Announcement

Collapse
No announcement yet.

DEVI MAHAATMIYAM-தேவிமகாத்மியம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • DEVI MAHAATMIYAM-தேவிமகாத்மியம்

    இந்த கலியுகத்தில் தேவிமஹத்மியம் என்கிற துர்காசப்தசதி பாராயணம் நமக்கு முக்தியையும் நல்ல பலன்களையும்தரும்.
    அதைப்பற்றியும் சுலோகங்களையும்அர்த்தங்களையும்கீழேகொடுத்துருக்கிறேன்.

    படித்து பயன் அடைவீர்கள்என்று நம்புகிறேன்.
    வரதராஜன்.

    ஸ்ரீ துர்கா சப்தச்லோகி


    ஸ்ரீ சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதும், 700 மந்திரங்களாக கருதப்படுவதும் துர்கா ஸப்தசதீ என்று அழைக்கப்படுவதுமான தேவீ மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. இது உலக நன்மையை வேண்டி பாராயணத்திற்கும் சண்டீ ஹோமத்திற்கும் கையாளப்படுகின்றது. அவரவர்களுக்கு ஏற்ற முறைப்படி ஸ்ரீ துர்கா ஸப்த சதீயை பாராயணம் செய்தும் அதனால் ஹோமத்தை செய்வதும் அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடைவர் என்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர்.

    துர்காசப்தசதியின் ஸ்லோகங்களை ஒரு நாளில்படிப்பதுமிகவும் விசேஷம்.
    முடியாவிட்டால்சப்தாஹமாக,அதாவது.ஏழுநாட்களில்படிக்கலாம்.
    முதல் நாள்-அத்தியாயம் 1
    நாள்-2 - - " " 2&3
    நாள்-3 " " 4
    நாள்-4 " " 5,6,7&8
    நாள்-5 " " 9&10
    நாள்-6 " " 11
    நாள்-7 " " 12&13


    தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதபப்டும் ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இணையாக கருதப்படுகின்றது. அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.

    இந்த ஸப்தச்லோகீ பாராயணத்தாலேயே ஸப்த சதீ பாராயண பலத்தை உறுதியாகப் பெறக்கூடும். கலியில் "கீதை", "விஷ்ணு சகஸ்ரநாமம்", "தேவி மஹாத்மியம்", "லலிதா ஸகஸ்ரநாமம்" இந்நான்கும் பலன் தரும் ஸ்தோத்திரங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தேவி மஹாத்மிய பலச்ருதியில் இதைப் படித்தாலும் கேட்பதாலும் கன்னிகை கணவனை அடைவாள் இந்த மஹாத்மியத்தை கேட்டு ஸ்திரீ ஸ”மங்கலித் தன்மையைப் பெறுவாள். மனிதன் இஹத்தில் எல்லாவற்றையும் அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. தேவியின் மஹ’மையை அறிந்து அவளிடம் பக்தி செய்து இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெறட்டும் என்று எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாய அருள் புரியட்டும்.

    ॐ अस्य श्रीदुर्गासप्तश्लोकीस्तोत्रमहामन्त्रस्य
    नारायण ऋषिः । अनुष्टुपादीनि छन्दांसि ।
    श्रीमहाकालीमहालक्ष्मीमहासरस्वत्यो देवताः ।
    श्री जगदम्बाप्रीत्यर्थ पाठे विनियोगः ॥

    Om Asya Shrii-Durgaa-Sapta-Shlokii-Stotra-Mahaa-Mantrasya
    Naaraayanna Rssih | Anussttupa-[A]adiini Chanda-Amsi |
    Shrii-Mahaakaalii-Mahaalakssmii-Mahaasarasvatyo Devataah |
    Shrii Jagad-Ambaa-Priity[i]-Artha Paatthe Viniyogah ||

    Meaning:
    1: Om, this Sri Durga Saptashloki Stotra Maha Mantra ...
    2: ... which is composed by Sri Narayana Rishi, is in Anusthup and other Metres.
    3: This Maha Mantra is Dedicated to the Goddesses Sri Mahakali, Sri Mahalakshmi and Sri Mahasaraswati,
    4: This Maha Mantra is Meant to be Recited to Please the Jagadamba (Mother of the Universe).

    ज्ञानिनामपि चेतांसि देवि भगवती हि सा ।
    बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति ॥१॥
    Jnyaaninaam-Api Ceta-Amsi Devi Bhagavatii Hi Saa |
    Balaad-Aakrssya Mohaaya Mahaa-Maayaa Praya-[I]cchati ||1||

    Meaning:
    1.1: (Salutations to You, O Jagadamba) O Bhagavati Devi (Divine Goddess), the Wisdom of the Jnanis (Spiritually-Evolved or Wise) are Indeed reflection of a Part of YourConsciousness,
    1.2: And O Devi Mahamaya (the Great Enchantress), by Your Will, You can also Forcibly Attract their Minds towards Delusion (such is Your Power and Divine Play).

    ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா

    பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி (1)

    ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜ“வன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள்.

    இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

    दुर्गे स्मृता हरसि भीतिमशेषजन्तोः
    स्वस्थैः स्मृता मतिमतीव शुभां ददासि ।
    दारिद्रयदुःखभयहारिणि का त्वदन्या
    सर्वोपकारकरणाय सदार्द चित्ता ॥२॥

    Durge Smrtaa Harasi Bhiitim-Ashessa-Jantoh
    Svasthaih Smrtaa Matim-Atiiva Shubhaam Dadaasi |
    Daaridraya-Duhkha-Bhaya-Haarinni Kaa Tvad-Anyaa
    Sarvo[a-U]pakaara-Karannaaya Sada-[A]arda Cittaa ||2||

    Meaning:
    2.1: (Salutations to You, O Jagadamba) O Devi Durga, whoever Remembers You with Devotion, You Remove the very Root of their Fear.
    2.2: Whoever Meditates on You as being present within their own Hearts, with Extreme Devotion, You Bestow (i.e. Reveal to them) Your Auspicious Nature (which is beyond description),
    2.3: O Mother, Apart from You, Who Else can Destroy Poverty, Sorrow and Fear from our Lives? (which appears to be a never-ending cycle),
    2.4: Your Heart is Always Full of Compassion to Render All sorts of Help to Your Devotees.

    துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

    ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

    தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

    ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா (2)

    ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.

    சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)

    இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.

    सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके ।
    शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तु ते ॥३॥

    Sarva-Manggala-Maangalye Shive Sarvaartha-Saadhike |
    Sharannye Try[(i)]-Ambake Gauri Naaraayanni Namostu Te ||3||

    Meaning:
    3.1: (Salutations to You, O Jagadamba) You are the Auspiciousness in All the Auspicious,Auspiciousness Yourself and Complete with All the Auspicious Attributes,
    3.2: You are the Giver of Refuge, You have Three Eyes (spanning the Past, Present and Future; and containing within them the Sun, Moon and the Fire), You are Gauri (the Shining One); Salutations to You O Narayani.

    ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே

    சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே (3)

    எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

    शरणागतदीनार्तपरित्राणपरायणे ।
    सर्वस्यार्तिहरे देवि नारायणि नमोऽस्तु ते ॥४॥

    Sharannaagata-Diina-[A]arta-Paritraanna-Paraayanne |
    Sarvasy-Aarti-Hare Devi Naaraayanni Namostu Te ||4||

    Meaning:
    4.1: (Salutations to You, O Jagadamba) You are Intent upon Rescuing the Distressed and the Oppressed who take Your Refuge whole-heartedly, ...
    4.2: ... and Remove All their Sufferings; Salutations to You O Narayani.

    சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே

    ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே (4)

    தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

    மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாகஉண்டாகும்.

    सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते ।
    भयेभ्यस्त्राहि नो देवि दुर्गे देवी नमोऽस्तु ते ॥५॥

    Sarva-Svaruupe Sarveshe Sarva-Shakti-Samanvite |
    Bhayebhyas-Traahi No Devi Durge Devii Namostu Te ||5||

    Meaning:
    5.1: (Salutations to You, O Jagadamba) You Exist in All Forms of All Gods, and You are thePossessor of All Powers,
    5.2: O Devi, Please Protect us from all Fears; Salutations to You, O Durga Devi.

    ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமந்விதே

    பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5)

    அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.

    रोगानशेषानपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलानभीष्टान् ।
    त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिता ह्याश्रयतां प्रयान्ति ॥६॥
    Rogaan-Ashessaan-Apahamsi Tussttaa Russttaa Tu Kaamaan Sakalaan-Abhiissttaan |
    Tvaam-Aashritaanaam Na Vipan-Naraannaam Tvaam-Aashritaa Hy[i]-Aashraya-Taam Prayaanti ||6||

    Meaning:
    6.1: (Salutations to You, O Jagadamba) When You are Pleased with our Devotion, YouDestroy to the very Root our worldly Diseases (our inner demons); but if You are Displeasedwith us (for any reason), You will destroy All our Aspirations and Wishes (i.e. they will remain ever unfulfilled),
    6.2: By Your Refuge, Men cannot Go Astray and no Misfortunes can finally overcome them;Your Refuge Indeed is my final Refuge when I Depart from this World.

    ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா

    ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்

    த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்

    த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி (6)

    உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

    இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.

    सर्वाबाधाप्रशमनं त्रैलोक्यस्याखिलेश्वरि ।
    एवमेव त्वया कार्यमस्मद्वैरि विनाशनम् ॥७॥

    Sarva-[A]abaadhaa-Prashamanam Trai-Lokyasya-Akhile[a-I]shvari |
    Evam-Eva Tvayaa Kaaryam-Asmad-Vairi Vinaashanam ||7||

    Meaning:
    7.1: (Salutations to You, O Jagadamba) O Goddess of All the Three Worlds, when You are Pleased, You Mitigate All our Distresses.
    7.2: Thus, in this Manner, Your Grace Works to Destroy our Inner Enemies.

    ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரி

    ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம்

    எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.

    இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.

    இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த "ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்" பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.

    பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
    Last edited by R.Varadarajan; 19-08-13, 07:10.
Working...
X