Announcement

Collapse
No announcement yet.

அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்&#

    அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும்.
    ------------------------------------------------------------------------
    நாம் அனைவ்ரும் கோயிலுக்கு செல்லும்போது,தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும்,அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள்,எதற்க்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும்,தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும்,தத்துவத்தையும் சொல்கிறேன்.

    தேங்காய்:
    தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடினமாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும்,இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும்,அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும்,அன்பாகவும் இருக்கும்.

    விபூதி(திருநீரு):

    சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம் ஆதலால் நான் என்ற அகம்பாவமும்,சுயநலம்,பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும்,சிந்தனையும் நமக்கு உணர்த்தவே,விபூதியை நெற்றியிலும்,உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

    வாழைப்பழம்:

    வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.ஆனால் முளைக்காது.ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது.ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

    அகல் விளக்கு:

    ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றோரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும்.அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது,அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

  • #2
    Re: அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங&#302

    வாழைப்பழம் அகல்விளக்கு அருமையான விளக்கம் சார்

    Comment


    • #3
      Re: அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங&

      Originally posted by soundararajan50@gmai View Post
      வாழைப்பழம் அகல்விளக்கு அருமையான விளக்கம் சார்
      ஆமாம் அருமையாக இருக்கு விளக்கங்கள்
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X