, அலங்காரக் குறிப்பு, சிக்கன நடவடிக்கை, அறிவுரை, உடை அலங்காரம் போன்ற பாலியல் தவிர்த்த எதைவேண்டுமானாலும் தங்கு தடையின்றி, சங்கோஜமின்றி, இங்கே பரிமாறிக் கொள்ளலாம்.
நன்றி.
Comment
Re: Agamas and Temple worship-Tamil
Originally posted by N Kannan View PostSwami, I believe the Malai Nattu Divyadesams follow a different system of worship. Are these different Agamas or some other system.
That is a different system.
Let me have some strong evidence about that before giving some explanation about it.
Comment
Re: Agamas and Temple worship-Tamil
Originally posted by M.V.Narasimhan View Postswami,
thanians are chanted speedly where as arulichayal pasurams are recited slowly, why this difference
தனியன்கள் நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் சேராது.
அந்தந்த ஆழ்வார் பாசுரங்களை அருளிச்செய்யும்போது,
அந்த ஆழ்வார் பற்றி பின்னாளில் வந்த ஆசார்யர் - மஹான் ஒருவர்
இயற்றிய தனிச் சுலோகங்களே, தனியன்கள் ஆகும்.
ஆகையினால் அவை தனிமைப்படுத்தப்பட்டு
ஒரு வேககதியில் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
இதையே, அனத்யயன காலத்தில் - திவ்யப்பரந்த பாசுரங்கள் ஸேவிக்க இயலாத காலத்தில் -
தனியன்களையே, திவ்யப்ரபந்தம்போல நிறுத்தி அருளிச்செய்வார்கள்.
இந்தப் பதிவை இன்றுதான் காண நேர்ந்தது, தாமத..........மான பதிலுக்கு க்ஷமித்தருளவும்.
நன்றி,
nvs
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 07:14.
Working...
X
Comment