Announcement

Collapse
No announcement yet.

சொக்கப்பனை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சொக்கப்பனை

    சொக்கப்பனை

    திருக்கார்த்திகை தீபத் திருநாளில், சிவாலயங்கள் பலவற்றில், சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உண்டு. இதுகுறித்து ஞான நூல்கள் என்ன சொல்கின்றன?
    'அகிலத்துக்கே சக்கரவர்த்தி நான்' எனும் இறுமாப்புடன் இருந்தார் மகாபலி சக்கரவர்த்தி. ஒருநாள், தனது படை- பரிவாரங்களுடன் ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமுமாக சிவாலயத்துக்கு சென்றார். இறைவனை தரிசித்து விட்டு, பிராகார வலம் வரும் போது, மிகப் பெரிய நெய் தீபத்தில் இருந்து நெய் ஒழுகி, மகாபலியின் உடலில் பட்டது. இதில் அந்த இடமே புண்ணாகிவிட, எத்தனையோ மருந்துகள் போட்டும் பலனில்லை!

    உடலில் புண்; மனதில் வேதனை. இதனால் ஆட்சி செலுத்துவதில் கவனம் செலுத்த முடியாமல், இறைவனிடமே முறையிட்டார் மகாபலி. அப்போது, 'மகாபலி, அகங்காரத்துடன் ஆலயத்துக்கு வந்ததால் நேர்ந்த வினை இது! இன்று முதல் உனது அகங்காரத்தைத் துறந்து, நற்சிந்தனையுடன் நெய்தீபம் ஏற்றி வந்தால், உனது துயரம் விலகும். நீயும் நற்கதி அடைவாய்!' என்று இறைவனின் குரல் அசரீரியாக ஒலித்தது.

    மெய்சிலிர்த்த மகாபலி, அதன்படியே நெய்தீபம் ஏற்றி வந்தார். ஒரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் (வளர்பிறை), அவர் தீபம் ஏற்றியபோது, சிவபெருமான் காட்சி தந்து அருளினார்.

    சிவனாரின் ஜோதி வடிவைக் கண்டு பயந்துபோன தேவர்கள், இறைவனின் வெப்பத்தைத் தணிக்க பொரி, அவல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து இறைவனை வணங்கி வழிபட்டனர். மகாபலிக்கு, ஜோதி வடிவாக இறைவன் தரிசனம் தந்ததைக் குறிக்கும் வகையில், கார்த்திகை மாதம்- கார்த்திகை நட்சத்திர (வளர்பிறை) நாளில் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் உண்டானதாம்! முற்காலத்தில் 'சுட்கப்பனை' என அழைக்கப்பட்டு, பிறகு காலப்போக்கில் 'சொக்கப்பனை' என மருவியது.

    இத்தகு புண்ணியம் மிகுந்த திருக்கார்த்திகை திருநாளிலும், கார்த்திகை சோமவார (திங்கட்கிழமை) தினங்களிலும் விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்வோம்; புண்ணியம் பெறுவோம்!

    http://hinduspritualarticles.blogspot.com/2012/12/blog-post.html


  • #2
    Re: சொக்கப்பனை

    இது இதுவரைஅறியாத புதிய செய்தியாகைஇருந்தது ந்ன்றி

    Comment

    Working...
    X