Announcement

Collapse
No announcement yet.

சுமங்கலி பூஜை.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சுமங்கலி பூஜை.

    சுமங்கலி பூஜை.

    அன்னையின் திவ்ய நமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் 967 வது திருப்பெயராக ஸ்வாஷினி என்ற பெயரை அம்பிகைக்கு கொடுத்து சிறப்பிங்கின்றது.

    ஸ்வாஷினி என்றால் மங்களம் நிறைந்தவள் என்பது பொருள்.

    நல்ல இல்லரம் நடத்தும் பெண்களை நமது இந்துமதம் பராசக்தியின் அம்சமாகவே காணுகிறது. எனவே அத்தகைய பெண்களை வழிபடுவது அன்னை பராசக்தியின் வழிபாடாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல தலைமுறையை ஈன்று கொடுக்கின்ற பெண் உலகத்து நாயகி என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அவர்களை வழிபடுவதும் அன்னை பராசக்தியை வழிபடுவதும் ஒன்றுதான்.

    பொதுவாக சுமங்கலி பூஜை நவராத்திரி தினங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒரு வீட்டில் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்கள் அல்லது பெண்கள் இருந்தால் அவர்களுக்காக சுமங்கலி பூஜை செய்யலாம். மேலும் வீட்டில் அன்னை பராசக்தி அருள் என்றும் நிலைக்கவும் ஐஸ்வர்யம் பெருகவும் இந்த சுமங்கலி பூஜை செய்யலாம்.

    எப்படி செய்ய வேண்டும் சுமங்கலி பூஜை.?

    இல்லத்தை தூய்மைபடுத்தி கோலமிட்டு வீட்டில் உள்ள ஸ்வாமி படங்களுக்கு மாலைகள் சாற்றி தீபம் ஏற்றி, வாசலில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

    சுமங்கலி பூஜையானது ஒற்றைப்படையில் அதாவது 1,3,5,7,9 என்கிற வரிசையில் பெண்களை அழைக்கப்பட வேண்டும்.

    பூஜைக்காக அழைக்கப்படும் பெண்களை நல்ல முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும், பிறகு அவர்களை தாம்பாள தட்டில் நிற்க வைத்து பாத பூஜைசெய்ய வேண்டும். குங்கும சந்தனம் குடுக்கப்பட வேண்டும், பிறகு அவர்களை கோலமிட்ட மனைப்பலகையில் கிழக்கு முகமாக உட்கார வைக்க வேண்டும், அதன்பிறகு அவர்களுக்கு நலங்கு இட்டு பூ மாலை சாற்ற வேண்டும். பிறகு வாசனை மலாகளால் அன்னை பராசக்தியாக பாவித்து அர்ச்சிக்க வேண்டும், 5 முறை அர்க்யம் விட வேண்டும். அதன் பிறகு தூபம், தீபம் காட்டி பாயசம் ஒரு டம்லர் குடுத்து பருக சொல்ல வேண்டும், அதன் பிறகு மங்கள திரவ்வியங்களை { கண்ணாடி, சீப்பு, கண் மை, ரிப்பன், வளையல், சாந்து, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு புஷ்பம், புடவை, ரவிக்கை பிட் மற்றும் தட்சினையுடன் ஒரு தட்டில் வைத்து குடுத்து நமஸ்கரித்து தீபாராதனை காட்டி மீண்டும் நமஸ்கரிக்க வேண்டும் அவர்கள் கையில் மஞ்சள் அட்சதை குடுத்து ஆசீர்வதிக்க சொல்ல வேண்டும் பிறகு அவர்களுக்கு மங்கள ஆரத்தி காட்டி அறுசுவை உணவு கொடுத்து மீண்டும் அவர்களை நமஸ்கரித்து வழி அனுப்ப வேண்டும்.


    Click image for larger version

Name:	Sumangali Puja.jpg
Views:	1
Size:	13.5 KB
ID:	35279



    Source:Swarnagiri Vasan
Working...
X