Announcement

Collapse
No announcement yet.

அனுமன் ஸ்லோகம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அனுமன் ஸ்லோகம்

    அனுமன் ஸ்லோகம்


    Click image for larger version

Name:	ramanavami10_2009.jpg
Views:	1
Size:	8.2 KB
ID:	35160



    புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
    அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

    அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது.

    இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும்.

    நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

    புத்திர் பலம் - அறிவில் வலிமை
    யசோ - புகழ்
    தைர்யம் - துணிவு
    நிர்பயத்வம் - பயமின்மை
    அரோகதா - நோயின்மை
    அஜாட்யம் - ஊக்கம்
    வாக் படுத்வம் - பேச்சு வலிமை
    ச - இவையெல்லாம்
    ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
    பவேத் - பிறக்கின்றன.

    அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!


    Source:http://www.penmai.com/forums/mantras/23432-hanuman-slokam-tamil.html#ixzz2fKTal8iC

    Picture: Nanganallur Sri.Anjaneyar

  • #2
    Re: அனுமன் ஸ்லோகம்

    புத்திர் பலம் - அறிவும் , வலிமையும் -


    இது அடியேன் கருத்து

    Comment


    • #3
      Re: அனுமன் ஸ்லோகம்

      Originally posted by sridharv1946 View Post
      புத்திர் பலம் - அறிவும் , வலிமையும் -


      இது அடியேன் கருத்து
      Sridharv Sir

      Appreciate your knowledge on this and other matters; Kindly share your views on these matters so that it will be useful and beneficial to all members,
      Thanks

      Regards

      Padmanabhan.J

      Comment


      • #4
        Re: அனுமன் ஸ்லோகம்



        ஶ்ரீ:
        முதற்கண் தலையீடு செய்வதற்கு மன்னிக்கவும்.

        "பலம்" என்ற சொல் தனித்து நின்று முழுமையான பொருளைத் தராது.
        பலம் என்றால் - எதில் பலம் என்ற கேள்வி எழும்!
        ஒரு நபரைக் குறித்து சொல்லப்படும்போது "பலவாந்" என்று குறிப்பிடலாம்.
        உதாஹரணமாக: ஶ்ரீராமயண ச்லோகம் "கோந்வஸ்மிந் ...... பலவாந் கஸ்ச்ச வீர்யவாந்"
        என்று உள்ளது.
        எனவே அங்கும் பலவாந் என விகுதியுடன் சேர்ந்தபிறகே பொருள் உண்டாகிறது.
        மேலும்,
        தேஹ பலம்,
        ஆன்ம பலம்
        மநோ பலம்
        புத்திர் பலம்
        படை பலம்
        ஆள் பலம்
        புஜ பலம்
        என ஏதாவது ஒன்றுடன் இணைந்தே பலம் என்ற சொல் பலன் தருகிறது என்பதை அறியலாம்.
        ஆக,
        இந்த ச்லோகத்தில் வரும் "புத்திர் பலம்" என்பது "அறிவுக் கூர்மை" என்றே பொருள் கொள்ளவேண்டும்
        என்பது அடியேனுடைய தாழ்மையான விண்ணப்பம்.
        தாஸன்,
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: அனுமன் ஸ்லோகம்

          तथास्तु


          - श्रीधर:

          Comment


          • #6
            Re: அனுமன் ஸ்லோகம்

            ஸ்ரீ பத்மநாபன் சார் ஸ்ரீ ஸ்ரீதர் சார் இருவருமே மாற்றுக் கருத்திற்கு மதிப்பளித்திருக்கும் பாங்கு ச்ந்தோஷத்தைத்தருகிறது.ந்மது பி எம் பி சி ஸ்வாமின் லாஜிக்குடன் தனது கருத்தைக் கூறியிருக்க்கும் விதம் மிக அருமை

            Comment

            Working...
            X