Announcement

Collapse
No announcement yet.

அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே.

    அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே.


    பகவதானுபவத்தை அனுபவிக்க, கர்மமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி இரண்டு... சரி! சேவை என்ற பரோபகார மார்க்கமும் உண்டு என்கிறார்களே... இது பற்றிய பண்டைய வழக்கம் ஏதும் உண்டோ?

    அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூக சேவை, ஸோஷியல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்குப் "பூர்த்த தர்மம்' என்று ஒரு பெயர்.



    ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம், ஆத்ம «க்ஷமத்துக்காகக் கோயில் கட்டுவது, அதன் அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம் "பூர்த்த தர்மத்தில்' சேர்ந்தவை. இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சுவழக்கில்கூட "அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? வெட்டிக் கொண்டு இருக்கிறானா?' என்கிறோம். "வெட்டுவது அவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகக் கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம்.



    ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும் - பணக்காரர், ஏழை என்கிற வித்யாசமில்லாமல் - ஒன்றுசேர்ந்து மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபடவேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம், வாக்குசுத்தமாக சுலோகம் - இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால் சேவை செய்ய வேண்டும்.



    உழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும்.



    குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய், அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப் போதும் - அதுவே பரோபகாரம்; சித்த சுத்தி என்கிற ஆத்மலாபமும் ஆகும்.



    Source:harikrishnamurthy


  • #2
    Re: அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே.

    திரு பத்மநாபன் சார் அவர்களுக்கு
    நமஸ்காரம். மிகவும் பயனுள்ள கருத்துக்கள். ஒரு சிறிய kadhai சொல்லி ஒரு விண்ணப்பமும் வைக்கிறேன். ஒரு தாய் தன கட்சி காலத்தில் தன் மகனை அழைத்து நீ மிகவும் கெட்டவனாக இருக்கிறாய். நான் சொன எதையும் கேட்கவேயில்லை. ஏன் கடைசி ஆசையாக ஒன்று சொல்கிறேன். தயவு செய்து கேள் என்று கூறி நிதமும் சித்ரகுப்தாய நம என்று சொல்லும்படி கூறிவிட்டு உயிர் துறக்கிறாள். அன்றிலிருந்து மகனும் அவ்வாறே செய்து வந்தான். அவனின் கடைசி காலம் நெருங்கியவுடன் சித்ரகுப்தன் அவனிடம் வந்து நீ நாளை மாலை இறக்கப்போகிறாய். தினமும் ஏன் பெயரை ஜபம் செய்ததால் உன்னை எச்சரிக்க வந்தேன். நீ idhu வரை yendha ஒரு புண்ணியமும் பண்ணவே இல்லை. ஆனால் நிறைய பாவங்கள் மட்டும் செய்திருக்கிறாய். எனவே இறப்பதற்குள் எதாவது ஒரு புண்ணிய காரியம் செய்து விடு. பின்பு நீ யமலோகம் வரும்பொழுது நான் உன்னை அந்த புண்ணிய காரியத்திற்காக முதலில் சொர்கம் அனுப்புகிறேன். பிறகு மற்றவைகளை பார்க்கலாம் என்று சொல்லி சென்றுவிட்டார். அவனும் மறுநாள் காலையில் ஒரு கடப்பாரையும் மண்வெட்டியும் எடுத்துக்கொண்டு ஒரு குளம் வெட்ட கிளம்பினான். அவன் செயலை பார்த்து ஊர் மக்கள் நகைத்தனரே தவிர ஒருவரும் உதவ முன்வரவில்லை. அவன் தேர்ந்துஎடுத்த இடம் பாறைகளாய் இருந்ததால் மாலைக்குள் சிறிதளவே வெட்ட முடிந்தது. பிறகு அவன் இறந்து போனான். அவன் ஆத்மா யமலோகம் சென்றது. இதற்குள் அவன் வெட்டியா இடத்தில் இருந்து சிறிது நீர் கசிய ஆரம்பித்து ஒரு கன்று குட்டி அதை நக்கி தன் தாகத்தை தீர்த்துக்கொண்டது. இதை கண்ட ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தில் பெரிய குளம் ஒன்றை தோண்டினார்கள். பிறகு பல கால் நடைகள் அங்கு வந்து நீர் அருந்தின. யமலோகத்தில் யமதர்மராஜன் சித்திரகுப்தனிடம் இவனின் பாப புண்ணிய கணக்குகளை கேட்டறிந்து பின் இவனிடம் நீ செய்த ஒரு சிறிய புண்ணிய காரியத்தால் அதாவது ஒரு கன்று நீர் அருந்தியதால் ஒரு நிமிட நேரம் உனக்கு சொர்க்க வாசமும் மற்ற பாவத்தின் படி நீண்ட நாட்கள் நரக வாசமும் செய்யவேண்டும் என்று கூறி முதலில் எதை அனுபவிக்கிறாய் என்று கேட்டார். சித்ரகுப்தனின் அறிவரைப்படி இவனும் முதலில் சொர்க்கம் செல்கிறேன் என்று சொன்னான். அவன் விருப்பப்படி முதலில் அவனை சொர்கலோகம் கொண்டு சென்றனர். ஒரு நிமிடத்திர்க்கு பிறகு சித்ரகுப்தன் யமனிடம் அவன் வெட்டிய குளத்தில் மேலும் சில பசுக்கள் நீர் அருந்தி உள்ளன எனவே அவனின் சொர்க்க வாசம் இன்னும் நீள்கிறது என்று சொல்லி யம தூதர்களை திரும்ம்ப அழைத்தான். பிறகு கேட்க வேண்டுமா. தினமும் பசுக்கள் அங்கு நீர் குடிக்க அவனின் புண்ணியங்கள் பெருக அவன் சொர்கத்தில் நித்திய வாசம் செய்ய ஆரம்பித்து விட்டான். எனவே பசுவிற்கு உணவு மற்றும் நீர் கொடுத்தால் மிகவும் புண்ணியம் பெறலாம்.

    எனவே என்னுடைய பணிவான வேண்டுகோள் தினமும் கோவிலுக்கு செல்லும்பொழுது அங்குள்ள கோசாலைகளில் உள்ள பசுவிர்க்கோ அல்லது தெருவில் இருக்கும் பசுவுக்கு அகத்தி கீரை அல்லது வாழைப்பழம் கொடுக்கவும். வீட்டு வாசலில் ஒரு சிறிய தொட்டி கட்டி அதில் நீர் நிரப்பி வைக்க முயற்ச்சி செய்யவும். இதனால் நாம் மற்றும் இன்றி நம் தலைமுறையும் பயன் பெரும்.

    Request the members to apologise for the mistakes in Tamil typing.

    With Best Regards

    S. Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment


    • #3
      Re: அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே.

      Sri Gowriputan Sir

      Your suggestion is very good; Every time it may not be possible to buy அகத்தி கீரை as it may not be available also; The devotees can give Prasada Banana Fruit to Cows, or some poor people sitting in front of the temple; we always give like that.

      Regards


      Padmanabhan.J

      Comment

      Working...
      X