Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 019/116 தலைச் சங&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 019/116 தலைச் சங&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 019/116 தலைச் சங்க நாண் மதியத்தான் யாதும் ஆகி நின்றான் !

    திருப்பதி - 13/108. சோழ நாடு - 13/40 : திருத்தலைச் சங்க நாண் மதியம்

    செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
    அப்புங்காலும் கனலுமாய் நின்றான் - கைப்பால்
    அலைச் சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
    தலைச் சங்க நாண் மதியத்தான்

    கைப்பால் அலைச் சங்கம் ஏந்தும் கையில் அலைகடலில் தோன்றிய சங்கத்தை உடைய
    அணி அரங்கத்து அம்மான்திரு அரங்கத்தில் இருப்பவனும் ,
    தலைச் சங்க நாண் மதியத்தான் தலைச் சங்க நாண் மதியத்தில் இருப்பவனும்
    செப்புங்கால் சொல்லும் இடத்தில்
    ஆதவனும் திங்களும் சூரியனும் , சந்திரனும் ,
    வானும் தரையும் ஆகாயமும் , பூமியும்
    அப்புங்காலும் நீரும் , காற்றும்
    கனலுமாய் நின்றான் நெருப்பும் ஆகி நிற்பவன் ஆவான் .



    Last edited by sridharv1946; 28-10-13, 19:20.
Working...
X