Announcement

Collapse
No announcement yet.

நவராத்திரியில் கன்யா பூஜை.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நவராத்திரியில் கன்யா பூஜை.

    நவராத்திரியில் கன்யா பூஜை... {நவராத்திரி ஸ்பெஷல்}



    Click image for larger version

Name:	Kanya Pooja.jpg
Views:	1
Size:	9.0 KB
ID:	35276

    அன்னை பராசக்தியின் அருளை மிக விரைவாக பெற்றுத் தரும் செயல்களில் கன்யா {பெண்} குழந்தைகளை பாலா திரிபுர சுந்தரி அம்மனாக பாவித்து பூஜை செய்வதும், அந்தக் குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதும் ஒன்று.

    இரண்டு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகளையே கன்னிகையாக அமர்த்தி கன்யா பூஜை செய்யப்பட வேண்டும்.

    மேழும் இந்தக் குழந்தைகள் எப்படிப்பட்ட குழந்தைகளாவும் இருக்கலாம். ஒவ்வொரு வீட்டுக் குழந்தைக்கும் ஒவ்வொரு தனித் தனி சக்தியுண்டு என்பதால் வெவ்வேறான பலன்கள் ஏற்படும்.

    “ ப்ராஹ்மணீ ஸர்வ கார்யார்த்தே, ஜயார்த்தே ந்ருப வம்சஜாம்.
    லாபார்த்தே வைஸ்ய வம்சோத்தாம், ஸுதார்த்தே துரீய வம்சஜாம்.
    தாருணே சாந்த்ய ஜாதாநாம், பூஜயேத் விதிநா நர:. “

    பொருள்.

    வேதம் கற்று தூய்மையான வாழ்க்கை வாழும் அந்தணர் குலத்தில் பிறந்த குழந்தைகளை பூஜை செய்தால் அனைத்து கார்ய சித்திகளையும் அடையலாம்.

    நீதியுடன் மக்களை வழிநட்த்தும் அரசகுலத்தினரின் {அரசாங்க உயர் பதவி வஹிப்பவரின்} குழந்தைகளை பூஜை செய்வதால் வாழ்க்கையில் அனைவரிட்த்திலும் அனைத்திலும் வெற்றியை அடையலாம்.

    நேர்மையான வ்யாபாரம் செய்யும் வியாபாரிகளின் குழந்தைகளை பூஜை செய்வதால் மிகப்பெரிய லாபத்தையடைந்து செல்வந்தராக ஆகலாம்.

    நம்பிக்கையுடன் செயலாற்றும் வேலைக்காரர்களின் குழந்தைகளை பூஜை செய்வதால் மகன், மகள், பேரன், பேத்தி என குடும்ப வம்ச மிருத்தியை அடையலாம்.

    தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த குழந்தைகளை பூஜை செய்வதால் மிகப் கொடுமையான தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளை பெற்று நன்மையை அடையலாம் என்கிறது தர்ம சாஸ்த்திரம்.

    அனைவரும் அன்னையின் குழந்தைகளே! ஆகவே கன்யா பூஜை செய்ய சின்னஞ்சிறிய குழந்தைகள்தான் தேவையே தவிர பாகுபாடுகள் வேறுபாடுகள் பார்க்கத் தேவையில்லை. எந்த குழந்தையையும் பூஜை செய்யலாம்...

    எப்படி செய்ய வேண்டும் கன்யா பூஜை?

    இல்லத்தை தூய்மைபடுத்தி கோலமிட்டு வீட்டில் உள்ள ஸ்வாமி படங்களுக்கு மாலைகள் சாற்றி தீபம் ஏற்றி, வாசலில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

    கன்யா பூஜையானது ஒற்றைப்படையில் அதாவது 1,3,5,7,9 என்கிற வரிசையில் பெண்களை அழைக்கப்பட வேண்டும்.

    பூஜைக்காக அழைக்கப்படும் குழந்தைகளை நல்ல முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும், பிறகு அவர்களை தாம்பாள தட்டில் நிற்க வைத்து பாத பூஜைசெய்ய வேண்டும். குங்கும சந்தனம் குடுக்கப்பட வேண்டும், பிறகு அவர்களை கோலமிட்ட மனைப்பலகையில் கிழக்கு முகமாக உட்கார வைக்க வேண்டும்,

    அதன்பிறகு அவர்களுக்கு நலங்கு இட்டு பூ மாலை சாற்ற வேண்டும். பிறகு வாசனை மலாகளால் அன்னை பராசக்தியாக பாவித்து அர்ச்சிக்க வேண்டும், 5 முறை அர்க்யம் விட வேண்டும். அதன் பிறகு தூபம், தீபம் காட்டி பாயசம் ஒரு டம்லர் குடுத்து பருக சொல்ல வேண்டும், அதன் பிறகு மங்கள திரவ்வியங்களை { கண்ணாடி, சீப்பு, கண் மை, ரிப்பன், வளையல், சாந்து, மஞ்சள், குங்குமம், நோட்டு புஸ்தகம், பேனா, பெண்சில், பெண்சில் பாக்ஸ், போன்றவைகளுடன் வெற்றிலை பாக்கு புஷ்பம், பாவாடை, சட்டை மற்றும் தட்சினையுடன் ஒரு தட்டில் வைத்து குடுத்து நமஸ்கரித்து தீபாராதனை காட்டி மீண்டும் நமஸ்கரிக்க வேண்டும் அவர்கள் கையில் மஞ்சள் அட்சதை குடுத்து ஆசீர்வதிக்க சொல்ல வேண்டும் பிறகு அவர்களுக்கு மங்கள ஆரத்தி காட்டி அறுசுவை உணவு கொடுத்து மீண்டும் அவர்களை நமஸ்கரித்து வழி அனுப்ப வேண்டும்.



    Source:Swarnagiri Vasan
Working...
X