Announcement

Collapse
No announcement yet.

அர்ச்சனையின் பெருமை..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அர்ச்சனையின் பெருமை..

    அர்ச்சனையின் பெருமை..


    Click image for larger version

Name:	Archanai.jpg
Views:	1
Size:	40.2 KB
ID:	35238


    பாகவத்த்தில் பக்த சிரோமணி பிரஹ்தாரின் அருள் வாக்கு இது. பகவானை வழிபட்டு அருளைபெற பக்திதான் சிறந்தது. பக்தியே பக்தியை வளர்க்கும். இதற்கு ஒன்பது வகை சாதனங்கள் உள்ளன. அவை என்னவெனில் சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம். இவை முறையே ஆணடவனின் பெருமையைக் காதால் கேட்பது, பாடிப் பரவசமடைவது, தியானித்து {நினைத்து} இருப்பது, திருத்தொண்டு செய்வது, அர்ச்சனை {பூஜை} செய்வது, தண்டனிட்டு வணங்குவது, ஆண்டவனுக்கு அடியவன் நான் என்ற தீர்மானத்துடன் அவன் பணியே செய்து வருவது, நட்புணர்வோடு ஒன்றி வழிபடுவது, தன்னையே பகவானுக்கு அர்ப்பனிப்பது, இந்த ஒன்பது வகை சாதனங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணம் என்ற திட நம்பிக்கையோடு பக்தி புரிவதுதான் உத்தமமான உபாசனை ஆகும்.

    இவைகளில் அர்ச்சனக்குத் தனிச்சிறப்பு உண்டு. பகவானுடைய மூர்த்தியை நமக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொண்டு பக்தி பரவசத்துடன் அர்ச்சிக்க வேண்டும். ஆலயத்திலும், இல்லத்திலும், அர்ச்சா மூர்த்தியை பூஜிக்கலாம். அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தூப-தீப ஆராதனை என்று பலவகை உபசாரங்கள் {பணிவிடைகள்} அர்ச்சனைக்கு உட்பட்டவை.

    பகவானின் அர்ச்சாமூர்த்திகள்தான் சாஸ்த்திர விதிப்படி எட்டு மூர்த்திகளை முக்கியமாக கருதுகிறது. அவை சைலி {கற்சிலை வடிவம்} தாருமயீ {மரத்தால் பிரதிமை} லௌஹீ {உலோக விக்ரஹம்} லேப்யா {மெழுகினால் ஆன மூர்த்தி} லேக்யா { ஓவிய வடிவம்} ஸைகதி [மண் வடிவம்} மனோமயி { மானசீகமான ரூபம்} மணிமயீ { நவரத்தினங்களில் ஒன்றால் உருவாக்கிக் கொண்டத.

    இவை பக்தர்களின் சௌகர்யத்திற்காக அமைந்தவை. எந்த இடத்தில் எந்த மூர்த்தி கிடைக்கிறதோ அதை ஏற்று பூஜிக்க வேண்டும். முக்கியமாக நாம் பூஜிக்கும் மூர்த்தியை சர்வேஸ்வரனாகவே நம்பி மதித்து ஆராதிக்க வேண்டும். அதன் மூலப்பொருள் பற்றிய சிந்தனையே இருக்க கூடாது. நம் பக்திப் பரவசம் அர்ச்சனை வழிபாடு மூலம் அந்த உருவத்திற்கு தெய்வசான்னித்யம் ஏற்பட்டு விடுகிறது. இதைதான் ஆன்றோர்கள் “ அர்ச்சகஸ்ய பிரபாவேன சிலா பவதி சங்கர” அதாவது அர்ச்சனை செய்யும் பக்தனின் பக்தி மகிமையால் கற்சிலையும் சிவபிரானாகி விடுகிறது.} என்றார்கள்.

    திடமான ஆழ்ந்த பக்திதான் முதல் தகுதி. இதைதான் “தேவிபூத்வா தேவம் யஜேத்” {தெய்வ சொரூபமாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு தெயவ மூர்த்தியைப் பூஜிக்க வேண்டும்.} என்று சாஸ்த்திரம் கூறுகிறது. இதைதான் கண்ணபிரான் பகவத் கீதையில் உபதேசிக்கிறார். “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்தியுபஹ்ருதயம் அஸ்னாமி ப்ரயதாத்மன” { பக்த சிரத்தையுடன் எனக்கு சமர்ப்பிக்கும் எளிய பொருளையும் – அது இலையோ, மலரோ, கனியோ, நீரோ எதுவாக இருந்தாலும் தூய பக்திக்காணிக்கையாக மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார்



    Source:k.p panchangam

    http://bakthimayam.blogspot.com/2013/09/blog-post_6310.html
Working...
X